தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

5 Jun 2026, 10:41 pm
திருச்சி விரைவு செய்திகள்

புதிய பாட நூல்களுக்கான பயிற்சி

பாபநாசம், ஜுன் 5- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார வள மையம் சார்பில், பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல், 3 ஆம் வகுப்பு வரையிலான, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பாட நூல்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில், பாபநாசம் வட்டாரத்தைச் சேர்ந்த 120 தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் புதிய பாடத் திட்ட அறிமுகம், மாதிரி வகுப்புகள், மாணவர்களுக்கு ஆர்வமூட்டல் செயல்பாடுகள், விழுமிய கல்வி, கதை, பாட்டு, கைவினை சார்ந்த பயிற்சி நடைபெற்றது.

தீ விபத்து பாதுகாப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர், ஜுன் 5- பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில், 6 மற்றும் 7 ஆம் தேதி என 2 நாட்கள் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணிமுதல் 5 மணி வரையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தீயணைப்பு கருவிகள் உபயோகிக்கும் முறை, கேஸ் சிலிண்டர் தீ விபத்து, மின்சார தீ விபத்து, வாகன தீ விபத்து, பட்டாசு தீ விபத்து ஆகியவற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது பற்றிய சிறப்பு வகுப்புகள் மற்றும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புகையிலை பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது

தஞ்சாவூர், ஜுன் 5- தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே, புதுக்குடி - நவலூர் கூட்டுச்சாலையில், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி காவல் ஆய்வாளர் ஐயப்பன் தலைமையிலான காவல்துறையினர் வியாழக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அதில் கடத்தி வரப்பட்ட ஹான்ஸ், விமல், கூல்லிப் உள்ளிட்ட 1,284 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, புகையிலை பொருட்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த சேலத்தைச் சேர்ந்த சுதாகர்(30), நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ்குமார்(36) ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை விசாரணை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

அரியலூர், ஜூன் 5: அரியலூர் மாவட்ட ஆயுதப்படை கூட்டரங்கில், காவல்துறை விசாரணை அதிகாரிகளுக்கு நேற்று சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி கலந்துகொண்டு புலனாய்வு குறித்து வகுப்பு எடுத்தார். அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சட்டம்-ஒழுங்கு தலைமை காவலர்கள் முதல், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை உள்ள 27 காவல்துறையினருக்குக் குற்றச் சம்பவம் நடைபெற்ற இடத்தை புலனாய்வு செய்தல், தடயங்களைச் சேகரித்தல் மற்றும் வழக்கு பதிவு செய்தல் முதலியவை குறித்து வாரத்தில் மூன்று நாட்கள் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, விபத்து ஏற்பட்டால் சம்பவ இடச் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்பது குறித்த மாதிரி பயிற்சி வகுப்பு கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் தலைமையில் தத்ரூபமாக நடைபெற்றது.

கோவில் விழா மேடை திறப்பு

பேராவூரணி, ஜுன் 5- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காடு ஊராட்சி, ஸ்ரீ காத்தாயி அம்மன், ஸ்ரீ வால் முனீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்கள் அமைந்திருக்கும் கோவில் இடத்தில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விழா மேடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், விழா மேடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பெரம்பலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை

பெரம்பலூர், ஜுன் 5- பெரம்பலூர் இணை சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ 13 ஆயிரத்து 500 பணத்தை கைப்பற்றினர். பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, மதரஸா சாலையில் உள்ள இணை சார் பதிவாளர் அலுவலகத்தில், வீட்டுமனை மற்றும் நிலங்களை விற்பது வாங்குவது தொடர்பான பத்திரம் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக, பெரம்பலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹேமசித்ரா, இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா மற்றும் 3 போலீசார் கொண்ட குழுவினர், வியாழக்கிழமை மாலை திடீரென இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் புகுந்து இரவு 9 மணிவரையிலும் சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்த புரோக்கரிடமிருந்து கணக்கில் வராத ரூ.13 ஆயிரத்து 500 பணத்தை கைப்பற்றினர். மேலும், பிடிப்பட்ட பணம் யாருடையது, எதற்காக பெறப்பட்டது என்பது குறித்து சார்பதிவாளர்(பொ) திருமுருகன் மற்றும் அலுவலர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

பட்டாசு தயாரிக்கும் போது விபத்து: ஒருவர் படுகாயம்

திருவாரூர், ஜுன் 5- திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில், பாடைகட்டி மாரியம்மன் கோவில் அருகில் சுடுகாட்டு வழிநடப்பு என்ற இடத்தில் வள்ளி என்பவருக்குச் சொந்தமான வெடி பொருள் உற்பத்தி செய்யும் குடோனில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். வியாழக்கிழமை, இந்த குடோனில் ஐந்து நபர்கள் வெடிமருந்தை பிரித்து வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நண்பகல் நேரத்தில் கடுமையான வெயில் இருந்த நிலையில், ராகுல் என்பவர் வெடி மருந்துகளை கையாளும் போது அதிக அழுத்தத்தின் காரணமாக அங்கு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ராகுல் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். மற்ற நால்வரும் பாதுகாப்பான முறையில் தப்பித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வலங்கைமான் தீயணைப்பு துறையினர் வந்து உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். படுகாயம் அடைந்த ராகுலை மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வெடி விபத்தினால் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக வலங்கை மான் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், பட்டாசு உற்பத்தி நிலைய உரிமை யாளர் அருணகிரிநாதன்(57) மற்றும் வள்ளி(47) ஆகிய இருவர் மீதும் கவனக்கு றைவாக இருந்ததாக வலங்கைமான் காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.