திருச்சி விரைவு செய்திகள்
11 Oct 2026, 9:07 pm

திருச்சி விரைவு செய்திகள்

அரசு பேருந்து வசதி கோரி பொதுமக்கள் திடீர் மறியல்

ஒட்டன்சத்திரம், அக்.11-திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி சிக்ராம்பட்டியில் 100-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்துக்குப் பேருந்து வசதி இல்லாததால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து ஸ்ரீராமபுரம் சென்று, அங்கிருந்து வேடசந்தூர் உள் ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.வடமதுரை அருகே அரண்மனைப்பட்டியில் இருந்துநல்லமனார்கோட்டை, மாத்தினிபட்டி, பூத்தாம்பட்டி வழியாக வேடசந்தூர் வரை இயக்கப்படும் அரசு பேருந்தை, மாத்தினிபட்டியில் இருந்து சவேரியார்பட்டி, மரியமங்களபுரம், சிக்ராம்பட்டி, ஒத்தையூர் பிரிவு, தட்டாரபட்டி வழியாக இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாகப் பலமுறை மனு அளித் தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வேடசந்தூர்–வடமதுரை மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீராமபுரத்தில் திரண்டு பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வேடசந்தூர் காவல் ஆய் வாளர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார், ஒரு வாரத்துக்குள் சிக்ராம்பட்டிக்கு அரசு பேருந்து இயக்கநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.ஒரு வாரத்துக்குள் பேருந்து வசதி ஏற்படுத்தாவிட்டால், மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அசாம் தம்பதி கைது

சிவகாசி, அக.11-சிவகாசியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அசாம் தம்பதியரை போலீசார் கைது செய்தனர்.சிவகாசி அருகேயுள்ள கட்டசின்னம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கஸீம் அலி (55), நிலீமா பேகம் தம்பதியினர் ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து சக தொழிலாளர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த திருத் தங்கல் போலீசார், அவர்களிடமிருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போடி அருகே டிராக்டர் கவிழ்ந்து ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்

தேனி, அக்.11-போடி அருகே சனிக்கிழமை மாலை மலைப் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.தேனி மாவட்டம், போடி புதுக்கோட்டையைச் சேர்ந்த கந்தசாமி மகன் சிவானந்தம் (33), கூலித் தொழிலாளி. இவரும், போடி டி.வி.கே.கே. நகரைச் சேர்ந்த செல்வம் மகன் வீரபாண்டி (20) என்பவரும் டிராக்டரில் போடி - குரங்கணி சாலையில் உள்ள பிச்சங்கரை பிரிவு அருகே உள்ள தனியார் தோட்டத்திற்கு வேலைக்குச் சென்றனர்.வேலை முடிந்து மாலையில் இருவரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். டிராக்டரை வீரபாண்டி ஓட்டி வந்துள்ளார். மலைச்சாலையில் மேடான பகுதியிலிருந்து பள்ளத்தை நோக்கி இறங்கியபோது, டிராக்டர் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவானந்தம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஓட்டுநர் வீரபாண்டி மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். விபத்து குறித்து குரங்கணி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின் கம்பத்தில் மோதியதில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

தேனி, அக்.11-மூன்று சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற மாற்றுத் திறனாளி, மின் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்தார்.போடி மதுரை வீரன் தெருவைச் சேர்ந்தவர் பொன்னன் மகன் சந்திரன் (58). இவரது வலது கால் பிறவியிலேயே போலியோ நோய் தாக்கப்பட்டு மாற்றுத் திறனாளியாகஇருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் வெளியில் சென்று வருவதற்கு மூன்று சக்கர வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். ஞாயி

றன்று மாலை சந்திரன் தனது மூன்று சக்கர வாகனத்தில் போடியில் இருந்து குரங்கணி சாலையில் சென்று கொண்டருந்தார். அப்போது அங்கு சிக்னலில் இருக்கும் மின்சார கம்பத்தில் திடீரென மோதி வாகனமும் கவிழ்ந்தது. அப் போது இவரது தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது சம்பந்தமாக போடி நகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பழனியில் 10 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு இல்லை

பழனி, அக்.11-பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோவிலில் நவராத்திரி பூஜைகளை முன்னிட்டு, ஞாயிறன்று (அக்.11) முதல் அக்.20-ம் தேதி வரை 10 நாட்களுக்கு தங்கத் தேர் புறப்பாடு நடைபெறாது எனக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.நவராத்திரி பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அக்.21-ம் தேதி முதல் வழக்கம்போல் தங்கத்தேரில் சுவாமி புறப்பாடு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.