திருச்சி விரைவு செய்திகள்
11 May 2026, 11:38 pm

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கைது

சிவகங்கை, மே 11- சிவகங்கை மாவட்டத்தில் சாலைப்பணி ஒப்பந்ததாரரி டம் ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றதாக நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் பெரிய கிளுகிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் ஒப்பந்ததாரராக இருந்து சாத்த ரசன்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மூன்று பகுதிகளில் ரூ.2.5 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளை மேற்கொண் டிருந்தார். இந்த பணிகளுக்கான தொகை பல்வேறு கட்டங்க ளாக வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ரூ.18 லட்சத்தை பெறுவதற்காக நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிமை கந்தசாமி தொடர்ந்து சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, நிலுவைத் தொகையை வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டு அதிகாரி அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கந்தசாமி சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், ரசாயனம் தடவிய ரூ.1 லட்சத்தை கந்த சாமியிடம் வழங்கி, அதை அதிகாரியிடம் கொடுக்க அறி வுறுத்தினர். அதன்படி, திங்களன்று கந்தசாமி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் சையது இப்ராஹிமிடம் பணத்தை வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்த னர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் காரணமாக நெடுஞ்சாலைத்

உலக வலசைப் பறவைகள் தினம் புத்தளம் உப்பளத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

கன்னியாகுமரி, மே 11- உலக வலசைப் பறவைகள் தினத்தை முன்னிட்டு புத்தளம் உப்பளத்தில் பறவைகளுக்கு வளையமிடுதல் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் உப்பளத்தில், நிபுணர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனப் பாது காவலர்களை ஒன்றிணைத்து, பறவைகளுக்கு வளைய மிடுதல், பறவைகளை விடுவித்தல் மற்றும் பறவைகளைக் கண்காணித்தல் ஆகியவை குறித்த கள அடிப்படை யிலான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அமர்வு நடத்தப் பட்டது. இந்த கருத்தரங்கில், மாவட்ட வன அலுவலர் டாக்டர் அன்பு, பூதபாண்டி சரக அலுவலர் என். அன்பழகன், களி யல் சரகத்தைச் சேர்ந்த முகமது மொஹிதீன் அப்துல் காதர், அழகியபாண்டியபுரம் சரகத்தைச் சேர்ந்த கலை யரசன் மற்றும் வேலிமலை சரகத்தைச் சேர்ந்த கலை மணி உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகளும், நாற்பதுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்களும் கலந்து கொண்ட னர். வலசைப் பறவைகள் கண்காணிப்பு அறக்கட்டளை யின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ். பாலச்சந்தி ரன், தனது குழுவினருடன் இணைந்து இந்த நிகழ்வை வழிநடத்தினார். விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஆர் தர்மரஜினி மற்றும் பறவை ஆர்வலர் பொன்காசி ஆகியோரும் இந்த அமர்வில் பங்கேற்றனர். பறவைகளுக்கு வளையமிடும் நுட்பங்கள், பாது காப்பாக கையாளுதல் முறைகள் மற்றும் வலசைப் பறவை களை விடுவித்தல் ஆகியவற்றின் செய்முறை விளக்கங்க ளில் இந்த நிகழ்ச்சி கவனம் செலுத்தியது. மேலும், பறவை களின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்காகக் கண்கா ணிப்பதன் முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டி யது. இந்த அமர்வின் போது, ரஷ்யாவின் ஆர்க்டிக் பகுதிகளி லிருந்து பயணித்த வலசைப் பறவைகளை நெருக்க மாகக் கவனித்து, மென்மையாகக் கையாளும் ஒரு தனித்துவமான வாய்ப்பு பங்கேற்பாளர்களுக்குக் கிடைத்தது. வளையமிடும் செயல்முறைக்குப் பிறகு, இந்த நீண்ட தூர வலசைப் பறவைகளைத் தொட்டுப் பாதுகாப்பாக விடுவிக்க முடிந்ததில், பங்கேற்பா ளர்களில் பலர் பெரும் உற்சாகத்தையும் வியப்பையும் வெளிப்படுத்தினர்.

முத்தால் நகரில் குப்பையை அகற்ற கோரி சிபிஎம் மனு

விருதுநகர், மே 11- விருதுநகர் அருகே யுள்ள முத்தால் நகரில் தேங் கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது. இதுகுறித்து கிளைச் செயலாளர் ஆர்.நாகேந்தி ரன் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது: விருதுநகர் ஒன்றியத் திற்கு உட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில் சுமார் 60 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் தினசரி வீடு தோறும் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியை ஊராட்சி நிர்வா கம் முறையாக மேற்கொள்ள வில்லை. இதனால் பொது மக்கள் பல இடங்களில் குப்பைகளை கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, முத்தால் நகர் சாலையில் உள்ள மின் மாற்றி முன்பு அதிகளவில் குப்பைகள் குவிந்து கிடப்ப தால் சுகாதார சீர்கேடு ஏற் பட்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரச்சனை தொடர்பாக கடந்த ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும், பிப்ரவரி 19ஆம் தேதி ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தி லும் புகார் மனு அளிக்கப் பட்டதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே, முத்தால் நகரில் குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்றி, சுகா தாரமான சூழலை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத் தப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியை வற்புறுத்தாமல் தலைமையாசிரியர் பதவி உயர்வு கோரி வழக்கு மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் உத்தரவு

மதுரை, மே 11 – தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNT) தேர்ச்சி பெற வேண்டும் என வற்புறுத்தாமல் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஆர்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.மரியா ஆண்டனி டெஸ்டோனிஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை ஆர்.சி. மறைமாவட்டத்திற்கு உட்பட்ட ஆர்.சி. தொடக்கப் பள்ளிகளில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என கட்டாயப்படுத்தாமல், தமக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “தலைமையாசிரியரை தேர்வு செய்வதற்காக நிர்வாகம் நடத்தும் நேர்முகத் தேர்வில் மட்டும் மனுதாரர் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார். இருப்பினும், வழக்கு இறுதி முடிவுக்கு வரும் முன் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு உரிமை கோர முடியாது” என தெரிவித்தார். மேலும், மனு தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர், ஆர்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு சிவகங்கை, மே 11- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தஞ்சாகூர் கிராமத்தில் செயல் பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ உப கரணங்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமம் அனுபவித்து வருவதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். தஞ்சாகூர் ஆரம்ப சுகாதார மையத் திற்கு சுற்றுவட்டார 18 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக தின மும் வந்து செல்கின்றனர். நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கிராம மக்களால் வழங்கப்பட்ட சில பொருட்கள் காணாமல் போய்விட்டதாக வும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் செயல்படாததால் கர்ப்பி ணிகள் உள்ளிட்ட பல நோயாளிகள் பாதிக் கப்பட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சி யர் நேரில் ஆய்வு செய்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுக் கொண்டு வர மனைவி கோரிக்கை

சிவகங்கை, மே 11- சிவகங்கை மாவட்டம் அல்லூர் பனங் காடியைச் சேர்ந்த சிவனேசன் என்பவர் குடும்ப சூழ்நிலைக்காக இஸ்ரேலில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வார மாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் பணியாற்றிய நிறு வனம் உரிய சிகிச்சை அளிக்காத கார ணத்தால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அங்கு உடன் பணி யாற்றியவர்கள் அவரது மனைவி தவ மணிக்கு தெரிவித்தனர். இதையடுத்து, தவ மணி தனது இரு மகன்கள் மற்றும் உற வினர்களுடன் மாவட்ட ஆட்சியர் கா.பொற் கொடியை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில், தனது கணவரின் உடலை விரை வாக இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டு வரவும், குடும்பத்திற்குரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளை: 2 பேர் கைது

ஒட்டன்சத்திரம், மே 11- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மைனர் காலனி யைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் தங்கவேல் (58) தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மற்றும் அவரது மனைவி கடந்த மாதம் 24ஆம் தேதி பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி எதிர் வீட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சண்முகம், தங்கவேல் வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றச் சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் வேடசந்தூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். பெங்களூருவில் இருந்து விரைந்து வந்த தங்கவேல், வீட்டில் ரகசியமாக வைத்திருந்த 50 பவுன் நகைகளில் 2 பவுன் நகை காணாமல் போயிருப்பதாக புகார் அளித்தார். இதுகுறித்து வேடசந்தூர் காவல் ஆய்வாளர் கணேச மூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான கைரேகைகளை ஆய்வு செய்ததில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருப்பூரைச் சேர்ந்த பழக்கமான கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் திருப்பூருக்கு சென்று, கருவம்பாளையத்தைச் சேர்ந்த நவீன்ராஜ் (31) மற்றும் ஆனந்தகுமார் (36) ஆகியோரை கைது செய்து வேடசந்தூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். போலீசார் இருவரிடமிருந்தும் 2 பவுன் நகைகளை பறி முதல் செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பத்தில் போதை மாத்திரை: இருவர் கைது

தேனி, மே 11- விற்பனைக்கு போதை மாத்திரை வைத்திருந்த இரு வரை கம்பம் காவல்துறையினர் கைது செய்தனர். கம்பம் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் கம்பம் ஏழரசு கோவில் பகுதி யில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றி ருந்த 2 பேரை பிடித்து சோதனை மேற்கொண்டபோது அவர்களிடம் 10 (அல்பிரஸோலம்) எனும் மாத்திரை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கூடலூர் அண்ணாநகரைச் சேர்ந்த தினேஷ்குமார் (26), மாலையம்மாள்புரம் தெருவைச் சேர்ந்த சரவணக்குமார் (52) என்பது தெரியவந்தது. இதில் சரவணகுமார் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் மெடிக்கல் கடை நடத்தி வருவது தெரியவந்தது. இதை யடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ்குமார், சரவணக்குமார் ஆகியோரை கைது செய்த னர்.

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

தேனி, மே 11- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 114 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 114 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜ குமார், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத்பீடன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லையில் இடதுசாரிகள்- விசிக ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, மே 11- ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் வணிக சமையல் எரிவாயு விலை உயர்வை கைவிட வேண்டும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்து ரயில்வே ஊழியர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் ரயில்வேயில் 29 ஆயிரம் பணியிடங்கள் குறைப்பை கைவிடக் கோரி நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி. விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சடையப்பன், நிர்வாக குழு உறுப்பினர் காசி விஸ்வநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன்,எம்.சுடலைராஜ், விடுதலை சிறுத்தை கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி செயலாளர் எம் சி சேகர் , பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் தமிழ்ச்செல்வன், மண்டலச் செய லாளர் முத்துவளவன் ஆகியோர் பேசினர், வி.சி.க நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் எம் சி கார்த்திக் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மாரி செல்வம், ஆர்.மதுபால், சிபிஎம் 55வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்து சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கு.பழனி, ஆர்.முருகன், துரை. நாராயணன் மற்றும் சிபிஎம் வி.சி.க நிர்வாகிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ,மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

களக்காடு தலையணை திறப்பு

திருநெல்வேலி, மே 11- நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்ப கத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலை யணை உள்ளது. வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள தலைய ணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவிய படி அதிக குளிர்ச்சியுடன் காணப்படுவதால் அதில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வரு கின்றனர். இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் தலையணை நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து குறைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி முதல் தலையணை வனப்பகுதி மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும். குளிக்கவும் தடை விதிக்கப் பட்டது. இதற்கிடையே களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை மழை பெய்தது. இதனால் தலை யணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதை யடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்கு னர் சிசில் கில்பர்ட் உத்தரவின் பேரில் கடந்த 6 ஆம் தேதி மூடப்பட்ட களக்காடு தலையணை திங்கட்கிழமை முதல் திறக்கப்படுவதாக களக்காடு வன சரகர் பிரபாகரன் அறி வித்துள்ளார்.