தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

13 Jun 2026, 10:04 pm
திருச்சி விரைவு செய்திகள்

முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் 25 குடும்ப வழக்குகளுக்கு தீர்வு

இராமநாதபுரம், ஜூன் 13- இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில் முதுகுளத்தூர் வட்ட சட்டப் பணி கள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி என்.வேலுச்சாமி தலை மையிலும், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெசி.அபர்ணா மற்றும் வழக்கறிஞர் எஸ்.அரிச்சந்திரன் முன்னிலையிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அதில் 242 நீதிமன்ற வழக்குகள் எடுக்கப்பட்டு 140 அட்மி ஷன் வழக்குகள், 25 அசல் வழக்குகள், 30 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 25 குடும்ப வழக்குகள் உள்ளிட்டவை எடுக்கப்பட்டு அதில் 118 வழக்குகளில் ரூ 1,34,51,620க்கு தீர்வு காணப்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

கொலை மிரட்டல் விடுத்து பணம், செல்போன் பறிப்பு 3 பேர் மீது வழக்குப்பதிவு

திருவில்லிபுத்தூர், ஜூன் 13- கூமாப்பட்டி பேருந்து நிலையத்தில் இளைஞரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றதுடன், பின்னர் கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். விருதுநகர் மாவட்டம், கூமாப்பட்டி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவர் கூமாப்பட்டி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, ராமசாமிபுரத்தைச் சேர்ந்த அஜித் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் அவரிடம் வந்து பணம் கேட்டதாக கூறப்படுகிறது. முத்து பணம் கொடுக்க மறுத்ததால், அடையாளம் தெரி யாத இருவர் அவரைப் பிடித்துக் கொண்டதாகவும், அப்போது அஜித் அவரது பையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தையும் செல்போனையும் பறித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அஜித்தின் வீட்டிற்குச் சென்று தனது பணம் மற்றும் செல்போனை திருப்பிக் கேட்டபோது, அஜித் கொலை மிரட்டல் விடுத்ததாக முத்து புகாரில் தெரி வித்துள்ளார். இதுகுறித்து முத்து அளித்த புகாரின் பேரில், அஜித் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் மீது கூமாப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது வழக்குப்பதிவு

திருவில்லிபுத்தூர், ஜூன் 13- திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊர் நல அலுவலராக பணியாற்றி வருபவர் கோவிந்தம் மாள். இவருக்கு கிடைத்த தகவலின் பேரில், ஓட்டமடம் பகு தியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, சிறுமி அளித்த தகவலின்படி, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த தனது உறவின ரான தினேஷுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்தப் பழக்கம் பின்னர் காதலாக மாறியதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு திருவில்லிபுத்தூரில் குடும்பம் நடத்தி வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தற்போது தான் 9 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரிவித் துள்ளார். இதையடுத்து, மைனர் பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி மோசடி செய்ததாக தினேஷ் மீது உரிய நடவ டிக்கை எடுக்கக் கோரி, கோவிந்தம்மாள் திருவில்லி புத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித் தார்.அதன் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராஜபாளையத்தில் ஜமாபந்தி முகாம் தொடக்கம்

இராஜபாளையம், ஜூன் 13- இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரு வாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி) முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வருவாய்த் துறையின் சார்பில் நடத்தப்படும் ஜமாபந்தி முகாமில், வருவாய் கிராமங்க ளின் கணக்குகள் சரிபார்க்கப்படுவதுடன், பொதுமக்களி டமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காணும் பணி களும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டு நடைபெற்ற முகாமிற்கு விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலு வலர் மா.சாந்தி தலைமை வகித்தார். முதல் நாளில் இராஜபாளையம், அப்பனேரி, புதுப் பாளையம், கடம்பன்குளம், கொத்தங்குளம் மற்றும் அரசி யார்பட்டி உள்ளிட்ட வருவாய் கிராமங்களின் கணக்கு கள் தாக்கல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. மேலும், அப்பகுதி மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றை விரைந்து பரிசீலித்து தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஜமாபந்தி முகாம் தொடர்ந்து ஜூன் 16 ஆம் தேதி மேலராஜகுலராமன், ரெகுநாதபுரம், வடக்கு வெங்கா நல்லூர், திருச்சலூர், அயன்கொல்லங்கொண்டான் ஆகிய கிராமங்களுக்கும், ஜூன் 17-ஆம் தேதி அயன் கொல்லங்கொண்டான், சம்மந்தபுரம், மேலப்பட்டம் கரி சல்குளம் ஆகிய கிராமங்களுக்கும் நடைபெற உள்ளது. அதேபோல், ஜூன் 18-ஆம் தேதி புத்தூர், நல்லமங்கலம், செட்டியார்பட்டி, இளந்திரைக்கொண் டான், தெற்கு வெங்காநல்லூர், எஸ். ராமலிங்கபுரம், சோழ புரம், ஜமீன் நத்தம்பட்டி ஆகிய கிராமங்களின் கணக்கு களும், ஜூன் 19-ஆம் தேதி சுந்தர்ராஜபுரம், சோலைசேரி, மேட்டுப்பட்டி, சேத்தூர், முத்துசாமிபுரம், வடக்கு தேவ தானம், தெற்கு தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புதூர் மற்றும் மேலூர் துரைச்சாமிபுரம் ஆகிய கிரா மங்களின் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட உள்ளன. நிகழ்ச்சியில் இராஜபாளையம் வட்டாட்சியர் ராஜீவ்காந்தி, வருவாய் ஆய்வாளர் மாரி வாசுகி, கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பொது மக்கள் தங்களது மனுக்களை அளித்து உரிய தீர்வுகளை பெற்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த கோரி எம்எல்ஏக்களிடம் மனு

சிவகங்கை, ஜூன் 13- மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந் திர உதவித் தொகையை உயர்த்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் சிவ கங்கை மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி மற்றும் மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி இளங்கோ ஆகி யோரை நேரில் சந்தித்த சங்க நிர்வாகி கள், வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மாற்றுத் திறனாளி களுக்கான உதவித் தொகையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி க்கை விடுத்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை களுக்கான சங்கத்தின் சிவகங்கை மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்டத் தலைவர் திருநா வுக்கரசு மற்றும் மாவட்டச் செயலாளர் கொங்கையா தலைமையில் மனு வழங்கப் பட்டது. இதில் மாவட்ட துணைத் தலைவர் முத்து ராமலிங்க பூபதி, மாவட்ட இணைச் செயலா ளர்கள் மனோகரன், கருப்புச்சாமி, மாநில துணைத் தலைவர் தவமணி, காளையார் கோவில் ஒன்றியச் செயலாளர் சாத்தையா மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.

தேசிய மின்னணு கால்நடை இயக்கத் திட்டத்தில் கால்நடைகளை பதிவு செய்ய வேண்டும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

இராமநாதபுரம், ஜூன் 13- இராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்க் கப்பட்டு வரும் அனைத்து கால்நடை களுக்கும் 12 இலக்க தனித்துவ அடையாள எண் வழங்கி, அவற்றின் முழு விபரங்களை யும் மின்னணு முறையில் பதிவேற்றும் தேசிய மின்னணு கால்நடை இயக்கத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு 12 இலக்க அடையாள வில்லை பொருத் தப்பட்டு, அவற்றின் உரிமையாளர் விப ரங்கள், செயற்கை முறை கருவூட்டல், கால் நடை காப்பீடு, கன்று பிறப்பு, கோமாரி நோய், அடைப்பான் நோய், கன்று வீச்சு நோய் உள்ளிட்ட தடுப்பூசி விபரங்கள் ஆகி யவை சேகரிக்கப்பட்டு கால்நடை பராம ரிப்புத் துறையின் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்தத் தகவல்கள் கால்நடைகள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்யப் படும் போது, அவற்றின் முழுமையான விப ரங்களை அறிந்து கொள்ள கால்நடை வளர்ப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும். தரவுகள் பதிவேற்றம் செய்யும் போது, கால்நடை உரிமையாளர்களின் கைபேசி எண் மற்றும் ஆதார் எண் இணைக்கப் பட்டு, அவர்களது கைபேசிக்கு அனுப்பப் படும் கடவுச்சொல் மூலம் விபரங்கள் உறு திப்படுத்தப்பட்டு பதிவேற்றம் செய்யப்படு கிறது. அனைத்து கால்நடைகளுக்கும் தனித்து வமான 12 இலக்க அடையாள எண்ணுடன் காதுவில்லை அணிவித்து, கால்நடை மற் றும் உரிமையாளர் விபரங்களை ‘பாரத் பசுதன்’ இணைய தளத்தில் பதிவேற்றுவது ஒன்றிய அரசால் கட்டாயமாக்கப்பட் டுள்ளது. எனவே, இப்பணிக்காக கிராமங்க ளுக்கு வருகை தரும் கால்நடை பரா மரிப்புத் துறை அலுவலர்களுக்கு கால் நடை வளர்ப்போர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், தங்களது கை பேசிக்கு வரும் கடவுச்சொல்லை தெரி வித்து, தேவையான விபரங்களை வழங்கு மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் தக வல்களுக்கு இராமநாதபுரம் – 9042252591, மண்டபம் – 9677952829, ஆர்.எஸ்.மங்க ளம்- 9047446577, திருவாடணை – 95002 73812, திருப்புல்லாணி – 8667879558, பர மக்குடி – 8015856448, நயினார்கோயில் – 8838356336, கமுதி – 8838895917, கடலாடி – 8015340490, போகலூர் – 9159652733, முது குளத்தூர் – 9443287795 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் மா. சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.