தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

29 May 2026, 10:07 pm
திருச்சி விரைவு செய்திகள்

கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை மீட்ட தீயணைப்புத்துறை

திருச்சுழி, மே 29- திருச்சுழி அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை பல மணி நேரம் போராடித் தீயணைப்புத்துறையினர் மீட்டனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே நெல்லிக்குளத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் அவிழ்த்து விடப்பட்ட மதுரையைச் சேர்ந்த ஜித்தன் என்பவருடைய காளை மதியழகன் என்பவருக்குச் சொந்தமான சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் சிக்கிய காளை தொடர்ந்து சத்தமிட்டதால் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், திருச்சுழி தீயணைப்பு- மீட்பு பணித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த நிலைய அலுவலர் சந்திரசேகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி காளையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கடும் போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு காளைக்கு கயிறு கட்டி, பொதுமக்கள் உதவியுடன் உயிருடன் மீட்டனர். உயிரை பணயம் வைத்து காளையை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

விருதுநகர், சிவகாசி பகுதி பேக்கரி, உணவகங்களில் தரமற்ற உணவுகள் பறிமுதல் உணவுப் பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை

விருதுநகர், மே.29- விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் கடை களில் உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய திடீர் சோத னையில் தரமற்ற உணவுப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரி யப்பன் தலைமையில், சிவகாசி உணவு பாதுகாப்பு அலுவலர் ரகுநாதன் உள் ளிட்ட குழுவினர் சிவகாசி யில் மாரியம்மன் கோவில், பிகேஎன் சாலை ஆகிய பகு திகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அதில், லேபிள் இல்லாத 3 லிட்டர் ரோஸ் எஸ்சென்சு, உரிமமின்றி தயார் செய்த 2 லிட்டர் ரோஸ் மில்க் ஆகி யவை பறிமுதல் செய்யப் பட்டது. மேலும், ஐஸ் கிரீம் கடையில் லேபிள் இல்லாத 2 கிலோ ரொட்டி, ரத்தினவிலாஸ் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்வீட் கடையில் தயாரிப்பு தேதி இல்லாத 10 கிலோ சிப்ஸ், 4 கிலோ பிரட், 3 கிலோ கேக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த ஸ்வீட் கடைக்கு உணவுப் பாது காப்பு உரிமம் இல்லாததால் கடையை இயக்கத் தடை விதிக்கப்பட்டது. விருதுநகர்-சிவகாசி சாலையில் உள்ள உணவ கத்தில் உணவுப் பொருட் களின் விலை குறித்தான புகார் வந்தது. இதையடு த்து, அங்கு சோதனை நடத் தப்பட்டது. அதில், பழைய பூரி மசாலா, பழைய புரோட்டா மாவு, கெட்டுப் போன 8 கிலோ சிக்கன் ஆகி யவை பறிமுதல் செய்யப் பட்டது. மேலும், அதிக விலை க்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்த குற்றத் திற்காக தொழிலாளர் நலத் துறையின் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

வைகை அணையில் குடிநீர் திறப்பு நிறுத்தம் சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்

தேனி,மே 29- வைகை அணையில் இருந்து குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப் பட்டதால் ஆண்டிப்பட்டி பேரூராட்சி பகுதி யில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்து மாறு ஒலிபெருக்கி மூலமாக வீதி வீதியாக அறிவிக்கப்பட்டது . கடும் வறட்சி காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 20 அடியாகச் சரிந்து நீர் இருப்பு பெருமளவு குறைந்துள்ளது.இந்நிலையில், அணையின் அடி மட்டத்தில் தேங்கியுள்ள தண்ணீர் மாச டைந்து குடிநீருக்கு உகந்தது அல்ல என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மதுரை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர்க ளுக்கு அவசர எச்சரிக்கை கடிதம் அனுப்பி யது. வைகை அணையிலிருந்து செயல்படுத்தப் படும் அனைத்து குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் திறப்பது அடியோடு நிறுத்தப் பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டிப் பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான ஜம்பலிப் புத்தூர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வழங்கப்படும் குடிநீர் மற்றும் ஆண்டிப் பட்டி-சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத் தின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் அனைத்தும் தற்சமயம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலை யைச் சமாளிக்க, குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய தேவையான துரித நடவடிக்கைகள் பேரூராட்சி நிர்வாகத் தால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளை யில், பொதுமக்கள் அனைவரும் தங்களு க்குக் கிடைக்கும் குடிநீரை மிகவும் சிக்கன மாகப் பயன்படுத்தி பேரூராட்சி நிர்வாகத்தி ற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ஒலி பெருக்கி மூலமாக வீதி வீதியாக சென்று அறிவித்து வருகின்றனர். மேலும், முல்லைப் பெரியாறு அணையி லிருந்து கூடுதல் தண்ணீரைத் திறந்து வைகை அணைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், தற்போது தொடங்கியுள்ள தென் மேற்கு பருவமழை கை கொடுத்தால் மட்டுமே இந்த குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என எதி பார்க்கப்படுகிறது.

கம்பத்தில் வாகனத்தை ஏலம் விட்டு நூதனப் போராட்டம்!

தேனி , மே 29 ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், கம்பத்தில் “கரப்பான் பூச்சிகளின்” இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் நூதனப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கம்பம் வஉசி திடலில் இருசக்கர வாக னங்களை வரிசையாக நிறுத்தி வைத்தி ருந்தனர். எரிபொருள் விலை உயர்வால் வாகனங்களை இயக்க முடியாமல் முடங்கிக் கிடப்பதை சுட்டிக்காட்டும் விதமாக, “கரப்பான் பூச்சிகளின் இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் போராட்டம்” என்று எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்தி முழக்கமிட்டனர். இந்த நூதனப் போராட்டத்திற்கு கம்பம் ஒன்றிய செயலாளர் சீனு முகம்மது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஒன்றிய தலைவர் சாமி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நத்தம்,மே 29- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே முளையூரை சேர்ந்தவர் ஜெய ராம்(33). கூலித் தொழிலாளி. இவ ருக்கும் இவரது மனைவிக்கும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்ச லில் இருந்த ஜெயராம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் ஜெயராம் உயிரி ழந்தார். இச்சம்பவம் குறித்து நத்தம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

திருவில்லிப்புத்தூர் அரசு கல்லூரியில் இளங்கலை படிப்புகளுக்கு சேர்க்கை

திருவில்லிபுத்தூர், மே 29- விருதுநகர் மாவட்டம், திருவில்லிப்புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது. ஜூன் 5 அன்று அனைத்து பாடபிரிவிக்கான சிறப்பு ஒதுக்கீடு ( மாற்றுத் திறனாளி /விளையாட்டு வீரர் / முன்னால் ராணுவ வீரரின் வாரிசு/தேசியமாணவர் படை(NCC). ஜூன் 8 அன்று கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்கள், ஜூன் 9 அன்று வணிகவியல், ஜூன் 10 அன்று தமிழ் மற்றும் ஆங்கிலம். மேற்கண்ட தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று கல்லூரி முதல்வர் முனைவர் சுப . சரவணன் தெரிவித்துள்ளார். ஆகையால் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவ,மாணவியர்கள் ஆவணங்களுடன் மேற் சொன்ன தேதியில் காலை 9.30 மணிக்கு கல்லூரிக்கு வந்து தங்கள் மாணவர் ்சேர்க்கான வருகையை பதிவு செய்து பின் கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களின் தர மதிப்பெண் அடிப்படை யில் தங்களுக்குரிய பாடத்தை உறுதிசெய்யவேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார்.

வேடசந்தூர் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

ஒட்டன்சத்திரம்,மே 29- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா புளியமரத்துக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் யுகன் (வயது 17) எலக்ட்ரீசியனிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள மன்னார்கோட்டை புதுப்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டில் வயரிங் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக யுகன் மீது மின்சாரம் தாக்கியது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விதிமீறல்கள் : மதுரையில் 11 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தரவு

மதுரை,மே 29- தமிழகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து கல்குவாரிகளை அந்தந்த மாவட்ட கனிமவளத் துறையினர் ஆய்வு செய்து, கல்குவாரிகளில் அரசிடம் பெறப்பட்ட அனுமதி ஆணைப்படி கற்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளனவா என்பதனையும், அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டியெடுத்த கல்குவாரிகளை உடனடியாக மூடவும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக அபராதம் வசூலிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டுள்ளார். அதன்அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் இயங்கிவரும் கல்குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், முதற்கட்ட ஆய்வில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் கள்ளிக்குடி வட்டம், உலகாணி கிராமத்தில் உள்ள 2 கல்குவாரிகள், கல்லணை கிராமத்தில் உள்ள 2 கல்குவாரிகள், அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள 2 கல்குவாரிகள், சின்ன உலகாணி கிராமத்தில் உள்ள 1 கல்குவாரி, திருமால் கிராமத்தில் உள்ள 1 கல்குவாரி, கள்ளிக்குடி பிட் 2 கிராமத்தில் உள்ள 1 கல்குவாரி, திருப்பரங்குன்றம் வட்டம், நிலையூர் பிட்-1 கிராமத்தில் உள்ள 1 கல்குவாரி மற்றும் மேலூர் வட்டம், அய்யாபட்டி கிராமத்தில் உள்ள 1 கல்குவாரி என மொத்தம் 11 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.