தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

12 Aug 2026, 9:37 pm
திருச்சி விரைவு செய்திகள்

ஆக.19, 20 தேதிகளில் தோவாளை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

நாகர்கோவில், ஆக.12 -‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டமானது மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் தோவாளை வட்டத்தில்19.8.2026 அன்று காலை 9 மணிக்கு துவங்கி மறுநாள் 20.8.2026 காலை 9 மணி வரை நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை முதல் நிலை அலுவலர்களும் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில்ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்திடுவர். மேலும் மாவட்டஆட்சியர் 19.8.2026 அன்று பிற்பகல் 4.30 மணி முதல் 6 மணி வரை தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.எனவே தோவாளை வட்டத்திலுள்ள பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் தங்கள்பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்மு.பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறையில் பலி தர்ப்பணம்:ஏராளமான மக்கள் பங்கேற்பு

குழித்துறை, ஆக.12-ஆடி அமாவாசையையொட்டி குழித்துறையில் பலி தர்ப்பணம் செய்வதற்கு ஏராளமான பொது மக்கள்பங்கேற்றனர்.

குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் 101 ஆவது வாவுபலி பொருட்காட்சி ஆக.17 ஆம் தேதிநிறைவடைகிறது. பொருட்காட்சியின் முக்கிய தினமான வாவுபலி ஆடி அமாவாசையை முன்னிட்டுகடைப்பிடிக்கப்பட்டது.

இதற்காக குழித்துறை மகாதேவர் கோவில் அருகே படித்துறை சுத்தம் செய்யும் பணி இரவு பகலாக கடந்த ஒருவாரமாக நடந்தது. இதற்காக குழித்துறைமகாதேவர் கோவில் அருகே சுமார் 100 அடி நீளத்திற்கு 40 அடி அகலத்திற்கு மெகா ஷெட் போடப்பட்டது. ஏராளமான மக்கள் தமது முன்னோர்களை நினைத்து தாமிரபரணி ஆற்றில் குளித்து பலி தர்ப்பணம் செய்தனர். பொது மக்களின் பொருட்களைப் பாதுகாப்பதற்காக தனிவசதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

அரசுப் பேருந்து - பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி

தென்காசி, ஆக.12 -தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அரசுப் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியகோர விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் அருகே உள்ள மீன்துள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாப்பு மகன் அய்யாத்துரை (40). இவரது உறவினர்தூத்துக்குடியைச் சேர்ந்த பகத்சிங்மகன் கலையரசன் (23). கலையரசனுக்கு திருமணமாகவில்லை. அய்யாத்துரைக்கு திருமணமாகிவிட்டது. அய்யாத்துரை சென்னையில் உள்ள தனியார்நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஆக.10 அன்று இரவு கலையரசனும், அய்யாத்துரையும் இருசக்கர வாகனத்தில் சங்கரன்கோவில் அருகே திருநெல்வேலி செல்லும்நெடுஞ்சாலையில் குதிரைக்கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர். இருசக்கர வாகனத்தை கலையரசன்ஓட்டினார். அய்யாத்துரை பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.

அப்போது திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்த அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின. இதில்இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கலையரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கலையரசனின் உடலை மீட்டு கூராய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தஅய்யாத்துரையை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அய்யாத்துரை உயிரிழந்தார்.இதுகுறித்து சின்னகோவிலாங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பி.எம். கிசான் நிதி உதவி தொடர்ந்து பெற விவசாய அடையாள அட்டை எண் கட்டாயம்

நாகர்கோவில், ஆக.12 - பாரத பிரதமரின் பி.எம். கிசான் நிதி உதவி திட்டத்தின்கீழ் பயன்பெற்று வரும் அனைத்து விவசாயிகளும் வரும்காலங்களில் தொடர்ந்து ஒன்றிய அரசு வழங்கிடும் தவணைகளைப் பெற்றிட தங்களது நில உடைமைஆவணங்களை பதிவு செய்து விவசாய அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை தங்களது நில உடைமை விபரங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்களது நில உடைமைஆவணங்களை வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விவசாயிகளுக்கான அடையாள எண்பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண் விற்பனைத் துறைமூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு மானியத் திட்டப் பயன்களுக்கும் அடிப்படையாக இந்த அடையாள எண்இருக்கும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேளாண் அடுக்கக வலைதளத்தில் இதுவரை நில உடமை விவரங்களை பதிவு செய்யாத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை உதவிஇயக்குநர் அலுவலகத்தை ஆதார் எண், கைப்பேசி எண், நில ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வேளாண் அடுக்கக வலைதளத்தில் இதற்கு முன்னர் பதிவு செய்த விவசாயிகள் அதே விவசாய அடையாள எண்ணில், வேறு பகுதிகளில் தங்களுக்கு இருக்கும் பிற நிலங்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அதே அடையாள எண்ணில் இணைத்திட வேண்டும்.

ஒற்றை சாளர முறையில் அனைத்து துறை பயன்களை பெறவும், கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய முறையில் பயிர்க் கடன் பெறவும், பி.எம்.கிசான் மற்றும் பயிர் காப்பீடு போன்ற இதர ஒன்றிய மற்றும்மாநில திட்டங்களால் பயனடையவும் தமிழ்நாட்டில் விவசாயம் சார்ந்த திட்டபலன்கள் வழங்கும் அனைத்து அரசுதுறைகளுக்கும் இத்தரவுகள் வழங்கப்பட்டு, இதன் அடிப்படையிலேயே திட்ட பயன்கள் வழங்கப்படும்.பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாய பெருமக்கள் தங்கள் ஆதார் எண், வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்திடவும் இ-சேவை மையத்தினை அணுகி ekyc விவரங்களை பதிவேற்றம் செய்திடவும்வேண்டும்.

இதற்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 13, 14, 17, 18 ஆகிய தேதிகளில் அந்தந்த வருவாய் கிராமங்களில்நடைபெறும். விவசாயிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கேட்டுக்கொண்டுள்ளார்.

வி.கே.புரம் அருகே பரபரப்பு​கரடி தாக்கி பைக்கில் சென்ற வாலிபர் படுகாயம்

திருநெல்வேலி, ஆக.12-வி.கே.புரம் அருகே உள்ள தியாவைச் சேர்ந்த முருகன் மகன் முத்துக்குமார் (32). அவரது தம்பி கல்யாணசுந்தரம் (30). இவர்கள் இருவரும் புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு ஆடி அமாவாசையையொட்டி தர்ப்பபணம் செய்வதற்காக பாபநாசத்திற்கு பைக்கில் புறப்பட்டனர்.

முத்துக்குமார் பைக்கை ஓட்டினார். வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் பத்திரகாளியம்மன் கோவில் அருகே சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த கரடி பைக்கில் வந்த முத்துக்குமாரை தாக்கியது. இதில் பைக் கவிழ்ந்து முத்துக்குமாரும், கல்யாணசுந்தரமும் கீழே விழுந்த

னர். கரடி தாக்கியதில் முத்துக்குமாருக்கு முகம், தோள் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஆரம்ப சுகாதார

நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த ​சம்பவம் வி.கே.புரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பாபநாசம் பகுதியில் மூன்று கரடிகள் கூண்டில் சிக்கி அவைகளை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். கரடி தாக்கி ஒருவர் இறந்துள்ளார்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தென்காசி, ஆக.12 -தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2026 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், 21.8.2026(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே,மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களையும் சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களதுவிவசாயம் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விவசாயிகள் அளிக்கும் மனுக்களில் தங்களது கைப்பேசி எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

தாக்கி இளைஞர் பலி

தூத்துக்குடி, ஆக.12-தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன் (23). இவர் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில்நடைபெற்று வரும் புதிய நடைமேடை அமைக்கும் பணியில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.திங்களன்று மாலை வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த சம்சுதீன், இரும்பு கம்பிகளை வெட்டும் பணியைமேற்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருச்செந்தூர் காவல்துறையினர், சம்சுதீனின் உடலைக் கைப்பற்றி கூராய்விற்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

களக்காடு தலையணையில்குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க ​சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

திருநெல்வேலி, ஆக.12 -களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணையில் ஓடும் குளிர்ந்த நீரில் குளிக்க தினசரி ஏராளமானோர்கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.களக்காடு தலையணை நுழைவு கேட்டில் இருந்து தலையணை ஆறு வரை 1.5 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலைபழுதடைந்து காணப்படுகிறது. 25 ஆண்டுகளாக பராமரிப்பும் இல்லாததால் சாலை சிதிலமடைந்துள்ளது. இந்தசாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது.சாலையில் வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி பழுது ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுலாபயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். தலையணைக்கு செல்லும் நபர் ஒருவருக்கு ரூ.50 வீதம் நுழைவு கட்டணம்வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வனத்துறைக்கு வருமானம் கிடைத்தும் சாலையை சீரமைக்கவனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடன் இருப்பதாக சுற்றுலா பயணிகள் புகார்தெரிவிக்கின்றனர். எனவே பழுதடைந்த தலையணை சாலையை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நெல்லை கோட்ட அஞ்சலகங்களில் தேசியக் கொடி விற்பனை தொடக்கம்

திருநெல்வேலி, ஆக.12 -இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தின விழா ஆக.15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி பொதுமக்கள் அனைவரும் பெருமையுடன் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட ஏற்பாடு நடந்து வருகிறது. மேலும் அரசு மற்றும் தனியார்அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றிட ஒன்றிய அரசு கேட்டு கொண்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை தற்போதுநடைபெற்று வருகிறது. ஒன்றிய தபால் துறை உத்தரவின்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை மற்றும் கிளை அஞ்சலகங்களில் தேசிய கொடிகள் போதியஅளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்நிலையில் நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “நெல்லை கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் கிளை அஞ்சலகங்களிலும் தேசிய கொடிவிற்பனை நடந்து வருகிறது.

தேசியக் கொடியின் விலை ரூ.25. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளிமற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்கள், வணிகர்கள் எளிதாக மூவர்ணக் கொடிவாங்கி பயன்பெறும் வகையில் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்கள் உட்பட அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ​தேசிய கொடிகள் மொத்தமாக தேவை இருப்பின் 0462 2568060 என்றதொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை தபால் கோட்டத்திற்கு மட்டும் மொத்தம் 8 ஆயிரம் தேசிய கொடிகள் வரப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க அழைப்பு​நெல் உற்பத்தியில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு

திருநெல்வேலி, ஆக.12 -பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் பங்கேற்க அழைப்பு விடுத்து நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளசெய்திக்குறிப்பில், “விருது போட்டியில் பங்கேற்க விரும்பும்விவசாயி, குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் பயிரிட்டவராக இருக்கவேண்டும். அத்துடன், தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்த முறையில் நெல் சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயியாகவும் இருக்க வேண்டும். குத்தகைதாரர்களும் இப்போட்டியில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள். போட்டியில்பங்கேற்கும் விவசாயிகள் அரசு அங்கீகரித்து அறிவித்துள்ளசன்ன நெல் ரகங்களை மட்டுமே பயிரிட்டிருக்க வேண்டும்.​போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் உரியவிண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, ரூ.150 பதிவுக் கட்டணத்தை வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் செலுத்தி பெயர் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவுக் கட்டணம் திருப்பித் தரப்படாது.​விண்ணப்பத்துடன், நெல் பயிரிடப்பட்டுள்ள பரப்பிற்கான சான்று ஆவணங்களான சிட்டா, அடங்கல்ஆகியவற்றையும் கட்டாயம் இணைக்க வேண்டும். கூடுதல் விவரங்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதிவேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத் திட்டங்கள்: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

தூத்துக்குடி, ஆக.12 -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட சட்டம் மற்றும் மாவட்டக் கண்காணிப்புக் குழு தொடர்பான காலாண்டு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 2026-2027 ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக, முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம், நிதி ஒதுக்கீடுவிவரங்கள், வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, மகளிர்திட்டப் பணிகள் மற்றும் தோட்டக் கலைத்துறை சார்பிலானதிட்டங்கள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.

மேலும், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம், தாட்கோ (TAHDCO) மூலம்செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவோர் திட்டம், பிரதான்மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா, நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், அண்ணல் அம்பேத்கர்தொழில் முன்னோடித் திட்டம், சத்துணவுத் திட்டங்கள் மற்றும்டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம்உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் பயனாளிகளின் விவரங்கள் குறித்தும்ஆட்சியர் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர் உட்பட அனைத்து அரசுத்துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

1,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது

தென்காசி, ஆக.12 -தென்காசி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் வேல் முருகன் மற்றும் போலீசார் ஆக.9 ஆம் தேதி அதிகாலை சங்கரன்கோவில் பகுதியில்ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலவன்குளம் அருகே சந்தேகிக்கும் வகையில் வந்த டாடா சுமோவாகனத்தை மறித்துசோதனை செய்ததில் அரசு பொது விநியோக திட்டத்தின் கீழ் ழங்கப்படும் 1,500 கிலோ ரேசன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

தென்காசி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் போலீசார் உடனடியாக ரேசன் அரிசியை பறிமுதல் செய்து வாகனத்தை ஓட்டி வந்த சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை கைது செய்து வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். இதில் 1,500 கிலோ ரேசன்அரிசி மற்றும் அதனைக் கடத்துவதற்கு பயன்படுத்திய டாடா சுமோ வாகனத்தையும் போலீசார் பறிமுதல்செய்தனர்.

செப்.6 கோவில்பட்டியில் இலவச செயற்கைக் கை, கால் அளவீட்டு முகாம்

தூத்துக்குடி, ஆக.12 -கோவில்பட்டியில் செப்.6 ஆம் தேதி இலவச செயற்கைக் கை, செயற்கைக் கால் மற்றும் இதரஉதவி உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீட்டு முகாம் நடைபெறவுள்ளது.

கே.ஆர். குழுமம் & கல்வி நிறுவனங்கள் மற்றும் சென்னை ஃபிரீடம் டிரஸ்ட் இணைந்து நடத்தும் இலவசசெயற்கைக் கை, செயற்கைக் கால் மற்றும் இதர உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீட்டு முகாம்கோவில்பட்டியில் நடைபெறவுள்ளது. கல்லூரி நிறுவனர், கல்வித் தந்தை’ ராமசாமி பிறந்த நாளையொட்டி இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கை, செயற்கைக் கால், சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், வாக்கர், ரோலேட்டர், சிறப்புக் குழந்தைகளுக்கான இருக்கை, நடைபயிற்சி மற்றும்நிற்கும் உபகரணங்கள், ஆர்த்தோசிஸ் (Orthosis) சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு மறுவாழ்வு உபகரணங்கள் அளவெடுக்கப்பட்டு, அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளன. முகாம் செப்டம்பர் 6 ஆம் தேதி (ஞாயிறு) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, கோவில்பட்டிநேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெறும். கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் (நகல்கள்): பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, யுடிஐடி (UDID) அட்டை மற்றும் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை.

முன்பதிவு செய்ய 98433 28155, 95433 43502, 94448 85083, 9344803795 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். வரும் பயனாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும் எனக் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

போலி ஆவணம் தயாரித்து ​பத்திரப் பதிவு சார் பதிவாளர் மீது வழக்கு; ​2 பெண்கள் கைது

​திருநெல்வேலி, ஆக.12 -நெல்லையில் போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்து கொண்ட சார் பதிவாளர் மற்றும் 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் அருகே உள்ள ராஜபதி கீழ தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரதுமனைவி பூரணசெல்வி (33). இவரது தந்தை சங்கரனுக்கு கங்கை கொண்டான் அருகே உள்ள சித்தாரசத்திரம் கிராமத்தில் சொந்தமாக நிலம் இருந்துள்ளது.

சங்கரனுக்கு 2 மனைவி. இவருக்கு பூரணசெல்வி மட்டுமல்லாது, பகவதி (42), சீதாலட்சுமி (47) ஆகிய மகள்க

ளும் உள்ளனர்.இந்நிலையில் சங்கரன் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட சொத்து பங்கீடு தொடர்பான பிரச்சனையில் தன்னிடம் கேட்காமல் பகவதி மற்றும் சீதாலட்சுமி ஆகியோரை மட்டும் கொண்டுசொத்துக்களை பங்கீடு செய்யக் கூடாது என்று பூரணசெல்வி சீராய்வுமனுவை தயார் செய்து கங்கை கொண்டான் சார்பதிவாளர் தங்கபாண்டியனிடம் அளித்துள்ளார். ​ஆனால் சார்பதிவாளர் தங்கபாண்டியன் அதனை மறைத்து, பகவதி மற்றும் சீதாலட்சுமி தரப்பினருக்கு ஆதரவாக போலியான ஆவணங்கள் தயாரித்து சங்கரனின் இடத்தை பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த பூரணசெல்வி, திங்களன்று நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் மோசடியாக பத்திரப் பதிவு செய்ததுஉறுதியானது. இதையடுத்து விதிகளை மீறி சொத்தை மோசடி செய்தல், போலி ஆவணம் தயாரித்தல்உள்ளிட்ட 3 பிரிவுகளில் சார் பதிவாளர் தங்கபாண்டியன், பூரண செல்வியின் சகோதரிகளான தாளையூத்து யாதவர் தெருவைச் சேர்ந்த முப்பிடாதி மனைவி பகவதி, பாளை தாலுகா செங்குளம் நடுத்தெருவை சேர்ந்தகல்லத்தியான் மனைவி சீதாலட்சுமி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.தொடர்ந்து பகவதி மற்றும் சீதாலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.