திருச்சி விரைவு செய்திகள்
9 Oct 2026, 11:03 pm

திருச்சி விரைவு செய்திகள்

அக்.16 தேனியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தேனி, அக். 9-தேனி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில், வரும் அக்டோபர் 16 அன்றுசிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம்கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 16.10.2026வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இம்முகாமில் பல்வேறு முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று, காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. 10-ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்பு (டிப்ளமோ) மற்றும்பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதியுடைய வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்துகொள்ளலாம்.வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு (Resume) மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் முகாமில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.கூடுதல் விவரங்களுக்கு 9499055936 என்றதொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

தேனியில் இன்று வட்ட அளவிலான ரேசன் குறைதீர் கூட்டம்

தேனி ,அக்.9-தேனி மாவட்டத்தில் பொதுமக்களின் ரேசன் தொடர்பான குறைகளைத் தீர்க்கும் பொருட்டு, ஒவ்வொருமாதமும் வட்ட (தாலுகா) அளவிலான குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் தொடர்ச்சியாக,சனிக்கிழமை பெரியகுளம் வட்டம் -டி. கல்லுப்பட்டி,தேனி வட்டம்-திருச்செந்தூர்,ஆண்டிபட்டி வட்டம்- ஒக்கரைப்பட்டி,உத்தமபாளையம் வட்டம்- காமாட்சிபுரம்,போடி வட்டம்-காமராஜர்புரம் ஆகிய இடங்களில் குறைதீர் கூட்டம்நடைபெறும் .

இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் கலந்துகொண்டு, ரேசன் சேவைகள் தொடர்பான தங்களதுகுறைகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம். கூட்டத்தில் பெறப்படும் புகார்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தீர்வுகாணப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தேனி ,அக்.9-தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்(25) .இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு8 ஆம் வகுப்பு படித்த மாணவியை காதலிப்பதாக கூறி பழகி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமிகர்ப்பமானார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனடிப்படையில் போக்சோ சட்டத்தில் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.இது குறித்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞராக ரக்க்ஷிதா ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி எஸ்.எழில், குற்றவாளி ஆனந்தக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இணையதளங்களில் இருந்து பெண்ணின் ஆபாச படங்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, அக். 9 -பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர்அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தன்னுடன் நெருக்கமாக இருந்த கருப்பு முருகானந்தம், தன்னைஇழிவுபடுத்தும் வகையில் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில்பதிவேற்றம் செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, திருச்சி ஸ்ரீரங்கம்அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கருப்பு முருகானந்தம்,உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பாக வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், தனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில்வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெண்ணின் புகைப்படங்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களின் விவரங்களைக் கண்டறிய சம்பந்தப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியிருப்பதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மார்பிங் செய்யப்பட்டு இணையதளங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் புகைப்படங்களை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கஉத்தரவிட்டார்.மேலும், கருப்பு முருகானந்தத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துஉத்தரவிட்டார்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அறுந்து விழுந்த உயர் மின்னழுத்தக் கம்பி பெரும் விபத்து தவிர்ப்பு

தேனி, அக். 9-தேனி அருகே பழனிசெட்டிபட்டி குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை காலை

யில் உயர் மின்னழுத்த மின் கம்பி அறுந்துவிழுந்தது.

பழனிசெட்டிபட்டி குடியிருப்புப் பகுதி வழியாக, பெரியகுளம் அருகேயுள்ள மது

ராபுரிக்கு உயர் மின்னழுத்தக் கம்பி செல்கிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் இந்தக் கம்பி எதிர்பாராதவிதமாக திடீரென அறுந்து குடியிருப்புகளுக்குள் விழுந்தது. அப்போது அப்பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்த சம்பவத்தால் தேனி -பூதிப்புரம் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது .

இளைஞர் காயமடைந்து அனுமதிகம்பி அறுந்து விழுந்ததை அந்தப் பகுதி

யில் இருசக்கர வாகனத்தில் சென்ற தேனியைச் சேர்ந்த கவாஸ்கரன் (26) என்பவர் பார்த்து அதிர்ச்சியடைந்து சாலையில் விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

விரைந்து நடவடிக்கைசம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மின்சார வாரியத்தினர் உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பைத் துண்டித்தனர். தொடர்ந்து, அறுந்து விழுந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில்தீவிரமாக ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் மலைமேல் உணவு சமைத்து அன்னதானம் வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை, அக். 9-மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழாவை முன்னிட்டு, மலைமேல்உணவு சமைத்து அன்னதானம் வழங்க அனுமதி கோரிய வழக்கில், தொல்லியல் துறை ஆட்சேபனை இல்லைஎனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழாநடைபெறுவதாகவும், விவசாயம் செழிக்க வேண்டியும், நக்கீரர் சாப விமோசனத்தை நினைவுகூரும் வகையிலும்கிராம மக்கள் இணைந்து இவ்விழாவைக் கொண்டாடி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.இந்த விழாவை முன்னிட்டு மலைமேல்கலவை சாதம் சமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி கோரப்பட்டதாகவும், முதலில் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் திடீரென அனுமதி மறுத்துதொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்ததாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.எனவே, தொல்லியல் துறையின் உத்தரவை ரத்து செய்து, மலைமேல் உணவு சமைத்து அன்னதானம் வழங்கஅனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

அனுமதி மறுப்பு: நீதிபதிகள் உத்தரவுஇந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளியன்று விசாரித்தது.

அப்போது, மலை உச்சியிலேயே உணவு சமைப்பது குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க இயலாது எனத் தெரிவித்த நீதிபதிகள், சமைக்கப்பட்ட உணவை அன்னதானமாகப் பரிமாறலாம் என்றும், தேவையற்ற சம்பவங்கள் நிகழாத வகையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.

ஆட்சேபணை இல்லை நீதிமன்றத்தின் உணவு இடைவேளைக்குப் பிறகு, தொல்லியல் துறை தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழாவை முன்னிட்டு மலைமேல் உணவு சமைத்து அன்னதானம் வழங்குவதற்குத் தங்களுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்றும், இந்த விழாவுக்காக ஏற்கெனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்த்தப்படுவதாகவும் தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற்ற நீதிபதிகள், மனுவை முடித்து வைத்துஉத்தரவிட்டனர்.

விடுதி மாணவர் நிதி மோசடி வழக்கில் கடும் கண்டனம் தமிழகத்தில் ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, அக். 9 -சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்காக 2017 முதல் 2023 வரை ஒதுக்கப்பட்ட ரூ.2கோடியே 35 லட்சம் நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கில், அரசு அதிகாரிகளின் ஊழல் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள்கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் செய்த அரசு அதிகாரிகள் எத்தனை பேர், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிவகங்கை மாவட்டம், பாத்திரக்குடியைச் சேர்ந்த சக்திவேல், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியே 35லட்சம் நிதியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும்மாணவர்களுக்கு மாதம் ரூ.100-ம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம்ரூ.150-ம் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டதாகவும், 2017 முதல்2023 வரை அரசு ஒதுக்கிய நிதி மாணவர்களின் கணக்குகளில் செலுத்தப்படாமல் அதிகாரிகளால் முறைகேடு செய்யப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டும், முறைகேட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் பல்வேறு அதிகாரிகள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான சிலருக்குப் பதவிஉயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலர்ஓய்வு பெற்றுவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தவறான தகவல் தெரிவித்ததாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலர் உயர் பதவிகளில் இருப்பதால் விசாரணையில் தலையிடவும், ஆவணங்களைக் கையாளவும் வாய்ப்புள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

“பிச்சை எடுக்கலாம்” :நீதிபதிகள் கடும் கண்டனம்

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.மேலும், “மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தில் ஊழல் செய்வதற்குப் பதிலாகப் பிச்சை எடுக்கலாம்” என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர்.இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு, விசாரணையை முடிக்க மூன்று மாதங்கள் அவகாசம் வழங்குமாறு கோரியது.அப்போது நீதிபதிகள், “ஆட்சி மாறலாம்;ஆனால் அரசு அதிகாரிகள் அப்படியேதானே இருக்கிறார்கள்? பெரும்பாலான அதிகாரிகள் ஊழல்செய்யக்கூடியவர்களாகத்தான் இருக்கிறார்கள். எந்த அரசாக இருந்தாலும் ஊழல் அதிகாரிகளைப்பாதுகாக்கத்தான் முயற்சி நடக்கிறது” என்று வருத்தம் தெரிவித்தனர்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தொடர்ந்து, தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் செய்த அரசு அதிகாரிகள் எத்தனை பேர், அவர்கள் மீதுஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பதுகுறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த வழக்கை நான்குவாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.