திருச்சி விரைவு செய்திகள்
4 Nov 2026, 10:47 pm

திருச்சி விரைவு செய்திகள்

90 பயனாளிகளுக்கு நிலுவை ஓய்வூதியம் வரவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்ட கைத்தறித் துறை சார்பில் ஏற்கெனவே 3,000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப் பட்டு வருகிறது. இந் நிலையில், கடந்த ஓராண்டாக நிலுவையில் இருந்த 90 பயனாளிகளுக் கான ஓய்வூதியத் தொகை புதன்கிழமை அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இதனை வெள்ளிக்கிழமை முதல்பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம்.மேலும், கூடுதலாக இருவருக்கு குடும்ப ஓய் வூதியம் வழங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது. அவர்களுக்கும் வங்கிக் கணக்கில் குடும்ப ஓய்வூதியத் தொகை வரவு வைக் கப்படும் என கைத்தறித் துறை உதவி இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு நவீன நெல் சாகுபடி பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டாரம் குன்னூர் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் விரிவாக்க சீரமைப் புத் திட்டத்தின் கீழ், வேளாண் சுற்றுச்சூழல் சார்ந்த நெல் சாகுபடி குறித்த மாவட்டஅளவிலான பயிற்சி முகாம் 40 விவசாயிகளுக்கு நடைபெற்றது.

வத்திராயிருப்பு வேளாண்மை உதவி இயக்குநர் செல்வராணி தலைமை வகித்தார். இதில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, ரசாயன உரங்களைக் குறைத்து இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல், பாரம் பரிய நெல் சாகுபடி மற் றும் நவீன தொழில்நுட் பங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.கலசலிங்கம் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பாரதி, உயிர் உரங் கள் மற்றும் உயர் தொழில் நுட்ப நெல் சாகுபடி முறைகள் குறித்துப் பயிற்சி அளித்தார்.

குழந்தைகள் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில், மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் அனைத் துத் துறை அலுவலர்களுடனான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய் வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், குழந் தைத் திருமணம், போக்சோ வழக்குகள், குழந்தைத் தொழிலாளர் முறை, இளவயது கர்ப்

பம், பள்ளி இடைநிற்றல், மாணவர் விடுதிகளின் செயல்பாடு உள்ளிட் டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களின் செயல்பாடுகள், குழந் தைகள் இல்லங்களின் நிலை, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குதல், நிதி ஆதரவு திட்டங்களின் பயனாளிகள் நிலை மற்

றும் பள்ளிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் புதுக்கோட்டை விஜயா, ஆணைய உறுப்பினர்கள் முனைவர் உஷாநந்தினி, ஜெயசுதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் மற்றும் பள்ளிக்கல்வி, சமூகநலம், காவல்துறை, தொழிலாளர் நலம், சுகாதாரம் உள்ளிட்ட பல் வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தட்கோ மூலம் விரைவு மின் இணைப்பு

சிவகங்கை, நவ.4–ஆதிதிராவிட விவசாயிகளின் பாசன வசதி மற்றும் வருமானத்தை மேம்படுத்தும் வகையில், 2026–27-ஆம்நிதியாண்டில் தாட்கோ மூலம் ‘வளமிகு வேளாண்மை உதவித்திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளது. இத்

திட்டத்தின் கீழ் 1,000 விவசாயிகளுக்கு தட்கல் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு ரூ.26.09 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.இதன்படி, விவசாய மின் மோட்டாரின் குதிரைத்திறனுக்கு ஏற்ப மின் இணைப்புக் கட்டணத்தில் 90 சதவீதத்தை தாட்கோ மானியமாக வழங்கும்.5 ஹெச்.பி. மோட்டாருக்கு ரூ.2.50 லட்சம் கட்டணத்தில் பயனாளி ரூ.25 ஆயிரமும், 7.5 ஹெச்.பி.க்கு ரூ.2.75 லட்சத்தில் ரூ.27,500-ம், 10 ஹெச்.பி.க்கு ரூ.3 லட்சத்தில் ரூ.30 ஆயிரமும், 15 ஹெச்.பி.க்கு ரூ.4 லட்சத்தில் ரூ.40 ஆயிரமும் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை மானியமாக வழங்கப்படும்.விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவராகவும், குடும்ப

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விவசாய நிலம் சொந்தப் பெயரில் பட்டாவுடன் இருக்க வேண்டும். நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறுஅமைந்திருக்க வேண்டும். மின் இணைப்பு கோரி தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே தாட்கோ திட்டங்களில் பயன் பெற்றிருக்கக் கூடாது. தகுதியுள்ள விவசாயிகள் https://tahdco.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

சிலிண்டர் வாயுக் கசிவால் வீட்டில் தீ விபத்து: பெண் காயம்

விருதுநகர், நவ.4-பாத்திமா நகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் மனைவி செபஸ்தி (47). இவர் புதன்கிழமை காலை வீட்டில் சமையல்செய்து கொண்டிருந்தபோது சிலிண்டரில் எரிவாயு தீர்ந்துள்ளது. இதையடுத்து, மற்றொரு சிலிண் டரைப் பொருத்தி அடுப்பைப் பற்ற வைத்துள்ளார். அப்போது ரெகுலேட்டர் சரியாகப் பொருத்தப்படாததால் எரிவாயு கசிந்து திடீரென தீப்பற்றியது.இதில் செபஸ்திக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மகள்கள் செபஸ்தினா(25), டயானா (19) மற்றும் 15 வயது சிறுவனும் உடனடியாக வெளியேறினர். சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்து வந்த விருதுநகர் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டின் கதவு, பீரோ, மின்சாதனப் பொருள்கள், ஆடைகள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.காயமடைந்த செபஸ்தி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அரசியல் சதுரங்கம்அலைக்கழிக்கப்படும்நகராட்சி ஆணையாளர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர், நவ.4-ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ஆணையாளர் பணியிட மாற்றம் தொடர்பாக அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையாளர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நகர் மன்றக் கூட்டத்தில் ஆணையாளரை மாற்றக் கோரி உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆணையாளர் குமார் குளச்சல் நகராட்சிக்கும், அங்கு பணியாற்றியகோபாலகிருஷ்ணன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இதற்கிடையே, ஆணையாளர் குமாரை மீண்டும் மாற்றக் கூடாது என சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்டோர் அரசுக்கு மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரே வாரத்தில் இரு ஆணையாளர்களும் மீண்டும் பழைய பணியிடங்களுக்கே மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவு செவ்வாய்க்கிழமைஇரவு வெளியானது.

புதிய பேருந்து நிலையக் கடைகளுக்கான இணையவழி ஒப்பந்தப்புள்ளி, நகராட்சி ஊழியர்களுக்கு ஆணையாளர் வழங்கிய 17பி நோட்டீஸ் உள்ளிட்ட விவகாரங்களும் இந்தப் பணியிட மாற்றங்களுக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.நகராட்சியில் ஆணையாளரை மாற்றக் கோரி ஒரு தரப்பும், மாற்றக் கூடாது என மற்றொரு தரப்பும் அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இதனால் நகராட்சி நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

இராமநாதபுரம், நவ.4-இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 2027 ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதியேற் படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தப் பணி நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள 1,514 வாக்குச் சாவடிகளிலும் நவம்பர் 21, 22 மற்றும் 28,29 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் கள் நடைபெற உள்ளன.

இம்முகாம்களில் பொதுமக்கள் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும்திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை அளித்துப் பயன்பெறலாம். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப்பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.