திருச்சி டூ தில்லி விஜய்யின் லாஜிக் இல்லாத மேஜிக் ஷோ!
3 Apr 2026, 5:05 pm
<p><strong>திருச்சி டூ தில்லி விஜய்யின் லாஜிக் இல்லாத மேஜிக் ஷோ!</strong></p>
<p>தமிழக அரசியலில் “குட்டி ஸ்டோரி” சொல்லிக்கொண்டிருந்த விஜய், இப்போது திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு ஒரு “மெகா சீரியல்” கதையையே அவிழ்த்து விட்டுள்ளார். வசதியான வாழ்க்கையை உதறிவிட்டு வந்ததாக அவர் உருக்கமாகப் பேசுவது ஒருபுறம் இருக்கட்டும், அவர் முன்வைத்த வாதங்களைக் கேட்டால் பொருளாதார நிபுணர்களே தலைசுற்றிப் போவார்கள்! 1. “கூகுள் மேப்” குழப்பமா? எரிவாயு தட்டுப்பாட்டிற்கு ஜனாதிபதி மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களே பொறுப்பு என்பது ஆரம்பப்பள்ளி மாணவனுக்குக் கூடத் தெரியும். ஆனால், “ஸ்டாலின் ஏன் தில்லிக்கு விமானத்தில் போய் எரிவாயு வாங்கி வரவில்லை?” எனக் கேட்கிறார் விஜய். பா.ஜ.க-வை நேரடியாகத் தாக்கத் தயங்கும் விஜய், முதல்வர் மீது பாய்வதற்காகத் தெரிந்தே உண்மையை மறைக்கிறார். 2. “ஃப்ரீ பஸ்” அள்ளிவிடல் தமிழகம் முழுவதும் அனைத்துப் பேருந்துகளிலும் (Express, AC உட்பட) பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற விஜய்யின் வாக்குறுதி நடைமுறைக்குச் சாத்தியமற்றது. இத்தகைய அதீத வாக்குறுதிகள், “ஜெயிப்போம் என்ற நம்பிக்கை இல்லாதவர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்” என்ற பழமொழியையே நினைவூட்டுகின்றன. 3. ‘ஜனநாயகன்’ திரைப்படமும் கூட்டுச்சதியும் தனது பட வெளியீட்டில் சதி நடப்பதாக விஜய் புலம்புவது நகைப்புக்குரியது. அரசிய லுக்கு வந்த பிறகும் எதற் கெடுத்தாலும் “ஆளுங் கட்சி சதி” என்று சினிமா பாணியிலேயே பேசுவது அவரது அரசியல் முதிர்ச்சியின்மை யைக் காட்டுகிறது. “யதார்த்தம் வேறு, விஜய்யின் அரசியல் கற்பனை வேறு” என்பதுதான் மக்களின் மைண்ட் வாய்ஸ். மேக்கப் கலைந்து நிஜ அரசியல் களத்திற்கு வரும்போது, இதுபோன்ற “ரீல்” வச னங்கள் எடுபடுமா என்பதை இந்தச் சட்ட மன்றத் தேர்தல் அவருக்குப் புரிய வைக்கும். - வி.கே.பாண்டியன்</p>
