திருச்சி-திருப்பதி பகல்நேர ரயில்: துரை வைகோ எம்.பி., வரவேற்பு
9 May 2026, 10:49 pm

திருச்சி-திருப்பதி பகல்நேர ரயில்: துரை வைகோ எம்.பி., வரவேற்பு

சென்னை, மே 9- திருச்சி - திருப்பதி இடையே பகல் நேர ரயில் சேவைக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சகம் ஒப்பு தல் அளித்துள்ளதை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ வரவேற்று உள்ளார்.

குண்டூர்-திருப்பதி இடையே இயங்கும் பகல் நேர ரயில் சேவை இனி திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்கப்படும்.

திருச்சி - குண்டூர் - திருப்பதி வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படும்.

திருப்பதி செல்லும் பக்தர்கள், மாண வர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்ததுடன் 2025 மார்ச் மற்றும் டிசம்பரிலும், 2026 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலும் தொடர்ந்து கடி தங்கள் மூலம் வலியுறுத்தியதன் விளைவாகவே இந்த ஒப்புதல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.