தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

20 minutes before
திருச்சி விரைவு செய்திகள்

திருச்சி விரைவு செய்திகள்

சிஐடியு உடலுழைப்புத் தொழிலாளர் சங்கம் அமைப்பு

சிவகாசி, நவ.10-சிவகாசியில் சிஐடியு உடலுழைப்புத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் பி.அம்பேத்குமரேசன் தலைமை வகித்தார். வைரப்பிரகாஷ் கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.மாவட்டத் தலைவர் எம். மகாலெட்சுமி சிறப்புரையாற்றினார்.மாநகரத் தலைவராக பி.அம்பேத்குமரேசன், செயலாளராக எஸ்.வைரப்பிரகாஷ், பொருளாளராக சி.தனலெட்சுமி, துணைத் தலைவராக பி.கணேசன், துணைச் செயலாளராக எஸ்.முனீஸ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பைக்கில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

நத்தம், நவ.10-மதுரை மாவட்டம், சொக்கலிங்கபுரம் அருகே உள்ள மணல்மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவர் சம்பவத்தன்று நத்தம் வந்துவிட்டு, ஏரக்காபட்டியில் உள்ள தனது தங்கை வீட்டுக்குப் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.மெய்யம்பட்டி பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்த பன்னீர்செல் வத்துக்குத் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.அப்பகுதியினர் அவரை மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக் காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.இதுகுறித்து நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

புதிய நிர்வாகிகள்

இராமநாதபுரம், நவ.10-இராமநாதபுரத்தில் சிஐடியு சுமைப்பணி தொழிலளர் சங்கத்தின் விரிவடைந்த மாவட்டக் குழு கூட்டம் ப.முத்துப்பாண்டி தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.சந்தானம், மாவட்டத் தலைவர் எம்.சிவாஜி, மாவட்ட துணைத் தலைவர் எம்.அய்யாதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத் தலைவர் கே.ஆதிமூலம் நிறைவுரையாற்றினார். மாவட்டத் துணைத்தலைவர் எஸ்.பி.பூமிநாதன் நன்றி கூறினார்.கௌரவத் தலைவராக எஸ்.பி.பூமிநாதன், தலைவராக ப.முத்துப்பாண்டி, செயலாளராக எஸ்.போஸ், பொருளாளராக ஸ்ரீதர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

சிப்பி காளான் வளர்ப்பு பயிற்சி

சின்னாளப்பட்டி, நவ.10-திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வட்டம், செட்டிநாயக்கன்பட்டி கிராமத்தில், திருச்சி சமயபுரத்தில் உள்ள தனலட்சுமிசீனிவாசன் தோட்டக்கலைக் கல்லூரி மாணவர்கள், ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் சிப்பி காளான் வளர்ப்பு குறித்து நேரடி கள அனுபவம் பெற்று வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக, தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் இரா.வெ.நம்பிஷோபனா, இரா.சிவக்குமார் ஆகியோர் அட்மா திட்டத்தின் கீழ் மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு சிப்பி காளான் வளர்ப்பு குறித்த நேரடிப் பயிற்சி அளித்தனர்.

சிப்பி காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் வினோத் குமார், மாணவர்களுக்கு காளான் வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கினார். காளான் வளர்ப்புக் கூடாரம் அமைத்தல்,விதைகளைத் தேர்வு செய்தல், ஈரப்பதத்தைக் கண்டறிதல் உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.இப்பயிற்சியின் மூலம் மாணவர்கள் சிப்பி காளான் வளர்ப்பு, பண்ணை மேலாண்மை மற்றும் விற்பனை தொடர்பானநடைமுறை அறிவைப் பெற்றனர். இந்த அனுபவம் அவர்களின் எதிர்கால வேளாண் பணிகளுக்குப் பயனுள்ளதாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தனியார் தோட்டத்தில் மாணவர் சடலமாக மீட்பு

வெம்பக்கோட்டை, நவ.10-வெம்பக்கோட்டை அருகே தனியார் தோட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.வெம்பக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவர், கல்லமநாயக்கன்பட்டியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் 9 ஆம் தேதி மாணவரைக் காணவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் ஆலங்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இதற்கிடையே, எட்டக்காபட்டியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் மரத்தில் மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட நீளமான கத்தியுடன் ஒருவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர், நவ.10-ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரகுபதி, மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப் போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தார்.

அவர் இடையபொட்டல் தெருவைச் சேர்ந்த தங்கமாரியப்பன் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், மரக்கைப்பிடியுடன் கூடிய 48.5 செ.மீ. நீளமுள்ள கத்தி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அந்த வழியாகச் செல்வோரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகைகளைப் பறிக்கத் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இதையடுத்து கத்தியைப் பறிமுதல் செய்த போலீசார், தங்கமாரியப்பனைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

12 ஆண்டுகளில் போதைப் பொருள் கடத்தல் மிகப்பெரிய கட்டமைப்பாக உருவெடுத்துள்ளது

மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டிவிருதுநகர், நவ.10-கடந்த 12 ஆண்டுகளில் போதைப் பொருள் கடத்தல் மிகப்பெரிய கட்டமைப்பாக உருவெடுத்துள்ளது. இதனைத் தடுக்க ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் கோவை, கன்னிமாரா, மதுரை உள்ளிட்ட நூலகங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதுகுறித்து அரசு முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் போதைப் பொருள் புழக் கம் மற்றும் துப்பாக்கிக் கலாச்சாரம் அதிகரிப்பது குறித்த கேள்விக்கு, போதைப் பொருள் புழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. காவல்துறை அரசியல் தலையீடின்றி சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றார்.கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பது குறித்த கேள்விக்கு, தூத் துக்குடி மாவட்டத்தில் கொலைச் சம்பவங் கள் 77-ல் இருந்து 65 ஆகவும், பின்னர் 59 ஆகவும் குறைந்துள்ளதாகக் காவல்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.அனைத்து மாவட்டங்களிலும் குற்றங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை காவல் துறை வெளிப்படையாக வெளியிடவேண்டும் என்றார்.

2029-க்குள் போதைப் பொருள் இல்லாதஇந்தியாவை உருவாக்குவோம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு குறித்துப் பேசுகையில், வெறும் அறிவிப்புகளால் போதைப் பொருள் கடத்தலை ஒழிக்க முடியாது. குஜராத் துறைமுகங்கள் வழியாக நடைபெறும் கடத்தல்கள் குறித்தும், அதானி குழுமத் துறைமுகங்கள் தொடர் பாக எழுந்துள்ள கேள்விகள் குறித்தும்விசாரணை நடத்த வேண்டும் என்றார்.தொகுதி மறுவரையறை தொடர்பாகப் பேசுகையில், இதனால் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக் கப்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் எந்த நடவடிக்கைக்கும் ஆதரவு அளிக்கக் கூடாது என்றார்.காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றம் குறித்த கேள்விக்கு, 2014, 2019 தேர்தல் தோல்விகளுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. 2024 தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையைஇழந்துள்ளது.தேர்தல்முறைகேடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து ராகுல் காந்தி ஏற்கெனவே கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும் என்றார்.அமைச்சர் கீர்த்தனா சீனப் பட்டாசு வெடித்ததாகப் பரவும் காணொளி குறித்த கேள்விக்கு, பட்டாசின் நிறத்தை மட்டும் வைத்து அது சீனப் பட்டாசு என முடிவு செய்ய முடியாது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களைச் சரிபார்க்காமல் நம் பக் கூடாது என்றார்.

‘நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’

சிவகங்கை, நவ.10-சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர்ப.ஆகாஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், வேளாண் பணிகள் எவ்வித இடையூறுமின்றி நடைபெறவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில்நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பயன் பாட்டுக்குக் கொண்டுவரவும், கண்மாய்களைத் தூர்வாரவும், வரத்துக் கால்வாய்களைச் சீரமைக்கவும், தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்குதல், வேளாண் இயந்திரங்கள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க உதவுதல், வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாத்தல், தார் சாலை வசதி ஏற்படுத்துதல், அரசு மானியத்தில் சோலார் பம்ப்செட் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கி, விவசாயம் சார்ந்த புதிய தொழில்களைத் தொடங்க ஊக்குவிப்பதுடன், தேவையான உரங்களைப் போதிய அளவில் இருப்பு வைக்கவும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், சீரான மின் விநியோகம், தகுதியான பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்குதல், விவசாயிகளுக்குத் தனி அடையாள எண் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் மீதும் சம்பந்தப்பட்ட துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீர்வு காண வேண்டும். கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து உரிய கள ஆய்வு மேற் கொண்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் ப. சைலேந்திரன், தேவகோட்டை சார் ஆட்சியர் ராகுல் குமார், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேந்திர பிரசாத், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர்களுக்கு 1.34 லட்சம் கேக்குகள்

இராமநாதபுரம், நவ.10-குழந்தைகள் தினத்தையொட்டி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்காகத் தயார் நிலையில் வைக் கப்பட்டுள்ள கேக்குகளை மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க் கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இராமநாதபுரம் அரசு நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி, டி.டி. விநாயகர் மேல்நிலைப்பள்ளி, செய் யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, பொக்கனாரேந்தல் ஊராட்சிஒன்றிய தொடக்கப் பள்ளி, கடுகுசந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.இதன்படி, பரமக்குடி கிடங்கு மூலம் 164 பள்ளிகளுக்கு 15,202 கேக்குகளும், கீழக்கரை கிடங்கு மூலம் 184 பள்ளிகளுக்கு 19,518 கேக்குகளும், இராமேசுவரம் கிடங்கு மூலம் 107 பள்ளிகளுக்கு 6,049 கேக்குகளும் வழங்கப்பட உள்ளன. மாவட்டம் முழுவதும் 9 கிடங்குகள் மூலம் 1,292 பள்ளிகளுக்கு மொத்தம் 1,34,813 கேக்குகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வின்போது, கேக்குகளின் இருப்பு, தரம், தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகள், சேமிப்புக் கிடங்குகளின் சுகாதாரம், பள்ளிகளுக்குவிநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். அனைத்து மாணவர்களுக்கும் தரமான, பாதுகாப்பான கேக்குகள் எவ்வித குறைபாடுமின்றி சென்றடைவதை உறுதி செய்ய அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, பொக்கனாரேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், குடிநீர், கழிப்பறை, இணையதள வசதிகள், வகுப்பறைகளின் அடிப் படை வசதிகள் மற்றும் பள் ளிக் கட்டிடத்தின் உறுதித் தன்மை, பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். பள்ளிக்குத் தேவையான இணையதள வசதியைஉடனடியாக ஏற் படுத்தித் தர முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, கடுகுசந்தை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற் றும் தயாரிக்கப்படும் முறையை ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் தரமான, சத்தான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனஅலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.