திருச்சி விரைவு செய்திகள்
25 Jun 2026, 11:13 pm

போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி

இராமநாதபுரம், ஜூன் 25- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகாமை யில் உள்ள இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி யில் போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் (பொ) செ.கார்த்திகேயன் தலைமை வகித்தார். இளஞ்செம்பூர் காவல்துறை சார்பு ஆய்வாளர் சண்முகவேலு சிறப்புரையாற்றினார். போதைப்பொருள் மன்ற ஒருங்கிணைப்பாளர் வில்வரசி விளக்கிப் பேசினார்.

பேவர் பிளாக் சாலை வசதி கோரி மீண்டும் மனு

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 25- ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை ஊராட்சியின் ஆலடிப்பட்டி பத்ரகாளி யம்மன் நகர் 2-வது தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் சார்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆலடிப்பட்டி பத்ரகாளியம்மன் நகர் 2-வது தெருவில் கடந்த 30 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இப்பகு தியில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏற்கனவே இரண்டு முறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்கப் பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக வியா ழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரு மாள்பட்டி கிளைச் செயலாளர் பால்ராஜ், முனியப்பன் மற்றும் சரவணன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக் குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், தற்போது இப்பணிக்காக நிதி ஒதுக்கப்பட வில்லை என்றும், நிதி கிடைத்தவுடன் பொதுமக்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு சாலை அமைக்கும் நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்ததாக மனு அளித்தவர்கள் கூறினர்.

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

நடவடிக்கை எடுக்க கோரிக்கை ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 25- ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதால், நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. குறிப்பாக மதுரை–செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை நகராட்சி எல்லைக்குள் செல்லும் பகுதிகளில் ஏராள மான மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சிரமத்துடன் இயக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த நிலை நீடித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கவனிக்காமல் வேக மாக வந்த வாகனங்கள் விபத்தில் சிக்கிய சம்பவங்களும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி, நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களிலும் இதே நிலை காணப்படு வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பாதுகாப் பான இடங்களில் அடைத்து வைக்க வேண்டும். மேலும், அவற்றின் உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் விதித்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

வேலைவாய்ப்பை ஏற்படுத்திடுக! நீட் தேர்வை ரத்து செய்திடுக! வாலிபர் சங்கத்தினர் சிக்கலில் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், ஜூன் 25- இராமநாதபுரம் மாவட் டம் சிக்கல் நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலாடி கிழக்கு ஒன்றி யம் சார்பாக ஒன்றிய, மாநில அரசுகளின் காலியாக உள்ள வேலை வாய்ப்புகளை இளை ஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திடவும், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்தி டவும், முறைகேடுகளில் ஈடு பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிர தான் பதவியை ராஜினாமா செய்திடவும் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கிழக்கு ஒன்றிய செய லாளர் அபூபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற் றது. இதில் மாவட்டச் செய லாளர் டி.மாரிகுமார், சிபிஎம் கடலாடி கிழக்கு தாலுகாச் செயலாளர் எஸ்.ராமசாமி, விவசாய சங்க தாலுகாச் செயலாளர் சுப்பிரமணியன், வாலிபர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பால சுப்பிரமணியன், ஆட்டோ சங்க மாவட்டப் பொருளாளர் ஜெயக்குமார், தாலுகா துணைத் தலைவர் அப்துல்லா ஆகி யோர் கண்டன உரையாற்றி னார்.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

சிவகங்கை, ஜூன் 25- சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல் லூரி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. அரசு மகளிர் கலைக் கல்லூரியின் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றம், மாவட்ட காவல்துறை மற் றும் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இணை ந்து ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணிக்கு கல்லூரி முதல்வர் ஆர்.இந்திரா தலை மை வகித்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெ.பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். சிவபிரசாத், மாணவி களின் விழிப்புணர்வு பேர ணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணியில் மாணவிகள், பேராசிரி யர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு திருப் பத்தூர் சாலை, மாவட்ட ஆட்சியர் வளாகம் வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் பூமிநாதன் கலைக்குழுவினரின் ஆடல், பாடல் உள்ளிட்ட விழிப்பு ணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் தலைமையில் மாணவிகள் போதைப்பொருள் பழக் கத்திற்கு எதிரான உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி யின் போதைப்பொருள் எதி ர்ப்பு மன்ற ஒருங்கிணைப்பா ளர் ஆர்.பூங்கொடி, உதவி ஆணையர் சிவபாலன், வட்டாட்சியர் எம்.சிவ ராமன், வருவாய் ஆய்வா ளர் பிரபு, போதை மறுவாழ்வு சேவை மைய இயக்குநர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் விவகாரம் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

மதுரை, ஜூன் 25- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் விவகாரம் குறித்து பேசியதாகக் கூறி, தமிழக சட்டத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த பரமசிவம் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுகளை அவமதிக்கும் வகை யில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விரைவில்

உதவி கோட்ட பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

நத்தம், ஜுன் 25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம்- மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(58). தற்போது கரூரில் குடியிருந்து வருகிறார். இவர் மதுரையில் நெடுஞ்சாலைத் துறை யில் உதவி கோட்ட பொறியாளராக உள்ளார். இவர் சென்னையில் வேலை செய்த போது, நெடுஞ் சாலை துறை ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய் யப்பட்டுள்ளது. இந்நிலையில் மீனாட்சிபுரத்தில் உள்ள இவரது அப்பா வீட்டில் வியாழனன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் ஆவணங்கள் உள்ளதா என 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்து வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடந்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்ணன் சென்னையில் இருந்து மதுரைக்கு இடமாறுதல் பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது நத்தத்தில் உள்ள இவரது அப்பா வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆட்சியர் உத்தரவின் பேரில் வடிகால் தற்காலிக சீரமைப்பு

தேனி, ஜூன் 25- தேனி–அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டு அண்ணாநகர் பகுதியில் திறந்த நிலையில் இருந்த வடிகால் மூடி குறித்து நாளிதழில் செய்தி வெளியான தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆர்.வைத்திநாதன் உத்தரவின் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, தேனி–அல்லிநகரம் நகராட்சி ஆணை யாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் சேதமடைந்திருந்த வடிகால் மூடி தற்காலிகமாக சீர மைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது. மேலும், அந்த வடிகால் மூடியை நிரந்தரமாக சீர மைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக மாவட்ட நிர்

முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்

தேனி, ஜூன் 25- முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், முன்னாள் படை வீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சி யர் ஆர்.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் 29 பயனாளிகளுக்கு ரூ.4,45,163 மதிப்பிலான அர சின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) லெப்டினன்ட் கர்னல் தினேஷ், முன்னாள் படைவீரர் நலக்குழு அமைப்பாளர் இளையராஜா, விங் கமாண்டர் (ஓய்வு) கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு கட்டாயம் தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பிற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு

மதுரை, ஜூன் 25- பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற் கும் ஆசிரியர்கள் கட்டாயம் தற்செயல் விடுப்பு எடுத்து மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற தொடக்கக் கல்வித்துறை யின் அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது மாறு தல் கலந்தாய்வுக்கான அறிவுரைகள் மற் றும் கால அட்டவணையை தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார். அதில், பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மாற்றுப் பணியில் செல்லாமல், கட்டாயம் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை யும் சந்தேகங்களையும் எழுப்புவதாக உள் ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற வட்டா ரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறு தல் கலந்தாய்வில் பங்கேற்ற அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்து கொண் டார்களா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், எதிர்காலத்தில் நடை பெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டங் கள், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டங்கள், ஆசிரியர்களுக் கான பயிற்சி முகாம்கள், தேர்தல் பணிப் பயிற்சிகள், தேசிய மக்கள் தொகை கணக் கெடுப்பு பணிகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்கும் ஆசிரியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்தே கலந்து கொள்ள வேண் டுமா என்ற ஐயப்பாடும் ஏற்பட்டுள்ளது. மேலும், தொடக்கக் கல்வித்துறையில் முகாம் அலுவலர்களாக பணியாற்றும் அதி காரிகள் அலுவலகப் பணிகளுக்காக வெளி யில் செல்லும்போதும் இதே நடைமுறை பின்பற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந் துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பை கட்டாயமாக்காமல், மாற்றுப் பணியாக அனுமதி வழங்கி, அன்றைய தினத்திற்கான வருகைச் சான்றிதழும் வழ ங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் தொடக்கக் கல்வி இயக் குநரிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இடைத்தரகர் தலையீட்டை தடுக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி ஆதார ஆவணங்கள் இன்றி ஏற்க முடியாது

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து மதுரை, ஜூன் 25- தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களிலும் முகவர்கள் மற்றும் இடைத் தரகர்களின் தலையீட்டை முற்றிலுமாக தடுக்கவும், சட்டவிரோத கட்டண வசூலை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் கோரி தாக் கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தங்கச்சாமி தாக்கல் செய்த மனுவில், தமிழ கத்தில் உள்ள சிறு மற்றும் குறு நெல் விவசாயிகள் போதிய அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாத தாலும், இடைத்தரகர்களின் தலையீட்டால் சட்டவிரோதமாக கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாலும் பாதிக்கப்படுவ தாக தெரிவித்திருந்தார். எனவே, மாநிலம் முழுவதும் செயல் பட்டு வரும் அனைத்து நேரடி நெல் கொள் முதல் நிலையங்களிலும் முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க வும், சட்டவிரோத கட்டண வசூலை தடுக்கும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரி யிருந்தார். மேலும், ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து நிபுணர் குழுவை அமைத்து, தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்து ரைகளின்படி உற்பத்திச் செலவுடன் 50 சதவீத லாபத்தைச் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசார ணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தாரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு களுக்கு ஆதாரமாக எந்த ஆவணங்களை யும் தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டனர். மேலும், பொதுவான மற்றும் மேலோட்டமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பிக்க இயலாது என்றும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.