தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

15 Jun 2026, 10:35 pm
திருச்சி விரைவு செய்திகள்

முதலீட்டாளர்களிடம் ரூ.5 கோடி மோசடி; 4 பேர் கைது

விருதுநகர், ஜூன் 15- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தள வாய்புரத்தில் செயல்பட்டு வரும் செல்வக்குமரன் டெக்ஸ் டைல்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களான செட்டியார் பட்டியைச் சேர்ந்த அய்யாச்சாமி (66), கனகராஜ் (53), தளவாய்புரத்தைச் சேர்ந்த அம்மையப்பன் (43) மற்றும் மாணிக்கம் (52) ஆகியோர், “செல்வம் சிறுசேமிப்புத் திட்டக்குழு” என்ற பெயரில் சிட்பண்ட் நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டியுடன் முதலீட்டு தொகையை இரட்டிப்பாக வழங்கு வதாக அறிவிக்கப்பட்டதை நம்பி, தளவாய்புரம், முக வூர், இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். முதலீட்டாளர்களிடம் பெறப்பட்ட தொகைகள் செல்வக்குமரன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் விரி வாக்கப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படு கிறது. ஆனால், முதலீட்டாளர்களுக்கு முதிர்வுத் தொகை யையும் வட்டியையும் வழங்காமல் நிர்வாகத்தினர் கால தாமதம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் விருது நகர் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நாக லெட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, அய்யாச்சாமி, கனகராஜ், அம்மையப்பன் மற்றும் மாணிக்கம் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக் கப்பட்டனர்.

டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு

சிவகங்கை, ஜூன் 15- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட் கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருக்களாபட்டி பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையால் பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக வும், சமூக அமைதிக்கு பாதிப்பு உருவாகி வருவதாக வும் தெரிவித்து வாலிபர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகம், உரிய ஆய்வு மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சார்பு ஆய்வாளரை தாக்கிய இருவர் கைது

வெம்பக்கோட்டை, ஜூன் 15- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே யுள்ளது விளாமரத்துப்பட்டி. இங்கு கடந்த ஜூன் 13 இல் கோவில் திருவிழாவில் ஆபாசப் பாடல் ஒலிபரப்பப்பட் டது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தட்டிக் கேட்டார். அப்போது அந்த பெண்ணை அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணன் உட்பட சிலர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சார்பு ஆய்வாளர் முரு கேஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி னார். அப்போது அழகுமுத்து, முனீஸ்வரன் உள்ளிட்டோர் அசிங்கமாக பேசி சார்பு ஆய்வாளரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டப் பெண் வெம்பக் காட்டை காவல்நிலையதில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சன்னாசி மகன் அழகு முத்து, கருப்பசாமி மகன் முனீஸ்வரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமைறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிகிச்சையின்போது உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு மனு

சிவகங்கை, ஜூன் 15- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரி ழந்த பெண்ணின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக உயிரிழந்த பஞ்சவர்ணத்தின் மகள் ஜோதிலெட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஜீவா நகரைச் சேர்ந்த மகேந்திரனின் மனைவி பஞ்சவர்ணம் (46), வயிற்று வலி காரணமாக கடந்த ஜூன் 13-ஆம் தேதி காளையார் கோவிலில் உள்ள ஹேமலதா தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர் அருண் தண்டபாணி பரிசோதனை மேற்கொண்டு, நுரையீரலில் கொழுப்புக் கட்டி இருப்ப தாக தெரிவித்ததுடன், 3 நாட்கள் உள்நோயாளியாக அனு மதித்து சிகிச்சை அளித்தால் பிரச்சனையை சரிசெய்ய முடி யும் என கூறியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பஞ்சவர்ணம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு இரண்டு ஊசிகள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டதாக வும், அந்த மருந்துகளின் ஒவ்வாமை காரணமாக மறு நாள் காலை 11.15 மணியளவில் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என குடும்பத்தினர் மாவட்ட நிர்வா கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

புகையிலை: 3 பேர் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர், ஜூன் 15- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு காவல் நிலைய சார்பு ஆய்வா ளர் வெற்றிமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேலப் பாளையம் பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் மற்றும் அலமேலு ஆகி யோர் தங்களது வீட்டருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் வத்திராயிருப்பைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரிடமிருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து முனியம்மாள் மற்றும் அலமேலு ஆகிய இருவரை யும் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும், புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஐஸ்வர்யா மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைக்குடி நகரில் சாலையை மேம்படுத்திடுக! ஆட்டோ தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

சிவகங்கை, ஜூன் 15- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி மாநகர் ஆட்டோ தொழிலா ளர் சங்கத்தின் சிறப்பு பேர வைக் கூட்டம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற் றது. கூட்டத்தில் சிஐடியு மாவ ட்டத் தலைவர் உமாநாத், மாவட்ட துணைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டப் பொதுச் செயலா ளர் விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது, காரைக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலை களை மேம்படுத்த மாநக ராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது. மேலும், காரைக்குடியில் செயல் பட்டு வரும் போக்குவரத்துத் துறை அலுவலகத்தை முழு மையான வட்டாரப் போக்கு வரத்து அலுவலகமாக (ஆர்டிஓ) தரம் உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக் கப்பட்டது. அதேபோல், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எரிபொருள் விலை உய ர்வை கருத்தில் கொண்டு ஆட்டோ கட்டணங்களை மறுநிர்ணயம் செய்ய வேண் டும் என்றும் வலியுறுத்தப் பட்டது. கூட்டத்தில் புதிய நிர்வா கிகள் தேர்வு செய்யப்பட்ட னர். அதன்படி, காரைக்குடி மாநகர் தலைவராக ஜி. கணேசன், செயலாளராக முருகேசன், பொருளாளராக வெங்கட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலக்குமிழங்குளம் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

விருதுநகர், ஜூன் 15- விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இசலி ஊராட்சியில் உள்ள மேலக்குமிழங்குளம் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை உட னடியாக செய்து தர வேண் டும் என அப்பகுதி பொதுமக் கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட் டுள்ளதாவது: மேலக்குமிழங்குளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசி த்து வருகின்றனர். ஆனால், கிராமத்தில் சாலை, குடிநீர் வசதி, நூலகம், சமுதாயக் கூடம் மற்றும் மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கள் போதுமான அளவில் இல்லை. எனவே, பொதுமக்களின் நீண்டநாள் தேவைகளை கருத்தில் கொண்டு மேற் கண்ட அடிப்படை வசதி களை உடனடியாக ஏற் படுத்தித் தர மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கிராமத்திற்கு நேரடி பேருந்து வசதி இல்லா ததால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் சிர மத்தை சந்தித்து வருகின்ற னர். இதனால் அருப்புக் கோட்டை யிலிருந்து துலுக் கன்குளம் வரை இயக்கப் படும் அரசுப் பேருந்தை மேலக்குமிழங்குளம் வரை நீட்டித்து இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், கிராமத்தின் வெளிப்பகுதியில் அடை யாளம் காணும் வகையில் பெயர்ப் பலகை அமைக்க வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

மடப்புரத்தில் தனியார் மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி சாலை மறியல்

15 நாட்களில் நடவடிக்கை என போலீஸ் உறுதி சிவகங்கை, ஜூன் 15- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மனமகிழ் மன்றத்தை அகற்றக் கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் மற்றும் பள்ளி அருகே செயல் பட்டு வரும் இந்த மனமகிழ் மன்றத்தால் மாண வர்கள், பெண்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், பலமுறை மனுக்கள் அளித் தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் லோகநாதன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, 15 நாட்க ளுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்புவனம் ஒன்றியச் செயலா ளர் ஈஸ்வரன் கூறுகையில், “பெண்கள், மாணவ-மாணவிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதற்காக கட்சி தொட ர்ந்து போராடி வருகிறது. மேலும் மக்களுடன் இணைந்து தொடர்ந்து போராடும்” என்றார்.

உள்ளூர் வரத்து குறைவால் தக்காளி விலை கடும் உயர்வு

ஒட்டன்சத்திரம், ஜூன் 15- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க் கெட்டில் உள்ளூர் வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி வணிக மையங்களில் ஒன்றாக விளங்கும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளாவிற்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். ஆனால், சமீபகாலமாக உள்ளூர் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளதால், ஆந்திர மாநிலத்திலி ருந்து நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் பெட்டிகள் தக்காளி கொண்டு வரப்படுகிறது. ஒரு பெட்டி ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனையாகும் நிலையில், சில்லறை சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வரத்து குறைந்துள்ளதால், திருச்சி, தூத்துக் குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குறைந்த அளவிலேயே அனுப்பி வைக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் உற்பத்தி முற்றிலும் குறைந்தி ருப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றும் அவர்கள் கூறினர். இதேபோல், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரத்து செய்யப்படும் முருங்கைக் காய்களின் விலையும் உயர்ந்துள்ளது. மர முருங்கைக்காய் கிலோ ரூ.60, செடி முருங்கைக்காய் ரூ.78, கரும்பு முருங்கைக்காய் ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உருண்டை மிளகாய் ஒரு பை ரூ.550, பூச ணிக்காய் கிலோ ரூ.13, பாகற்காய் ரூ.35, அவரைக்காய் ரூ.70, பழைய வெங்காயம் ரூ.25 முதல் ரூ.40, நாட்டுத் தக்காளி ரூ.65 முதல் ரூ.70 வரை விற்பனையாகிறது.

காலமானார்

தேனி, ஜூன் 15- போடி தாலுகா பூதிப்புரத்தைச் சேர்ந்த செல்லாண்டி மனைவி சி.சாந்தி (60) ஞாயிறன்று மாலை காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போடி தாலுகா செயலாளர் சி.முனீஸ்வரனின் தாயார் ஆவார். அன்னா ரது இறுதி நிகழ்ச்சி பூதிப்புரத்தில் திங்களன்று நடை பெற்றது. கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன், மாவட்டச் செயலாளர் எம்.இராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், ஜி.எம்.நாராஜன், கே.எஸ்.ஆறுமுகம், இ.தர்மர், சு.வெண்மணி, கே.ஆர்.லெனின், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணா மலை, விதொச மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கர சுப்பு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே. பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

மதுரை ஆட்சியரக குறைதீர் கூட்டத்தில் ஆன்லைன் மனு பதிவு முறை தொடக்கம்

மதுரை, ஜூன் 15- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந் தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மனுக்களைப் பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு வழங்கும் நடைமுறை முதன்முறையாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக் களின் விபரங்கள் கையால் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சி யர் ப. ஆகாஷ் உத்தரவின்படி, ஜூன் 15 முதல் மனுக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கணினி அடையாள எண் கொண்ட ஒப்புகைச் சீட்டு வழங்கும் நடைமுறை அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மனுதாரர்கள் வழங்கும் மனுக்களின் விப ரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர், தனித்துவமான பதிவு எண்ணுடன் கூடிய ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகிறது. அந்த ஒப்புகைச் சீட்டுடன் மனு தாரர்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தங்களது மனுக்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை முதன்முறையாக செயல்படுத்தப் பட்டுள்ளதால், மனுக்களை பதிவு செய்வதற்காக பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட் டது. இதையடுத்து, மனுக்களை விரைவாக பதிவேற்றம் செய்ய கூடுதல் கணினிகள் மற்றும் பணியாளர்களை நிய மிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் தெரி விக்கையில், ஆன்லைன் முறையின் மூலம் ஒவ்வொரு துறைக்கும் உரிய மனுக்கள் உடனுக்குடன் மின்னணு முறையில் அனுப்பப்படும். இதனால் அலுவல் பணிச் சுமை குறைவதுடன், மனுக்களின் நிலை குறித்த தக வல்களையும் மனுதாரர்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்தனர்.

தவறவிட்ட ரூ.1 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த பெண்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 15- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைமணி (40), அஞ்ச லகத்தில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வந்தார். தேரடி பகுதியில் உள்ள இந்தியன் வங்கி அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் பணத்தை தவறவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த தேரடி தெருவைச் சேர்ந்த லட்சுமி (44) என்ற பெண், கீழே கிடந்த பணத்தை கண்டெடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த காவல் சார்பு ஆய்வாளர் முருகராஜ், பணத்தைத் தேடி வந்த பிச்சைமணியிடம் உரிய விசாரணை நடத்தி, தொகையை உறுதி செய்த பின்னர் பாதுகாப்பாக அவரிடம் ஒப்படைத்தார். பணத்தை தன்வசம் வைத்துக் கொள்ளாமல் நேர்மையுடன் ஒப்ப டைத்த லட்சுமியின் செயலை பொதுமக்கள் பாராட்டினர். தினக்கூலி அடிப்படையில் உணவகத்தில் பணியாற்றி வரும் அவர் காட்டிய நேர்மை பலராலும் வரவேற்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து அறிந்த கார்த்திக், லட்சுமியின் இல்லத் திற்கே நேரில் சென்று அவரை பாராட்டினார். அவரது நேர்மையான செயல் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருப்பதாக கூறிய அவர், சால்வை அணிவித்து மரியாதை செய்தார். மேலும், குடும்பத்திற்கு தேவையான அரசு உதவிகள் எதுவாக இருந்தாலும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மகள் உயிரிழந்த துக்கம்: விஷம் குடித்த தந்தை பலி

தேனி, ஜூன் 15- கம்பம் தாத்தப்பன்குளம் பகுதி யைச் சேர்ந்த கட்டுமானத் தொழி லாளி லோகராஜா (42). இவரது மகள் அஞ்சனா (16), கடந்த மே 20 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மகளின் மரணத்தால் கடும் மன வேதனையில் இருந்த லோகராஜா வும், அவரது மனைவி அமுதாவும் கடந்த 13-ஆம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலை யில் இருந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச் சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த லோகராஜா ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். அமுதா தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தேனி, ஜூன் 15- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரு கிற ஜூன் 19 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வைத்தி நாதன் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்ட ரங்கில் வருகிற 19 ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில் நடை பெறவுள்ளது. முகாமில் தேனி மாவட்டத் திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறு வனங்கள் கலந்து கொண்டு பல்வேறு பணி யிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளன. இம்முகாமில் 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, பட்டயப் படிப்பு என பல்வேறு கல்வித் தகுதியில் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல் களுடன் கலந்து கொண்டு தனியார் துறை களில் வேலைவாய்ப்பு பெறலாம். மேலும் விபரங்களுக்கு 98948 89794 என்ற எண் ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

பாலியல் வன்கொடுமை, மிரட்டல் குற்றச்சாட்டு பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் இளம்பெண் மனு

மதுரை, ஜூன் 15- மதுரை மாநகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக் களை பயன்படுத்தி தொடர்ந்து மிரட்டி வரு வதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்துள்ளார். சபர்நிஷா என்ற இளம்பெண் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: கடந்த 2023-ஆம் ஆண்டு காளவாசல் பகுதியில் உள்ள பி.எம். டவர்ஸ் என்ற தங்கும் விடுதியில் வரவேற்பாளராக பணி யில் சேர்ந்ததாகவும், அதன் உரிமையாளர் லிங்கதுரை (45) திருமணம் செய்து கொள் வதாக கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக வும் தெரிவித்தார். 2024-ஆம் ஆண்டு ஒருநாள் வசூல் பணத்தை வீட்டிற்கு கொண்டு வருமாறு கூறியதையடுத்து, அவரது வீட்டிற்கு சென்ற போது கொடுக்கப்பட்ட தண்ணீரை குடித்த பிறகு மயக்கமடைந்ததாகவும், அந்த நிலை யில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக் கள் எடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். அதன்பின்னர், அந்த பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதுடன், அடியாட்கள் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் தெரி வித்தார். மேலும், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி மதுரை பைபாஸ் சாலையில் சென்றபோது, தன்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று நான்கு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாகவும் கூறினார். இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மே 16-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், குற்றம் சாட்டப் பட்டவர்கள்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தனக்கும் தனது உறவினர்களுக்கும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாது காப்பு வழங்க வேண்டும் என்றும், தன்னை தொடர்புடைய வீடியோ பதிவுகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சில காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், வழக்கை திரும்பப் பெறுமாறு அழுத்தம் கொடுக்கப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு திங்கள்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.