தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

yesterday
திருச்சி விரைவு செய்திகள்

சின்னாளபட்டி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணி

சின்னாளப்பட்டி, நவ. 14தமிழக அரசின் நகர்ப்புற பசுமையாக்கல் இயக்கத்தின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம்ட சின்னாளபட்டி பேரூராட்சி 4 வது வார்டு ஆதிகாமாட்சி நகர் மற்றும் 13 வது வார்டு திண்டுக்கல் ரோடு கிழக்குத்தெருவில் உள்ள மயானங்களிலும் பேரூராட்சி மன்றத்தலைவர் பிரதீபா கனகராஜ், செயல் அலுவலர் மு. செ கணேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

பேரூராட்சி துப்புரவு அலுவலர் மணிகண்டன் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். இந்நிகழ்வில் துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா, துப்புரவு அலுவலர் மணிகண்டன், எழுத்தர்கள் முத்துராம் , விவேக், ராமமூர்த்தி, துப்புரவு மேற் பார்வையாளர் அகிலன், சரளா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துக! டி.என்.இ.பி. எம்ப்ளாயீஸ் பெடரேஷன் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, நவ. 14- டி.என்.இ.பி. எம்ப்ளாயீஸ் பெடரேஷனின் மாநிலக் கிளைச் செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பாஸ்டின்ராஜ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேக்கிழார் சிறப்புரை

யாற்றினார். கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் பாலகிருஷ்ணன், துணைப் பொதுச்செயலாளர்கள் மணிகண்டன், நாராயணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி. மூலம் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மீதமுள்ள 4,500 பேரையும் உடற்தகுதித் தேர்வுக்கு அழைக்க வேண்டும். ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, 9,613 கேங்மேன் பணியாளர்களைக் கள உதவியா

ளர்களாகப் பதவி மாற்றம் செய்து உத்தரவிட வேண்டும். ​மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ​கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்று நியமன உத்தரவு வழங்கப்படாமல் உள்ள மீதமுள்ள 5,000 பேருக்கு நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் பழனி நன்றி கூறினார்.

மகாமகம் விழாபடுக்கை, உணவு வசதியுடன் ஹோம் ஸ்டே நிறுவனங்கள் பதிவு செய்ய அழைப்பு

தஞ்சாவூர், நவ. 14- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகாமகம் விழாவிற்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் தங்குமிட வசதியை உறுதி செய்யும் வகையில், மகாமகம் விழாவை

யொட்டி படுக்கை மற்றும் காலை உணவு வசதியுடன் கூடிய தங்கும் நிறுவனங்கள் மற்றும் ஹோம்ஸ்டே நிறுவனங்களுக்கு விரைவில் உரிமம் வழங்கப்பட உள்ளது.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில், குறிப்பாக கும்பகோணம் பகுதியில், இதுவரை தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையில் பதிவு செய்யாமல் செயல்பட்டு வரும் படுக்கை மற்றும் காலை உணவு வசதியுடன் கூடிய தங்கும் நிறுவனங்கள் மற்றும் ஹோம்ஸ்டே நிறுவனங்களும், புதிதாக தொடங்க உள்ள நிறுவனங்களும் உடனடியாக www.tntourismtors.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறு

மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மகாமகம் விழாவை முன்னிட்டு, சுற்றுலாத் துறையின் சார்பில் சம்பந்தப்பட்ட தங்கும் நிறுவனங்கள் விரைவில் ஆய்வு செய்யப்பட்டு, உரிய உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலரை அலைபேசி எண் 9176995873 அல்லது மின்னஞ்சல் முகவரி tntotnj@yahoo.in வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.ரேவதி தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவிகள் 5 பேர் காயம்

தஞ்சாவூர், நவ. 14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சேது சாலையில், புதனன்று, குடிபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர் மோதியதில் 5 பள்ளி மாணவிகள் காயமடைந்தனர்.

சேதுபாவாசத்திரம் யாதவர் தெருவைச் சேர்ந்த சர்புதீன் மகன் அன்வர்கான், மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த ஸ்கூட்டி வாகனம் மற்றும் மிதிவண்டிகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், ஸ்கூட்டியில் சென்ற நாட்டாணிக்கோட்டை வடக்கு கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் - கலைச்செல்வி தம்பதியின் மூத்த மகளும், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருபவருமான க.பிரவீனாவுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரது தங்கையும், நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருபவருமான யுவனிகாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இருவரும் பேராவூரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், மிதிவண்டியில் சென்ற பேராவூரணியைச் சேர்ந்த, பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் ஹன்சிகா, அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மௌசிகா, அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் யோகேஸ்வரி ஆகிய 3 மாணவிகளும் காயமடைந்து, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். விபத்தை ஏற்படுத்திய அன்வர்கான், மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், பாதிக்கப்பட்ட மாணவிகளை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

இந்த விபத்து குறித்து, பேராவூரணி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூகத் தணிக்கை கிராம சபை கூட்டம்

பாபநாசம், நவ. 14- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சியில். எம்ஜி என்ஆர்இஜி எஸ் 2025-26 மற்றும் 2026-27 ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல், மே, ஜுன் மாதத்திற்கான சமூகத் தணிக்கை கிராமசபை கூட்டம், புத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

பாபநாசம் வட்டார தணிக்கை அலுவலர் ஷீலா மேற்பார்வையில், நான்கு பேர் கொண்ட குழுவினர், நவ.10 முதல் 14 ஆம் தேதி (சனிக்கிழமை) வரை 5 நாட்கள் நடைபெற்ற சமூகத்தணிக்கை ஆய்வில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட செலவினத் தொகை சுமார் ரூ.40 லட்சத்திற்கான வரவு செலவுகள், பணியாளர் ஊதியம், பணிகளுக்கான அளவீடு ஆகியவை சரிபார்க்கப்பட்டு, நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) பூங்குழலி கலந்து கொண்டார்.

ஊராட்சியில் நீர் சேமிப்பு முறைகள், மரம் வளர்ப்பின் அவசியம், திட, திரவக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட முக்கியமான செய்திகளை கிராம சபையில் அவர் எடுத்துரைத்தார். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ், வட்டார பணி மேற்பார்வையாளர் டிராவிட் குமார் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் கதிரேசன் நன்றி கூறினார்.

ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர், நவ. 14- தமிழ்நாடு முழுவதிலும் நிலையான நீர்ப்பாசன வசதியில்லாத 300 ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளின் புன்செய் நிலங்களில், நீர்ப்பாசன ஆதாரமாக நிலநீர் ஆய்வின் அடிப்படையில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து, அவற்றிற்கு நீர் இறைக்கும் அமைப்பாக மின்இணைப்பு பெற்று மின்மோட்டார் அல்லது சூரியசக்தி மூலமாக இயங்கும் பம்பு செட்டுகளுடன் 100 சதவீத மானியத்தில் அமைத்துத் தரப்படும். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க, நிலையான நீர்ப்பாசன வசதி (ஆழ்துளை / குழாய் / திறந்த வெளிக் கிணறு அல்லது பாசனப் பகுதிகளில் வாய்க்கால் நீர்பாசனம்) இல்லாத புன்செய் நிலம் சொந்தமாக வைத்துள்ள அனைத்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சேர்ந்த விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல்துறை, ரோவர் கலைக்கல்லூரி பின்புறம், தண்ணீர்பந்தல், பெரம்பலூர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கவும். கூடுதல் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர் 9597639394 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ப. அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார்.

பணம் பறித்த நபர் கைது

தஞ்சாவூர், நவ. 14- தஞ்சை பூக்கார தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ர. மகேஷ்குமார். இவர் சம்பவத்தன்று நாஞ்சிக்கோட்டை சாலை சிட்கோ வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தஞ்சை பாத்திமா நகரைச் சேர்ந்த கட்டை சதீஷ் என்ற சதீஷ்குமார்(42) என்பவர், மகேஷ்குமாரை அச்சுறுத்தி, அவரிடம் இருந்து பணத்தை பறித்துச் சென்று விட்டார்.

இதுகுறித்து, மகேஷ்குமார் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.

நவ. 16 தஞ்சாவூரில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

தஞ்சாவூர், நவ. 14- தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் மேளா நவ.16 அன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரா.ரேவதி தெரிவித்துள்ளார்.

தேசிய தொழிற்பழகுநர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த சேர்க்கை முகாம், தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

இம்முகாமில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

இந்நிறுவனங்கள் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ. மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களை தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேர்வு செய்ய உள்ளன. மேலும், 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வித் தகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் புதுமுக தொழிற்பழகுநராக சேரலாம். அவர்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் வரை அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் வழங்கப்பட்டு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சிக்கு நிறுவனங்கள் மூலம் மாதம் ரூ.6,800 முதல் ரூ.12,300 வரை உதவித்தொகை வழங்கப்படும். இச்சான்றிதழ் மூலம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதுடன், இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் பணிபுரியவும் பயனுள்ளதாக அமையும்.

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தஞ்சாவூர் என்ற அலுவலகத்தை தொலைபேசி எண்: 94990 55725 இல் தொடர்பு கொள்ளலாம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.