தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

19 Jun 2026, 9:55 pm
திருச்சி விரைவு செய்திகள்

மீனம்பட்டியில் பள்ளிக்கூடம் அருகே பட்டாசு மூலப் பொருள் தயாரிப்பு குடோன் காவல்துறையினர் அகற்றினர்

சிவகாசி, ஜூன் 19 -விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மீனம்பட்டியில் பள்ளி அருகே செயல்பட்டு வந்த பட்டாசுக்கான மூலப்பொருட்கள் தயாரிக்கப்பட்ட குடோனை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். சிவகாசி அருகேயுள்ளது மீனம்பட்டி . இங்குள்ள துவக்க பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ ,மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் வகுப்பறை சுவரை யொட்டி பட்டாசுக்கான மூலப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதில் இரசாயனப்பொருட்கள் மற்றும் காகித குழாய்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி மாணவ ,மாணவிகளின் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சிவகாசி டி.எஸ்.பி. அனில் குமார் உத்தரவின் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் ஆய்வு செய்து பள்ளி மாணவ மாணவியருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட குடோனை அகற்றினர்.

திருப்புவனத்தில் ரயில் மோதி இளைஞர் பலி

சிவகங்கை,ஜூன் 19- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதியதில் உயிரிழந்தார். திருப்புவனம் சேதுபதி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜாவின் மகன் வசந்த் (22).இவர் வெள்ளியன்று அதிகாலை வழக்கம்போல் நடைபயிற்சிக்காக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பும் வழியில் ரயில்வே பீடர் சாலை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, மதுரையிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி ஆய்வுப் பணிக்காக இன்ஜின் மற்றும் ஒரு பெட்டியுடன் சென்ற ரயில் வந்துள்ளது. ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற வசந்த் மீது ரயில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரது உடலை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமக்குடி போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1.92 லட்சம் பணம் பறிமுதல் இடைத்தரகர்களை தடுத்து நிறுத்தி விசாரணை

இராமநாதபுரம் ஜூன் 19 தமிழ்நாடு முழுவதும் வியாழக்கிழமை அன்று வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உரிய வாகனங்களை சோதனை செய்யும் இடமான பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் வளாகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து தனியாக அமைந்துள்ள இடத்தில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனைக்காக வந்ததை அறிந்த சில இடைத்தரகர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். மேலும், அச்சமயத்தில் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் மட்டுமே அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேற்படி இடத்தில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ்,(59), வாகன ஓட்டுநர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத பணம் ரூ.1,92,650 கண்டறியப்பட்டது. மேலும், இடைத்தரகர்களின் கைப்பேசிகளை சோதனை செய்ததில், வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் அவரது உறவினர்களின் வங்கி கணக்குகளுக்கு சுமார் ரூ.5,00,000 அளவிற்கு பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திலும் மற்றும் இரண்டு டிரைவிங் ஸ்கூல் அலுவலகங்களிலும் தொடர் சோதனை மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜூன் 28 இராமநாதபுரத்தில் சிறுவர்களுக்கு கலைப்போட்டிகள் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

இராமநாதபுரம்,ஜூன் 19- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலை வர் மா.சிவகுரு பிரபாகரன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சவகர் சிறுவர் மன்றம் வாயிலாக 2025-2026 ஆம் நிதி யாண்டில் 5-8, 9-12, 13-16 வயது வகை சிறார்களுக்கிடையே கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 4 பிரிவுகளில் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு 9-12, 13-16 ஆகிய வயது பிரிவினருக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் இராமநாதபுரம் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் 28.06.2026 ஞாயிற்றுக் கிழமை அன்று டி.டி.விநாயகர் மேல்நிலைப் பள்ளி, வெளிப்பட்டிணத்தில் வயதுவகை நடைபெறவுள்ளது. குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் போட்டிகள் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. குழு வாக போட்டியில் பங்கு பெற அனுமதி யில்லை. தனிநபராக அதிக பட்சம் 5 நிமி டம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படு வார்கள். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடி யாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயி லாட்டம், புலியாட்டம். தப்பாட்டம் (பறை யாட்டம் ) மலை மக்கள் போன்ற பாரம் பரிய கிராமிய நடனங்கள் அனு மதிக்கப்படும். ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்க ளுக்கான ஓவியத்தாள்கள் மட்டுமே வழங் கப்படும். அக்ரிலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் மட்டுமே ஓவியங்கள் வரை யப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் வரைய அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட போட்டியில் வெற்றி பெறும் 9-12, 13-16 வயதுவகை சிறார்க ளுக்கிடையே முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மேலும் விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத் துறையின் மதுரை மண்டல அலுவல கத்தின் தொலைபேசி எண் 0452-2566420 மற்றும் 98425 67308 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். இவ்வாய்ப்பினை 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறார்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ஜூன் 26 தேனியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் தேனி ஆட்சியர் தகவல்

தேனி ,ஜூன்.19- போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற உயரிய இலக்கினை வலியுறுத்தும் வகையில் “ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs” Anti-Drug Run 2026 என்ற மாபெரும் விழிப்புணர்வு ஓட்டம் ஜூன் 26 அன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேனி மாவட்டப் பிரிவு சார்பாக “ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs” Anti-Drug Run 2026 என்ற மாபெரும் விழிப்புணர்வு ஓட்டம் ஜூன் 26 அன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து துவங்கப்படவுள்ளது. இவ்விழிப்புணர்வு ஓட்டமானது சுமார் 5 கி.மீ தூர ஓட்டத்தில் 14 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள், NCC, NSS, Nyks விளையாட்டு வீரர்கள் (ம) வீராங்கனைகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். கலந்துகொள்ளும் அனைவருக்கும் T-Shirt மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இதுதொடர்பான தேனி மாவட்ட விளை யாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 7401703505 மற்றும் 04546-253090 என்ற தொலைப்பேசி எண்களில் (வேலை நேரங்களில்) தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

காந்தி மியூசியம் பெயர் மாற்ற வழக்கு தள்ளுபடி!

மதுரை, ஜூன் 19 - காந்தி மியூசியத்தை மீண்டும் ‘ராணி மங்கம்மாள் அரண்மனை’ என அழைக்க உத்தரவிடக் கோரி, தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், 1955-இல் தமுக்கம் பகுதியில் உள்ள 13 ஏக்கர் நிலமும், ராணி மங்கம்மாள் அரண்மனையும் காந்தி ஸ்மாரக் நிதிக்கு வழங்கப்பட்டு, தற்போது மியூசியமாகப் பராமரிக்கப்படுவதால் பழைய பெயரையே வைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, மனுதாரர் கோரும் நிவாரணத்திற்குப் போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.

மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களில் சாதி? அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஜூன் 19 - தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களில் சாதி மற்றும் சமூக விவரங்களைக் கட்டாயமாகச் சேகரிப்பதைத் தடை செய்யக் கோரி, விருதுநகரைச் சேர்ந்த விக்ரமன் பொதுநல மனு தாக்கல் செய்தார். இவ்வாறு சாதி விவரங்களைக் கேட்பதன் மூலம் பாகுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், பாகுபாடற்ற சூழலை உறுதி செய்ய ஒழுங்குமுறைகளை வகுக்க வேண்டும் என அவர் வலியறுத்தியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதி விவரங்களைக் கட்டாயமாகப் பெறக் கூடாது என ஏதேனும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து தமிழ்நாடு பள்ளி மற்றும் உயர் கல்வித்துறையின் முதன்மை செயலர்கள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை

தேனி,ஜுன்.19- பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியருக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தேனி போக்‌சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனி மதுரை சாலையில் உள்ள மேரிமாதா மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் கமலக்கண்ணன். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 28 ம் தேதி 9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகாரின் பேரில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸார் இவரை கைது செய்தனர். இது குறித்த விசாரணை போக்சோ தேனி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞராக ரக்சிதா ஆஜரானார். விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில் நீதிபதி எஸ்.எழில், 3ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.