41 மாத பணிக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வலியுறுத்தல்
7 Aug 2026, 11:32 pm

41 மாத பணிக் காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஆக. 7- தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் திருச்சி கோட்டம் 10 ஆவது பேரவை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கோட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கோட்ட துணைத் தலைவர் மலர்மன்னன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் வரவேற்றுப் பேசினார். மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன் துவக்க உரையாற்றினார். தணிக்கையாளர்கள் சௌந்தர், தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டச் செயலாளர் இளங்கோவன் செயலாளர் அறிக்கையையும், கோட்டப் பொருளாளர் கோவிந்தராஜன் வரவு - செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, மாவட்டச் செயலாளர் பிரேம்குமார், சத்துணவு சங்க மாவட்டச் செயலாளர் சந்திரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத் தலைவர்கள் மகேந்திரன், பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிக்காலத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். தமிழக அரசு மேல்முறையீடு செய்யாமல், உயர்நீதிமன்ற ஆணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். உயிரிழந்த சாலைப் பணியாளர்களின் குடும்பத்தில் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவர் பிரான்சிஸ், கோட்ட இணைச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் நிறைவுரையாற்றினார். கோட்ட இணைச் செயலாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.