திருச்சி விரைவு செய்திகள்
24 Sept 2026, 8:39 pm

கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து10-க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம்

சிவகங்கை, செப்.24-சிவகங்கை மாவட்டம், திருமாஞ்சோலை அருகே ஏனாதி பகுதியில், பூவந்தியில் இருந்து ஏனாதி வழியாக இடைக்காட்டூர் சென்ற கல்லூரி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர்.காயமடைந்த மாணவிகளை பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பேருந்தில் இருந்த மற்ற மாணவிகள் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்த மாற்று பேருந்து மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

கத்தி முனையில் நகை பறிப்பு 48 மணி நேரத்தில் குற்றவாளி கைது

இராமநாதபுரம், செப்.24-கீழக்கரை அருகே பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி, தங்க நகைகளை பறித்துச் சென்ற நபரை போலீசார் 48 மணி நேரத்தில் கைது செய்தனர்.

கீழக்கரை பக்கிரப்பா தர்கா–கிதார் அமீன் தோப்பு பகுதியில் தண்ணீர் எடுக்கச் சென்ற வீரன்வலசை கோத்

தக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வள்ளி (50) என்பவரை அடையாளம் தெரியாத நபர் கத்தியைக் காட்டி மிரட்டி, தாலியை கழற்றுமாறு கூறி சுமார் ஒன்றரை பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார், இராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த கோட்டர் கோவிந்தராஜை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு பவுன் தங்க நகை மற்றும் மற்றொரு நகையை விற்றதில் மீதமிருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.பின்னர் கோவிந்தராஜை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

அ.தரைக்குடியில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்

இராமநாதபுரம், செப்.24-இராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் கால்நடை மருந்தகத்துக்கு உட்பட்ட அ.தரைக்குடி ஊராட்சியில் சிறப்புகால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பரமக்குடி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி முகாமை தொடங்கி வைத்தார். கால் நடை உதவி மருத்துவர்கள் சுவாதி, பூபதி, இம்ரான் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆயிஷா கனி, சிதம்பரம், ராம்ஜி ஆகியோர் சிகிச்சை மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர்.முகாமில் 62 கால்நடை வளர்ப்போரின் 1,349 கால்நடைகள் மற்றும் கோழிகள் பயனடைந்தன.

டாஸ்மாக் கடையில் தகராறுஇருவருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது

இராஜபாளையம், செப்.24-இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் இருவரை கத்தியால் குத்தியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆவரம்பட்டி பாரதியார் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் (27), தாட்கோ காலனியைச் சேர்ந்த ஆரோக்கி

யராஜ் (27) ஆகியோர் மது வாங்கச் சென்றபோது, ஆவரம்பட்டி ஒத்தப்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (22), மதியழகன் (23) ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் தகராறை விலக்கினர்.

இதையடுத்து அஜித்குமார், மதியழகன் ஆகியோர் பாரதியார் தெருவுக்குச் சென்று சதீஷ்குமாரின் முதுகிலும், ஆரோக்கியராஜின் தலையிலும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. காயமடைந்த இருவரும் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்த வடக்கு போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் அடைத்தனர். இதுகுறித்து சார்பு ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மது விற்றவர் கைது

வத்திராயிருப்பு, செப்.24-வத்திராயிருப்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடக்குத் தெருவில் ரேசன் கடை அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வெள் ளைச்சாமி என்பவர் அரசு அனுமதியின்றி மதுபாட்டில் களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவரிடமிருந்து 28 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, வெள்ளைச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

காளையார்கோவிலில் குப்பைகளை அகற்றக் கோரி மாதர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

சிவகங்கை, செப்.24-காளையார்கோவில் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி, சுகாதாரச் சீர்கேட்டை தடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் வியாழனன்று நடைபெற்றது.

காளையார்கோவில் நகரின் மையப்பகுதியில், சிவகங்கை சமஸ்தானத்தின் இரண்டாவது மன்னர் முத்துவடுகநாதரின் நினைவு சமாதி அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தினமும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாகவும், அவை மலைபோல் குவிந்து துர்நாற்றம் வீசுவதுடன், காற்று மற்றும் குடிநீர் மாசுபட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து, குப்பைகளை ஊருக்கு வெளியே தொலைவில் உள்ள இடத் தில் கொட்டி முறையாக அக

ற்ற வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. தொடர்ந்து, மாவட்டச் செய

லாளர் ரோகிணி தலைமையில் ஊராட்சி ஒன்றிய ஆணை யாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நிகழ்வில் சங்க மாவட்ட துணைத் தலைவர் சண்முகப் பிரியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காளையார் கோவில் ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட் டக் குழு உறுப்பினர் மெய் யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், அவற்றை சேகரித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொட்டும்போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தினர் தெரிவித்தனர்.

6 பவுன் நகை திருட்டு வழக்கில் ஒருவர் கைது

விருதுநகர், செப்.25-விருதுநகர் அருகே வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட் டார்.கே.கே.எஸ்.எஸ்.என். நகரைச் சேர்ந்த நந்திராஜன், கடந்த செப்.18-ஆம் தேதி வீட்டில் இல்லாத நேரத் தில் மர்ம நபர் கதவை உடைத்து உள்ளே புகுந்து 6 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றதாக விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், இராமநாதபுரம் மாவட் டம் வடக்கு உரணங்குடியைச் சேர்ந்த வேதமுத்துவின் மகன் வெற்றிவேல் (52) திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், திருடப்பட்ட 6 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

இராமநாதபுரம் நகராட்சியில் போலி ரசீது மோசடி 5 பேர் கைது; ரூ.36,250 ரொக்கம், போலி ரசீதுகள் பறிமுதல்

இராமநாதபுரம், செப்.24-இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சியின் அசல் ரசீது போல போலி ரசீதுகளை அச்சடித்து, இருசக்கர வாகன நிறுத்தக் கட்டணம்வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், வாகன நிறுத்துமிடத்தில் போலி ரசீதுகள் மூலம் கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக் கப்பட்டது. அப்போது 19 போலி ரசீது புத்தகங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.12,750 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், அச்சகத்தில் மொத்தம் 52 போலி ரசீது புத்தகங்கள் அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், மாரிமுத்து வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக் கில் வராத ரூ.23,500 ரொக்கம் மற்றும் போலி ரசீதுகள்கைப்பற்றப்பட்டன.

இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளர் ரமேஷ், வருவாய் உதவியாளர்கள் மாரிமுத்து, ரிஷி கேசவன், துப்புரவு மேற்பார் வையாளர் ஆனந்தன் மற்றும் அச்சக உரிமையாளர் ஜோசப் ஜெயராஜன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். இதற்கு மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காளையார்கோவிலில் குப்பைகளை அகற்றக் கோரி மாதர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்

சிவகங்கை, செப்.24-காளையார்கோவில் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி, சுகாதாரச் சீர்கேட்டை தடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் வியாழனன்று நடைபெற்றது.காளையார்கோவில் நகரின் மையப்பகுதியில், சிவகங்கை சமஸ்தானத்தின் இரண்டாவது மன்னர் முத்துவடுகநாதரின் நினைவு சமாதி அருகே குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தினமும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாகவும், அவை மலைபோல் குவிந்து துர்நாற்றம் வீசுவதுடன், காற்று மற்றும் குடிநீர் மாசுபட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர்.இதையடுத்து, குப்பைகளை ஊருக்கு வெளியே தொலைவில் உள்ள இடத் தில் கொட்டி முறையாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் ரோகிணி தலைமையில் ஊராட்சி ஒன்றிய ஆணை யாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நிகழ்வில் சங்க மாவட்ட துணைத் தலைவர் சண்முகப் பிரியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காளையார் கோவில் ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட் டக் குழு உறுப்பினர் மெய் யப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், அவற்றை சேகரித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொட்டும்போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தினர் தெரிவித்தனர்.

வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் சிறுவன் உட்பட 3 பேர் கைது

திருவில்லிபுத்தூர், செப்.24-வத்திராயிருப்பு அருகே வாகனத் தணிக்கையின்போது வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளைகொண்டு சென்ற சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து, 18 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.

வத்திராயிருப்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், வத்திராயிருப்பு–மகாராஜபுரம் சாலையில் வியாழனன்று மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தியபோது, அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை பிடித்து சோதனையிட்டதில், கவரில் நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து வத்திராயிருப்பு புதூரைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் கவிராஜன் (19) மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து எங்கிருந்து கிடைத்தது, இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என் பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பெண்களுக்கான தொழில் திறன் பயிற்சி தொடக்கம்

60-க்கும் மேற்பட்ட

பெண்கள் பங்கேற்புதிருவில்லிபுத்தூர், செப்.24-திருவில்லிபுத்தூர் வாப்ஸ் அலுவலகத்தில், ஐஐஎஃப்எல் சமஸ்தா நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு திட்டம் மற்றும் வாப்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான ஒரு மாத கால அடிப்படை தையல் பயிற்சி தொடக்கவிழா நடைபெற்றது.

மதுரை வாப்ஸ் நிறுவன திட்ட அலுவலர்டாக்டர் எம்.சுப்புராஜன் வரவேற்றார். திருவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர்கள் சுதந்திரகனி, மாணிக்கசெல்வி ஆகியோர் பெண் கள் பாதுகாப்பு மற்றும்பாதுகாப்புடன் தொழில் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமூக நலத்துறை ஊரக நல அலுவலர்கள் பூங்கொடி, கோவிந்தம் மாள் ஆகியோர் பெண்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை திட்டங் கள் குறித்து விளக்கினர்.

மேலும், ஏற்கெனவே சிறுதானிய மதிப்புக்கூட்டல் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ்கள், எம்.எஸ்.எம்.இ. சான்றிதழ் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட பெண் கள் கலந்து கொண்டனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.ஆனந்தராஜ் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை கள அலுவலர் என்.கொடிமலர் செய்திருந்தார்.