திருச்சி விரைவு செய்திகள்
5 Jun 2026, 1:43 am

காலமானார்

இராமநாதபுரம், ஜூன் 4- அரசு ஊழியர் சங்க இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னணி தலைவராக செயல்பட்ட மறைந்த தலைவர் வி.அல்லிமுத்து அவர்களின் மனைவி அ.பொன்னாத்தாள் பரமக்குடியில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான தெற்குசந்தனூர் கிரா மத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.காசிநாததுரை, பரமக்குடி நியூராஜா ஜூவல்லர்ஸ் என்.ராஜகுமாரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கஞ்சா விற்றவர் கைது

திருவில்லிபுத்தூர், ஜூன் 4- வன்னியம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காளீஸ்வரி மேல்நிலைப் பள்ளி அருகே சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக வன்னியம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வைத்திலிங்காபுரத்தைச் சேர்ந்த முனி யாண்டி, கருப்பாயி மற்றும் அம்மன் கோவில்பட்டி பகுதி யைச் சேர்ந்த முத்துமாரி ஆகியோர் கஞ்சாவை விற்ப னைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளியான முனியாண்டி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள கருப்பாயி மற்றும் முத்து மாரியை போலீசார் தேடி வருகின்றனர்.

லாட்டரி விற்றவர் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர், ஜூன் 4- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் மீது திருவில்லிபுத்தூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவில்லிபுத்தூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குலாலர் தெரு பகுதியில் சார்பு ஆய்வாளர் முருக ராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெரு மாள்பட்டி முதல் மேலத்தெருவைச் சேர்ந்த முருகன் என்பவர், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை 10 துண்டுத் தாள்களில் எழுதி விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த துண்டுச் சீட்டுகளை பறி முதல் செய்தனர். மேலும், முருகன் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை

நிலக்கோட்டை, ஜூன் 5- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பத்தி ரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் சில அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையிலான அதிகாரிகள் வியா ழக்கிழமை மாலை சுமார் 3.30 மணியளவில் அலுவல கத்திற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். சோதனையின்போது, அலுவலக பதிவாளர் பார்த்திபன் மற்றும் பணியில் இருந்த அலுவலர்களி டம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்ட னர். மேலும், முக்கிய ஆவணங்கள் மற்றும் பதிவேடு களையும் ஆய்வு செய்தனர். அத்துடன், அலுவலகத்தில் இருந்த பணத் தொகைகள் குறித்து விசாரித்த அதிகாரிகள், கணக்கில் வராத பணம் மற்றும் அதற்கான விப ரங்களையும் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. மாலை 3.30 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது. மேலும், பத்திரப்பதிவு தொடர்பாக அலுவலகத்திற்கு வந்திருந்த 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை யினர் விசாரணை நடத்தினர். நிலக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைகை ஆற்றில் குளித்த 14 வயது சிறுமி உயிரிழப்பு

தேனி, ஜூன் 4- வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியைச் சேர்ந்த வர் பாலமணிகண்டன். இவரது மகள் ஹேமஸ்ரீ (14). புதன்கிழமை மதியம் ஆண்டிபட்டி–வைகை அணை சாலையில், சேடபட்டி கூட்டுக்குடிநீர் நிலையம் அருகே உள்ள மதுரைவீரன் கோவில் பகுதியில் ஓடும் வைகை ஆற்றில் ஹேமஸ்ரீ குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தாய் நதியா (38) ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆற்றில் இருந்த சேற்றில் சிறுமியின் கால் சிக்கியதால் அவர் நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் நதியா உதவிக்காக கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள தோட்டங்களில் பணிபுரிந்த பொதுமக்கள் மற்றும் அப்பகு தியினர் விரைந்து வந்து சிறுமியை மீட்டு, 108 ஆம்பு லன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஹேமஸ்ரீ ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நதியா அளித்த புகாரின் பேரில், வைகை அணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

ஜூலை 3-ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

தேனி, ஜூன் 4- தேனி மாவட்ட ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், கோரிக்கை கள் தொடர்பான மனுக்களை ஜூன் 19-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் இரா.வைத்திநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பணப்பலன் கள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை பரி சீலிக்கும் வகையில், ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில், மதுரை மண்டல இணை இயக்குநர், மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஆகி யோர் முன்னிலையில், வருகிற ஜூலை 3-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள புதிய கூட்ட அரங்கில் இந்தக் கூட்டம் நடை பெறவுள்ளது. எனவே, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதிய தாரர்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை, “மாவட்ட ஆட்சி யர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி” என்ற முக வரிக்கு வருகிற ஜூன் 19-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பள்ளிகளுக்கு அருகே சிகரெட் விற்பனை 6 கடைகளுக்கு அபராதம்

தேனி, ஜூன் 4- கம்பம் மற்றும் கூடலூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகள் மீது நகராட்சி அதிகாரிகள் நட வடிக்கை எடுத்து அபராதம் விதித்தனர். கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிகளைச் சுற்றி யுள்ள 100 மீட்டர் தூரத்திற்குள் புகையிலை, பீடி மற்றும் சிகரெட் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்கா ணிக்க மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் உத்தர விட்டிருந்தார். இதன்படி, கம்பம் பகுதியில் நகராட்சி ஆணையாளர் உமாசங்கர் தலைமையில் சுகாதார அலுவலர் மணி கண்டன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இணைந்து பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 6 கடைகளில் பீடி மற்றும் சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட 6 கடைகளுக்கும் மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், கூடலூரில் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயசீலன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிமுறைகளை மீறி சிகரெட் விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க இதுபோன்ற தொடர் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மது விற்ற 2 பேர் கைது

நத்தம், ஜூன் 4- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நத்தம் அருகே முத்துகோவில்பட்டி பகுதி யில் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளை அம்பலம் (66) என்பவர் தனது தோட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த னர். இதைப் போலவே நத்தம் அவுட்டர் பகுதியில் மது பாட்டில்கள் விற்ற செட்டிகுளத்தைச் சேர்ந்த பிரபா கரன் (53) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

போடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தேனி, ஜூன் 4- போடிநாயக்கனூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அன்றைய தினம் 50க்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு பணி களுக்காக வந்திருந்தனர். அப்போது தேனி லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ராமேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் திடீரென அலுவலகத்தில் நுழைந்து சோத னையை தொடங்கினர். சோதனையின்போது அலுவலகத்தில் இருந்த பொதுமக்களின் செல்போன்கள் பரிசோதனைக்காக பெறப்பட்டு, பின்னர் அவர்கள் வெளியே அனுப்பப்பட்ட னர். தொடர்ந்து, சார் பதிவாளர் கார்த்திகை ராஜா மற்றும் அலுவலக ஊழியர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். நீண்டகாலமாக போடி சார் பதிவாளர் அலுவல கத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சோதனையின்போது சில முக்கிய ஆவ ணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.