திருச்சி விரைவு செய்திகள்
29 May 2026, 12:03 am

கும்பகோணம், மே 28- கும்பகோணத்தில், தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர், மே 28- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து விவசாயம், மண்பாண்ட தொழில் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக வண்டல்மண், களிமண், சாதாரண மண் ஆகியவற்றை பொதுமக்கள் இலவசமாக எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 813 நீர்நிலைகள் வண்டல்மண் எடுப்பதற்காக மாவட்ட அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளன. மண் தேவைப்படுவோர், வட்டாட்சியரின் அனுமதியை இணையவழியில் பெற்ற பின்னரே மண் எடுக்க வேண்டும். தகுதியுடைய பொதுமக்கள் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் இதற்கான அனுமதி வழங்கப்படும். மாவட்டத்தில் இதுவரை 4,369 பயனாளிகளுக்கு 6,47,831 கன மீட்டர் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயிகளுக்கு ஏதேனும் குறைகள் அல்லது புகார்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை, மே 28- புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு மே 25 முதல் மே 27 வரையிலான மூன்று நாட்கள் பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியர் மு. அருணா தலைமையில் நடைபெற்றது. சென்னை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலக உதவி இயக்குநர் சுனிதா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் மாவட்டப் பொறுப்பு அலுவலர் திவ்ய சாய் வெங்கட் ஆகியோரால் அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேற்படி, பயிற்சி வகுப்பில் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஹெச்.எம். குழந்தைச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ். திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் எஸ். கணேசலிங்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ. சண்முகம், புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் த. நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 28- உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரி யத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000-லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரி யர்கள் /ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இரு சக்கர வாக னத்திற்கான மானியம் பெற, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்தில் படிவத்தினைப் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே, பயனாளி இருசக்கர வாகனம் வாங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலகத்தில் (இரண்டாம் தளம்) 30.6.2026-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி திட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உலமாக்கள் விண்ணப்பித்து பயன்பெ றுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர், மே 28- தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டை அருந்தவ புரத்தைச் சேர்ந்தவர் தீபக்31). இவர் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட 14 வயது சிறுமியை 2024, ஜுன் 3 ஆம் தேதி பாலியல் தொந்தரவு செய்தார். இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தீபக்கை கைது செய்தனர். இது தொடர்பாக, தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ. தமிழரசி விசாரித்து, தீபக்குக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கபட்ட சிறுமிக்கு அரசிடமிருந்து ரூ. 5 லட்சம் பெற்றுத் தருமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.