திருச்சி விரைவு செய்திகள்
24 May 2026, 10:57 pm

ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் குடும்ப விழா

அருப்புக்கோட்டை, மே 24- அருப்புக்கோட்டையில் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் குடும்ப விழா நடைபெற்றது. கிளை யின் தலைவர் எஸ்.காத்தமுத்து தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் எஸ்.தமிழ் செல்வராஜ் வரவேற்றார். துவக்கி வைத்து மண்டல செயலாளர் ஆர்.போஸ் பேசினார். சிஐடியு மண்டல பொதுச்செயலாளர் எம். வெள்ளைத்துரை, நல அமைப்பின் மண்டல தலைவர் ஜி.வேலுச்சாமி, மத்திய சங்க செயலாளர் காத்தப்பன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். சம்மேளனத் தலைவர் வி.பிச்சை சிறப்புரையாற்றினார். பொருளாளர் எம்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மானாமதுரை அரசு மகளிர் பள்ளி 99.68 சதவீதம் தேர்ச்சி

சிவகங்கை, மே 24- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 320 மாணவிகளில் 319 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர். அறிவியல் பாடத்தில் 4 மாணவிகள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். ஷாலினி, மஞ்சுளா ஆகியோர் 490 மதிப்பெண்களை பெற்று பள்ளியளவில் முதலிடம் பெற்றுள்ளனர். ஜீவிகா 486 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், நாக பிரியா, ஏனோ பெல்சியா ஆகியோர் 485 பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர். சாதனை மாணவிகளை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

கஞ்சா விற்றவர் கைது

திருவில்லிபுத்தூர், மே 24- திருவில்லிபுத்தூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்தி ருந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மங்காபுரம் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி அருகே, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகராஜ் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அய்யம்பட்டி தெருவைச் சேர்ந்த சோலை ராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தில் அந்த வழியாக வந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தபோது, அவரிடமிருந்து 40 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும், கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சோலை ராஜை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பொதுமக்கள் சாலை மறியல்

சின்னாளப்பட்டி, மே 24- வத்தலக்குண்டு–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள கே.சிங்காரக்கோட்டை கிராமத்திற்கு 16 நாட்க ளாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்டிவீரன்பட்டி அருகே அமைந்துள்ள சித்தரேவு முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 15 உக்கடை கிராமங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான கே. சிங்காரக்கோட்டை கிராமத்திற்கு கடந்த 16 நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படு கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்த பொதுமக்கள், ஞாயிறன்று தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் திண்டுக்கல்லில் இருந்து தேனி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வாகனங்க ளும், மறுமார்க்கமாக வத்தலக்குண்டு வழியாக திண்டுக்கல், திருச்சி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நக ரங்களுக்கு சென்ற வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டிவீரன்பட்டி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மூடுவதாக அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து செயல்படுவதால் மக்கள் அதிருப்தி

திருவில்லிபுத்தூர், மே 24- தமிழகத்தில் 717 டாஸ் மாக் கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்த நிலை யில், இராஜபாளையம் தாலு காவில் அறிவிக்கப்பட்ட கடைகளில் பெரும்பாலா னவை இன்னும் செயல்பட்டு வருவது பொதுமக்கள் மற் றும் அரசியல் கட்சிகளி டையே அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது. இராஜபாளையம் நகரில் பழைய பேருந்து நிலையம் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள், ரயில்வே நிலை யம் அருகே ஒரு கடை, அம்ப லப்புலி பஜார் குருசாமி கோவில் அருகே ஒரு கடை மற்றும் சேத்தூர் பேருந்து நிலையம் அருகே ஒரு கடை என மொத்தம் 5 கடைகள் மூடப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், இதில் அம்ப லப்புலி பஜாரில் செயல்பட்டு வந்த ஒரு டாஸ்மாக் கடை மட்டும் மூடப்பட்டுள்ளதாக வும், மீதமுள்ள நான்கு கடை களும் தொடர்ந்து இயங்கி வருவதாகவும் கூறப்படு கிறது. முதலமைச்சரின் அறி விப்பை செயல்படுத்துவதில் டாஸ்மாக் நிர்வாகம் கால தாமதம் காட்டுவதன் கார ணம் என்ன என்பது தெரிய வில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இளைஞர்கள் மற் றும் குடும்பங்களின் வாழ்க் கையை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தர விட்டும் அவை தொடர்ந்து செயல்படுவது குறித்து பல்வேறு தரப்பினரும் அதி ருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக சேத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்க ளில் ஈடுபட்டு வந்தன. முத லமைச்சரின் அறிவிப்பால் கடை மூடப்படும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலை யில், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏமாற் றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலை தொடரு மானால், பொதுமக்களுடன் இணைந்து பெரிய அள விலான போராட்டங்களை நடத்த வேண்டிய சூழல் உரு வாகலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்ச ரித்துள்ளது. அறிவிக்கப் பட்ட பட்டியலில் உள்ள டாஸ்மாக் கடைகளை உட னடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை யாக உள்ளது.

சாத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவர் பலி

சாத்தூர், மே 24- சாத்தூர் அருகே மின்சாரம் தாக்கிய தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். சாத்தூர் அருகே உள்ள செட்டுடை யான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிர மணி (47). இவருடைய மூத்த மகன் கவின் பாண்டியன் (14). சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், செட்டுடையான்பட்டி கிராம மக்கள் சார்பாக கபாடி போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த னர். அப்போது அப்பகுதியில் திடீரென கன மழை பெய்தது. மழை நின்றவுடன் கவின் பாண்டியன் மைதானம் அருகே உள்ள மின் கம்பத்தில் கயிறு கட்டிக் கொண்டிந்துள் ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கவின் பாண்டியன் மீது மின்சாரம் தாக்கி யதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, ஊர் பொதுமக்கள் அவரை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கவின் பாண்டி யன் உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த மண்டல இயக்குநர் ஆய்வு

திருவில்லிபுத்தூர், மே 24- திருவில்லிபுத்தூர் நக ராட்சியில் குடிநீர் விநியோ கத்தை முறைபடுத்த நக ராட்சி நிர்வாகத்தின் திரு நெல்வேலி மண்டல இயக்கு நர் மகேஸ்வரி நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக சட்டசபைத் தேர்த லுக்கு பின், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமி ழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதைத் தொட ர்ந்து, குடிநீர், சுகாதாரம், மின் சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப் படையில் இந்த ஆய்வு நடை பெற்றது. திருவில்லிபுத்தூர் நக ராட்சிக்கு வந்த மண்டல இயக்குநர் மகேஸ்வரி, நக ராட்சி ஆணையாளர், உதவி பொறியாளர் மற்றும் குடிநீர் விநியோக மேற்பார்வை யாளர் ஆகியோருடன் செண் பகத்தோப்பு பேயாற்றுப் படுகை பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு உள்ள குடிநீர் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் தற்போது தோண்டப் பட்டு வரும் பெரிய கிணறு களின் நிலையை நேரில் பார்வையிட்டார். பின்னர் நகராட்சி அலு வலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுடன் கலந்துரை யாடிய அவர், “குடிநீர் விநி யோகம் தற்போது சீரற்ற முறையில் நடைபெற்று வரு கிறது. 18 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படு வது ஏற்றுக் கொள்ள முடி யாதது. மீண்டும் ஒரு வாரத் தில் ஆய்வுக்கு வருகிறேன். அதற்குள் குடிநீர் விநியோக இடைவெளியை குறைக்கும் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். எந்த காரணமும் கூறக்கூடாது. இல்லையெனில் குடிநீர் விநியோகத்தை முறைப் படுத்த தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வில் மண்டல பொறியாளர் சனல் குமார், நகராட்சி ஆணையாளர் குமார், உதவி பொறியாளர் திவாகர், குடிநீர் விநியோக மேற்பார்வையாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மண்டல இயக்குநரின் வாய்மொழி உத்தரவு, அவர் மீண்டும் ஆய்வுக்கு வரும் முன் நடைமுறைப்படுத் தப்படுமா என்பது நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு களின் மீது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த தமிழக முதல்வர் தலையிட வேண்டும்

சிறு விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை இராஜபாளையம், மே 24- சத்திரப்பட்டி பகுதியில் சிறு விசைத்தறி மருத்துவத் துணி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே யான புதிய கூலி உயர்வு ஒப்பந்தத்தை உட னடியாக ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும் என சிறு விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர். இராஜபாளையம் வட்டத்திற்கு உட் பட்ட சத்திரப்பட்டியில் சுமார் 7 ஆயிரம் விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வரு கின்றன. இவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மேலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில், சிறு விசைத்தறி மருத்து வத் துணி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழி லாளர்களுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் நிறை வடைந்தது. புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் மே 1 முதல் அமலுக்கு வர வேண்டிய நிலை யில், மூன்று வாரங்கள் கடந்தும் இதுவரை ஒப்பந்தம் எட்டப்படவில்லை என தெரி விக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துணி உற்பத்தியாளர்கள் காலதாமதம் செய்து வருவதால் தொழிலா ளர்கள் மற்றும் சிறு விசைத்தறி உரிமையா ளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வரு கிறது. பலமுறை பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்யப்பட்டும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், தமிழக முதலமைச்சர் உட னடியாக தலையிட்டு கூலி உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தி ரப்பட்டி வட்டார சிறு விசைத்தறி மருத்துவத் துணி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத் தலைவர் குருசாமி கூறுகையில், “புதிய ஒப்பந்தம் விரைவில் ஏற்படாவிட்டால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபா யம் உள்ளது” என்றார். மேலும், இதே கோரிக்கையுடன் விருது நகர் தொழிலாளர் நலத்துறை அலுவல ருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

காட்டெருமை தாக்கி கூலித் தொழிலாளி காயம்

சின்னாளப்பட்டி, மே 24- திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறையைச் சேர்ந்த வர் கோவிந்தராஜ் (57). பெரும்பாறை அருகே கொங்கப் பட்டி பகுதியில் தனியார் காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போது புதருக்குள் இருந்து திடீரென வெளியே வந்த காட்டெருமை கோவிந்தராஜை முட்டியது. இதில் படுகாயமடைந்த கோவிந்தராஜ் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வத்தலக்குண்டு வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

ஒட்டன்சத்திரம், மே 24- திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவி அனுமித்ராக்கு வலையப்பட்டி பகுதியில் பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா, இடையக்கோட்டை அருகே உள்ள வலையப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் செந்தில்குமார் – செல்வ ராணி தம்பதியின் மகளான அனுமித்ரா, நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். மாணவியின் வெற்றியை கொண்டாடும் வகையில் வலையப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு, இடையக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ் தலைமை தாங்கினார். அவர் மாணவிக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய காவல் சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்

பழனி, மே 24- பழனி தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சார்பு ஆய்வாளர் ராஜகோபால், புகார் அளிக்க வந்த இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியான குறுஞ் செய்திகளை அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம் பட்டியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், குடும்ப பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க பழனி தாலுகா காவல் நிலையம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுக் கொண்ட சார்பு ஆய்வாளர் ராஜகோபால், பின்னர் அவருக்கு அருவருக்கத்தக்க மற்றும் பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சம்பவம் தொடர்பாக சசிமோகன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என தெரியவந்ததையடுத்து, சார்பு ஆய்வாளர் ராஜகோபாலை தற்காலிகமாக பணிநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை அதிகாரி மீதே இத்தகைய குற்றச்சாட்டு எழுந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது

மதுரை, மே 24- மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில், நள்ளிர வில் வீட்டிற்குள் புகுந்து 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கீழமாத்தூர் காலனியைச் சேர்ந்த உத்தமனின் மகன் கண்ணன் (21), பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். மேலும், அவர் தவெகவின் பிரமுகராக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சனியன்று நள்ளிரவில் கீழமாத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த கண்ணன், அங்கு தூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் எழுந்தபோது, கண்ணன் அங்கி ருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதாமணி மற்றும் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மது விற்றவர் கைது

நத்தம், மே 25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை நடப்பதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயன் உள்ளிட்ட போலீசார் நத்தம் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோமனாம்பட்டி நாடக மேடை பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த சத்யபிரகாஷ் (28) என்பவர் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த னர்.