தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி குழுமத்தில் ‘ஏ.ஐ’ தொழில்நுட்ப 3 மாத பயிற்சித் திட்டம் தொடக்கம்

5 Jun 2026, 10:49 pm
தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி குழுமத்தில் ‘ஏ.ஐ’ தொழில்நுட்ப 3 மாத பயிற்சித் திட்டம் தொடக்கம்
<p><strong>தமிழகத்தில் முதன் முறையாக திருச்சி ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி குழுமத்தில் ‘ஏ.ஐ’ தொழில்நுட்ப 3 மாத பயிற்சித் திட்டம் தொடக்கம்</strong></p><p>​திருச்சிராப்பள்ளி, ஜுன் 5- பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் கர்மா குளோபல் ஸ்கில்ஸ் ஏ ஐ நிறுவனமும், திருச்சி ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி குழுமமும் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) தொழில்நுட்பம் சார்ந்த புதிய கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. இதுகுறித்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி குழும தலைவர்செந்தில்நாதன், துணைத் தலைவர் ஆகாஷ் பாலாஜி, கே.ஜி.எஸ்.ஏ. அதிகாரி சந்திரன் ஆகியோர் செய்தியாளகளிடம் கூறுகையில், “வருங்காலத்தில் வேலைவாய்ப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) மிக முக்கியப் பங்காற்ற உள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு, இதில் தங்களை மேம்படுத்திக் கொள்பவர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் மாதம் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை உயரிய சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இத்தொழில்நுட்பத்தைக் கற்று க்கொள்ள ஆங்கில அறிவு ஒரு தடையாக இருக்காது. ஓரளவிற்கு ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தாலே இதனை மிக எளிதாகக் கற்றுக்கொண்டு விடலாம். தற்போது எலக்ட்ரிஷியன் போன்ற பணிகளைச் செய்து வருபவர்கள் கூட, இந்த ‘ஏ.ஐ’ தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதன் மூலம் வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்புகளையும், பிரகாசமான எதிர்காலத்தையும் பெற முடியும். தமிழகத்திலேயே திருச்சி ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி குழுமத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சிறப்புப் பயிற்சித் திட்டம், 3 மாத கால அளவைக் கொண்டதாகும். குறிப்பாக, ஐ.டி.ஐ (ITI) முடித்த மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். நாளைய வாய்ப்புகளுக்கு தயாராக இருக்கும். உலகளாவிய திறன்மிக்க பணியாளர்களை உருவாக்குவதே எங்கள் இலக்காக உள்ளது. அதற்காக கே.ஜி.எஸ்.ஏ, ஸ்ரீ ஆதிசங்கரர் கல்வி குழுமத்துடன் கைகோர்த்துள்ளது. இத்தகைய அரிய வாய்ப்பினை தகுதியுள்ள அனைவரும் பயன்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என இத்திட்டத்தைத் தொடங்கி உள்ளோம்’’ என்றனர். பேட்டியின் போது மஞ்சுளா செந்தில்நாதன் உடனிருந்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.