திருச்சி விரைவு செய்திகள்
26 Jun 2026, 10:29 pm

விருதுநகர் அருகே பைக் மீது கார் மோதியதில் வாலிபர் பலி தாய், 2 குழந்தைகள் படுகாயம்

விருதுநகர், ஜூன் 26- விருதுநகர் -சாத்தூர் நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். விருதுநகர் அருகேயுள்ள விஜயராம்பேரி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் அஜித்(33). இவரது மனைவி ரம்யா(30). இவர்களது இரு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் 4 வழிச் சாலையில் மணிப்பாறை பட்டி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது, கோவை மாவட்டம், இடையார் பாளை யத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஓட்டி வந்த கார், எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் அஜித், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள், காயம டைந்தவர்களை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டும் அஜித் உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த அவரது மனைவி ரம்யா மற்றும் 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து வச்சகாரபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலிக்குமாறு சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து கொலை மிரட்டல் தவெக நிர்வாகி மீது போக்சோ வழக்கு

விருதுநகர், ஜூன்.26- 17வயது சிறுமியை காதலிக்குமாறு தொடர்ந்து தொந்தரவு செய்ததோடு, கொலை மிரட்டல் விடுத்த தமிழக வெற்றிக்கழக இணைச் செயலாளர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள எஸ். கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப்(30). இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் பேரூராட்சி இணைச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் அதே பகுதி யைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடைக்குச் சென்று வரும்போது ஜோசப் துரத்தி வந்து பேசுவதாகவும் தன்னை காதலிக்க மறுத்தால் ஆசிட் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததனர். அதன்பேரில், போலீ சார் தவெக நிர்வாகியான ஜோசப் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து,தேடி வருகின்றனர்.

திருப்புவனம் வைகை ஆற்றில் சடலம் மீட்பு

திருப்புவனம்,ஜூன் 26 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் சந்தை மார்கெட்டில் இருந்து மடப்புரம் கோவில் செல்லும் சாலை யில் உள்ள வைகை ஆற்று பாலத்தின் அடிப்பகுதியில், அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்புவனம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து திருப்பு வனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடுகளை திருடி பரமக்குடி சந்தையில் விற்க முயன்ற கும்பல் கைது 74 ஆடுகள் மீட்பு

இராமநாதபுரம், ஜூன் 26- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடுகளை திருடி விற்பனை செய்ய முயன்ற நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 74 ஆடுகளை மீட்டுள்ளனர். திருடப்பட்ட ஆடுகளை ஆட்டோவில் ஏற்றி பரமக்குடி ஆட்டு சந்தையில் விற்பனை செய்ய முயன்றபோது, ஆடுகளை இழந்த உரிமையாளர்கள் தங்களது ஆடுகளை அடையாளம் கண்டு கீழக்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று முதற்கட்டமாக 7 ஆடுகளையும், செல்வம் (38), பவித்ரா (35), ராமநாதன் (33), தமிழரசன் (20) ஆகிய நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முக்கிய குற்றவாளியான செல்வத்தின் தோப்பு வீட்டிலிருந்து 13 ஆடுகள் மீட்கப்பட்டன. மேலும் நடைபெற்ற மூன்றாம் கட்ட சோதனையில் கூடுதலாக 54 ஆடுகள் மீட்கப்பட்டன. இதன்மூலம் 61 பெரிய ஆடுகள் மற்றும் 13 குட்டி ஆடுகள் என மொத்தம் 74 ஆடுகள் மீட்கப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் கீழக்கரை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் பேரூராட்சி தலைவியின் கணவர் மீது வழக்கு பதிவு

திருவல்லிபுத்தூர் ,ஜூன் 26- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினராக இருப்ப வர் கார்த்திக். இவர் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த வர். இவருக்கு வாழைகுளம் கண்மாயில் உரிய அனுமதி யின்றி மணல் அள்ளுவதாக வும் இவரது பேரை துஷ்பிர யோகம் செய்வதாகவும் வந்த தகவலின் அடிப்ப டையில் வியாழக்கிழமை அன்று மாலை மம்சாபுரம் வாழைகுளம் கண்மாய்க்கு நேரில் பேரூர் கழக செயலா ளர் கார்த்திகேயன் மற்றும் கட்சி உறுப்பினர்க ளுடன் சென்று பார்த்தார். அப்போது ராஜேந்தி ரன் என்றகுட்டி என்பவர் கரையில் மணலை அள்ளி கொட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் சட்டமன்ற உறுப்பி னர் யாருடைய அனுமதி யின் பேரில் இந்த வேலை யை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு ,அவர் பொதுப் பணித்துறை அனுமதியுடன் செய்கிறேன் என்று கூறி யுள்ளார் .அப்போது அங்கு வந்த மம்சாபுரம் பேரூராட்சி தலைவியின் கணவரும் பத்தாவது வார்டு உறுப்பின ருமான தங்க மாங்கனி ,அவர்களைப் பார்த்து ஒருமையில் அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தமிழக வெற்றி கழகத்தின் மம்சா புரம் பேரூர் கழகச் செய லாளர் கார்த்திகேயன் மம்சா புரம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமையன்று மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணியினுடைய நிர்வாகி கள் கமலக்கண்ணன் சதீஷ்குமாருடன் சென்று புகார் கொடுத்துள்ளார் .அவரது புகாரின் பேரில் காவல்துறையினர் தங்க மாங்கனி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வரு கின்றனர்.

எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் இல்லாமல் கீழக்கரை – ஏர்வாடி இசிஆர் சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அவதி

இராமநாதபுரம், ஜூன் 26- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை – ஏர்வாடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) தொடர்ந்து நிகழ்ந்து வந்த விபத்துகளை தடுக்கும் நோக்கில் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் விடுத்த கோரிக்கையால் நெடுஞ்சாலைத்துறையினர் புதிதாக வேகத்தடை அமைத்துள்ளனர். ஆனால், வேகத்தடை அமைக்கும் போது கட்டாயமாக அமைக்கப்பட வேண்டிய எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்பு குறியீடுகள் மற்றும் சாலை எச்சரிக்கை அடையாளங்கள் எதுவும் முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பயணிக்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடையை முன்கூட்டியே அறிய முடியாமல் திடீரென பிரேக் பிடித்து தடுமாறுவதும், சிலர் கீழே விழுவதும், வாகனங்கள் சேதமடைவதாகவும் கூறப்படுகிறது. “விபத்துகளைத் தடுக்க அமைக்கப்பட்ட வேகத்தடையே தற்போது விபத்துக்கு காரணமாக மாறியுள்ளது” என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் வெறும் கண்துடைப்புக்காகவே பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இது நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியமான செயல்பாட்டை வெளிக்காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, உடனடியாக எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள், ஒளிரும் சாலை குறியீடுகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதுடன், பணிகளை முறையாக கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை பெரியகுளம் அருகே ஒருவர் கைது

தேனி ,ஜூன்.26- பெரியகுளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர் . தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம்(58). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து குழந்தைகள் சேவை மையத்திற்கு 1098என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றோர் தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக மேற்பார்வையாளர் ஜனனி நேரில் சென்று கள விசாரணை நடத்தினார். இதில் தகவல் உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரியகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரமசிவத்தை கைது செய்தனர்.

ஆண்டிபட்டி அருகே வனப்பகுதியில் தந்தங்கள் இன்றி இறந்துகிடந்த யானை வனத்துறையினர் விசாரனை

தேனி ,ஜூன்.26- ஆண்டிபட்டி அருகே ஏழுமலை வனப்பகுதியில் யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், கண்டமனூர் வனச்சரக பணியாளர்கள் கடந்த புதன்கிழமை எழுமலை அருகேயுள்ள பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு மாதங்களுக்கு முன் உயிரிழந்த யானையின் சடலம் கிடந்ததாம். அதில் யானையின் தந்தங்கள் காணவில்லையாம். இதையடுத்து கண்டமனூர் வனச்சரக அலுவலர் சிவாஜி, கால்நடை மருத்துவரை வரவழைத்து உடற்கூறு ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர். மேகமலை வனக்கோட்ட துணை இயக்குநர் சாய் சரண் ரெட்டி கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்துர்- மேகமலை புலிகள் காப்பகம் மேகமலை வனக்கோட்டம் கண்டமனூர் வனச்சரகத்திற்கு உள்பட்ட எழுமலை அருகேயுள்ள பகுதியில் யானை ஒன்று உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கால்நடை மருத்துவரை வரவழைத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், யானையின் தந்தங்கள் காணவில்லை, இது குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

கத்தார் எரிவாயு ஆலை விபத்தில் பலி: நெல்லையைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் சொந்த ஊரில் அடக்கம்

திருநெல்வேலி, ஜூன் 26– கத்தார் நாட்டில் உள்ள தொழிற்பேட்டையில் அமைந்துள்ள எரிவாயு ஆலையில் கடந்த 21 ஆம் தேதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பழவூரை அடுத்த சிதம்பராபுரத்தை சேர்ந்த பபித், பணகுடி அருகே சிவகாமிபுரத்தை சேர்ந்த சஜித் குமார், அழகிய நம்பியாபுரத்தை சேர்ந்த சுபின் ஆகிய 3 வாலிபர்கள் சிக்கி உயிரிழந்தனர். அவர்களது உயிரிழப்பால் 3 கிராமங்களும் சோ கத்தில் மூழ்கிய நிலையில், அரசு சார்பில் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர்களது உடல் களை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலையில் விமான மூலம் 3 பேரின் உடல்களும் திருவனந்தபுரம் வந்த டைந்தது. சொந்த ஊரில் அடக்கம் திருவனந்தபுரத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களது சொந்த கிராமங்களுக்கு கொண்டு வரப் பட்டது. சுபின் உடலுக்கு துணை தாசில்தார் குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சஜித்குமார் உடலுக்கு ராதாபுரம் தாசில்தார் வில்லுடையார், பபித் உட லுக்கு சுப்புலட்சுமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 3 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.

கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது

தூத்துக்குடி,ஜூன் 26- தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ஒருவரிடம், முகநூல் மூலம் அறிமுகமாகி எக்ஸ்.எஸ்.மார்க்கெட்ஸ் s என்ற இணையதளத்தில் இன்டர்நேஷனல் கரன்சி டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்ப வைத்து ரூ. 24,64,800 பணத்தை வங்கிக் கணக்குகளில் பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியை சேர்ந்த காட்டுராஜா மகன் விவேக்ராஜா (33) மற்றும் ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவகன் மகன் பரேஷ்குமார் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு பெற்றுத் தந்தனர். மேலும் தொடர்ந்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பணியிடை நீக்கம்

தேனி,ஜூன்.26 தூத்துக்குடியில் பணிபுரிந்த போது பெண் ஊழியரிடம் பாலியல் சீண்ட லில் ஈடுபட்ட தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கே.பி.பிரம நாயகத்தை பணியிடை நீக்கம் செய்து மாற்றுத் திறனாளிகள் நல ஆணை யர் எம்.லட்சுமி உத்தர விட்டுள்ளார் . தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலராக பணிபுரிந்து வருபவர் கேபி.பிரமநாய கம். இவர் தூத்துக்குடி மாவட்ட மாற்றத்திறனாளி கள் நல அலுவலராக பணி புரிந்த போது பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் சீண்ட லில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்து துறை சார்ந்த புகார்குழு சார்பில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் பிரம நாயகம் , பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்டது தெரிய வந்தது. இந்த குழு அளித்த அறிக்கை யின் அடிப்படையில் ஒழுங்கு மற்றும் மேல்முறை யீடு விதி எண் 17(இ)ன் கீழ் இவரை தற்காலிக பணி யிடை நீக்கம் செய்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் எம்.லட்சுமி உத்தரவிட்டுள்ளார். தேனியில் கடந்த 23 ஆம் தேதி இவர் பொறுப் பேற்ற நிலையில் பணி யிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.