தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

17 Jun 2026, 9:15 pm
திருச்சி விரைவு செய்திகள்

சிபிஎம் மூத்த உறுப்பினர் ஆர்.அம்மாசி காலமானார்

சிவகங்கை, ஜூன் 17- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா, பூவந்தி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பான் வலசை கிராமத்தைச் சேர்ந்த ஆர்.அம்மாசி (65) உடல்நலக் குறைவால் கால மானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1990-ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக இருந்து வந்த அவர், கட்சியின் அனைத்து போராட்டங்கள் மற்றும் மக்கள் இயக்கங்க ளில் எழுச்சியுடன் பங்கேற்று செயல்பட்டு வந்தார். அவரது மறைவு கட்சியினரிடமும், பொதுமக்களிட மும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.அம்மாசியின் மறைவையொட்டி, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பாப்பான் வலசை கிளை தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் மோகன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

உலக ரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகங்கை, ஜூன் 17- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத் திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழக்கோட்டையில் உலக ரத்த கொடையாளர் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியர் கணேசன் வரவேற்புரை யாற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய செஞ்சிலுவை சங்க காளையார்கோவில் கிளை துணைத் தலைவர் ஆரோக்கியசாமி விளக்கவுரையாற்றினார். முடிவில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் கீதா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மீனாட்சி, வாசுகி, கணினி பயிற்றுநர் வித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுபாட்டில் விற்பனைக்கு வைத்திருந்தவர் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர், ஜூன் 17- திருவில்லிபுத்தூர் அருகே அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மம்சாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழூர் பகுதியில் சார்பு ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கீழூரைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரிடமிருந்து 27 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், முனீஸ்வ ரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர், ஜூன் 17- விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 19 காலை 10மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. 8ம் வகுப்பு முதல் டிகிரி, ஐ. டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் ஆகிய கல்வி தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்கும் முன் www.tnprivatejobs. tn.gov.in என்ற இணையத் தளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து விட்டு சுயவிபர சான்று, அனைத்து கல்விச் சான்று, ஆதார் அட்டை நகலோடு பங்கேற்கலாம்.

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவர் கைது

சிவகாசி, ஜூன் 17- விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதிநகர் பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு மது பாட்டில்களை மதுபிரி யர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீ சார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தனி யார் பார் உரிமையாளர் மாயக்கண்ணன், காளிராஜன் மற்றும் விசிக முன்னாள் மண்டல துணைச் செயலாளர் மகாராஜா என்ற வல்லரசு ஆகியோர் தொடர்புடையவர் கள் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், வல்லரசுவை கைது செய்த போலீ சார், தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் பாரின் உரி மத்தை ரத்து செய்ய காவல்துறையினர் பரிந்துரை செய் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவில்லிபுத்தூர் ரயில்வே நிலையத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படுமா?

திருவில்லிபுத்தூர், ஜூன் 17- தமிழகத்தின் பெரும்பாலான நகரங்க ளில் ரயில்வே நிலையங்களும் பேருந்து நிலையங்களும் அருகருகே அமைந்துள்ள நிலையில், திருவில்லிபுத்தூரில் மட்டும் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலை யம் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் ரயில் பயணி கள் நீண்டகாலமாக சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர். கடந்த காலங்களில் திருவில்லிபுத்தூர் வழியாக குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால் தற்போது சென்னை, குருவாயூர், செங்கோட்டை, மதுரை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்க ளுக்கு செல்லும் ரயில்கள் இந்நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இத னால் தினசரி ஏராளமான பயணிகள் ரயில் களை பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் இறங்கும் பயணி கள் பேருந்து நிலையம் அல்லது நகரின் பிற பகுதிகளுக்கு செல்ல ஆட்டோக்களை மட்டுமே நம்ப வேண்டிய நிலை உள்ளது. ஒரு நபருக்கு ரூ.60 முதல் ரூ.100 வரை கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் பயணிகள் கூடுதல் பொருளாதார சுமை யை சந்தித்து வருகின்றனர். இதனால், ரயில்கள் வந்து செல்லும் நேரங்களில் ரயில்வே நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையே நகரப் பேருந்து சேவையை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலி யுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கை தற்போது தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்கின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த மே 30-ஆம் தேதி அரசு போக்குவரத்து கழகத்தின் திரு வில்லிபுத்தூர் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பயணிகளின் இந்த கோரிக்கையை சட்டமன்ற உறுப்பினர் புதிய கிளை மேலாளரிடம் வலியுறுத்திய தாக கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழக கிளை மேலாளர் கூறுகையில், “சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு ஊழியர்களை ரயில்வே நிலையத்திற்கு அனுப்பி ரயில் களின் நேர அட்டவணை விபரங்களை சேக ரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், ரயில்வே நிர்வாகத்துடன் நேரடியாக ஆலோ சனை நடத்தி, ரயில்கள் வருகை தரும் நேரங்களுக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. வரவிருக்கும் வாரங்களில் இதுகுறித்து உரிய முடிவு எடுக்கப்படும்” என்றார். இதனால், திருவில்லிபுத்தூர் ரயில்வே நிலையத்திற்கு அரசு பேருந்து சேவை விரை வில் தொடங்கப்படும் என்ற நம்பிக்கையில் பயணிகள் காத்திருக்கின்றனர்.

வத்தலக்குண்டு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்

சின்னாளப்பட்டி, ஜூன் 17- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஒட்டுப்பட்டி பிரிவு பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் நோக்கிச் சென்ற கார் மற்றும் வத்த லக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் ஆகியவை ஒட்டுப்பட்டி பிரிவு பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. விபத்தில் கொடைக்கானலைச் சேர்ந்த மணிகண்டன் (42), கொடைக்கானல் நோக்கிச் சென்ற காரை ஓட்டிச் சென்ற நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், திண்டுக்கல்லை நோக்கிச் சென்ற காரில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 6 பேர் பலத்த காய மடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் இரவு நேரத்தில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பட்டி வீரன்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். உயிரிழந்த மணிகண்டனின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு: 4 பேர் மீது வழக்குப்பதிவு

நத்தம், ஜூன் 17- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறில், விவசாயி மற்றும் அவரது மனைவி யை தாக்கியதாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நத்தம் அருகே ஊராளிபட்டி கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அழகர் (55). விவசாயியான இவருக்கும், அவரது தம்பி முருகன் (50) உள்ளிட்ட சகோதரர்களுக்கும் பூர்வீக சொத்துகள் பிரித்து வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அழகர் தனது நிலத்திற்கு அருகில் புதி தாக நிலம் வாங்கி, அதற்கு தண்ணீர் பாய்ச்சி விவசா யப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, “தண்ணீர் தனது நிலத்திற்குள் வருகிறது” எனக் கூறி முருகன், அழகருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், முருகன் தனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து அழகரையும், அவரது மனைவி பஞ்சையும் கட்டையால் தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதித்தனர். இதுகுறித்து அழகர் அளித்த புகாரின் பேரில், நத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அபினேஷ் வழக்குப்பதிவு செய்து, முருகன், கணேஷ், தனபாண்டி, மீனாட்சி ஆகிய 4 பேர் மீது விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டண வசூல் பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நோட்டீஸ்

மதுரை, ஜூன் 17- அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசின் விதிமுறைகள் மற்றும் அரசாணைகளுக்கு முரணாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்க உரிய வழி காட்டுதல்களை உருவாக்கக் கோரி தொட ரப்பட்ட வழக்கில், தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் பதில் மனு தாக் கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளை யத்தைச் சேர்ந்த மைக்கேல் தங்கராஜ் தாக் கல் செய்த மனுவில், 2008-ஆம் ஆண்டு தமி ழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் மாணவர்களிடமிருந்து சிறப்புக் கட்ட ணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டுள்ள தாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பல அரசு உதவி பெறும் பள்ளி களில் மாணவர்களிடம் பல்வேறு கட்ட ணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், குறிப் பாக இராமநாதபுரம் மற்றும் திருவண்ணா மலை மாவட்டங்களில் இந்த நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். மேலும், ராயப்பன்பட்டி புனித அலோசி யஸ் மேல்நிலைப்பள்ளி, இராமநாதபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆத்திப்பட்டு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் அரசாணைக்கு முர ணாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதாகக் கூறி, அதுகுறித்து விசாரணை நடத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற வசூல்கள் நடைபெறாத வகையில் தெளிவான வழி காட்டுதல்களை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசார ணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வா கங்கள் தரப்பில், பாதிக்கப்பட்ட பெற்றோர் களே நேரடியாக நீதிமன்றத்தை அணுக முடியும் என்றும், இதுதொடர்பாக ஏற்க னவே நீதிமன்ற உத்தரவு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு அரசாணை அம லில் உள்ள நிலையில் எவ்வாறு சிறப்புக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்கு நர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தர விட்டு, வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.