தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

8 Aug 2026, 10:59 pm
திருச்சி விரைவு செய்திகள்

தலைமை அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம்

தஞ்சாவூர், ஆக. 8 - தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள தஞ்சாவூர், மன்னார்குடி மற்றும் பாபநாசம் ஆகிய தலைமை அஞ்சல் அலுவலகங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஆதார் சேவை மையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மேலும், தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சேவை மையம் உள்ள துணை அஞ்சல் அலுவலகங்களிலும் ஆதார் சேவைகள் வழங்கப்படுகின்றன. அஞ்சல் அலுவலகங்கள் தங்கள் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த விரும்புவோர், முகாம் தேவைப்படும் மொத்த நபர்களின் எண்ணிக்கையுடன், முகாம் நடத்தப்படும் இடத்தின் விவரங்களைக் குறிப்பிட்டு dothanjavur.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தங்களின் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களின் பழைய ஆதார் அட்டையில் பெயர், முகவரி, கைபேசி எண் திருத்தம் மற்றும் கைரேகை, புகைப்படம் புதுப்பித்தல் போன்ற சேவைகளை அருகில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் கு.தங்கமணி தெரிவித்துள்ளார்.

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், ஆக. 8- தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. பாபநாசம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 362 விவசாயிகள், 181 மெ.டன் பருத்தியை எடுத்து வந்தனர். கொங்கணா

புரம், சேலம், திருச்சி, நாகை, பெரம்பலூர், அரியலூர், பண்ருட்டி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 8 வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்று, பருத்திக்கு அதிகபட்சம் ரூ.9,529, குறைந்தபட்சம் ரூ.9,090, சராசரி ரூ.9,365 என விலை நிர்ணயித்தனர். இதன் விற்பனை மதிப்பு ரூ.1 கோடியே 60 லட்சம் ஆகும்.

ஆக. 10 சிறை நிரப்பும் போராட்டம்அனைத்துத் தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆலோசனை

தஞ்சாவூர், ஆக. 8- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து, அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், ஆக. 10 ஆம் தேதி நாடு தழுவிய மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.

தொமுச மாவட்டச் செயலாளர் கு. சேவியர் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிஐடியு மாநில துணைத் தலைவர் சி.ஜெயபால், மாவட்டச் செயலாளர் ம.கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு, ஏஐடியுசி தேசியக் குழு உறுப்பினர் சி. சந்திரகுமார், மாநிலச் செயலாளர் ஆர். தில்லைவனம், மாவட்டத் தலைவர் வெ. சேவய்யா, மாவட்ட நிர்வாகி முத்துகுமார், தொமுச நிர்வாகி காளிமுத்து, ஏஐசிசிடியு மாவட்டத் தலைவர் ராஜன், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் சின்னப்பன் உள்ளிட்ட பலர் பேசினர்.

“ஆக. 10 அன்று தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது’’ என்று முடிவு செய்யப்பட்டது.

மக்கள் சந்திப்பு நடைபயண பிரச்சார இயக்கம்

அரியலூர், ஆக. 8- மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற மக்களை சந்திக்கும் நடைபயண பிரச்சார இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சம வாய்ப்பு, சமூக நீதி, ஜனநாயகம் அனைவருக்கும் கேட்டு மாற்றத்தை உருவாக்கிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மக்களை சந்திக்கும் நடைபயண பிரச்சார இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

“படித்த இளைஞர்களுக்கு வேலை, எல்லோருக்கும் பொது மருத்துவம், இலவச கல்வியை கட்டாயமாக்க வேண்டும். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும். விவசாய விலைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் வகையில் இயற்றப்பட்ட சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்’’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயண பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிக்கு விவசாய தொழிற்சங்க மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன், ஒன்றியச் செயலாளர் எம். ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மணிகண்டன், தமிழ் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.