மோடியின் தீபாவளி ஷூட்டிங் வீடியோவை வைரலில் இருந்து வெளியேற்றிய திருச்சி காவல்துறை ஆய்வாளர் நாடு முழுவதும் டிரெண்டிங்கில் வைரலாகிய காவல்துறை-ஓட்டுநர்களின் கொண்டாட்டம்
10 Nov 2026, 9:41 pm

மோடியின் தீபாவளி ஷூட்டிங் வீடியோவை வைரலில் இருந்து வெளியேற்றிய திருச்சி காவல்துறை ஆய்வாளர் நாடு முழுவதும் டிரெண்டிங்கில் வைரலாகிய காவல்துறை-ஓட்டுநர்களின் கொண்டாட்டம்

திருச்சி, நவ. 10- பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை யை ராணுவத்தினருடன் கொண்டா டுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சத்தீஸ்கர் பஸ்தார் பகுதி யில் உள்ள சிஆர்பிஎப் படை முகாமிற்குச் சென்று ராணுவ வீரர் - வீராங்கனைகளுடன் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இனிப்பு, வீராங்கனைகளுடன் நடனம் என 5க்கும் மேற்பட்ட கேமராக்களுடன் மோடி சிறப்பு ஷூட்டிங் நடத்தினார். மோடியின் இந்த ஷூட்டிங் வீடியோவை பாஜகவினர் ஞாயிறன்று காலை முதலே வைரலாக்க முயன்றனர். ஆனால் பெரியளவில் வைரலாகவில்லை. எனினும் சில மணிநேரம் முதன்மை வீடியோவாக இருந்தது.

இந்நிலையில், ஞாயிறன்று இரவு திருச்சி காவல்துறையினர் மேற்கொண்ட 2 நிமிட செயல், மோடியின் தீபாவளி ஷூட்டிங்கை ஒரே அடியாக வைரலில் இருந்து துரத்தியது.

பெரம்பலூர் பைபாஸ்

திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தின் ஆய்வாள ரான கருணாகரன் தலைமையில், தீபாவளி நாளான ஞாயிறன்று பெரம்பலூர் புறவழிச்சாலையில் (பைபாஸ்) உள்ள சொரத்தூர் ரவுண்டானா வழியாகச் சென்ற லாரி மற்றும் பேருந்துகளை காவல்துறையினர் நிறுத்தி, ஓட்டுனர்களை அழைத்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் பேசிய ஆய்வாளர் கருணாகரன், தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக இரவு பகல் பாராமல் சாலைகளில் பயணித்து உழைக்கும் ஓட்டுநர்களின் சேவையை பாராட்டியதோடு, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இறுதியாக காவல்துறையினருடன் இணைந்து ஓட்டுனர்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். குடும்பத்தினருடன் பண்டிகை தினத்தை கொண்டாட முடியாமல் பணியில் இருந்த ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அவர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய காவல்துறையினரின் செயலுக்கு பாராட்டுகள் இன்று வரை குவிந்து வருகின்றன.

குறிப்பாக நாடு முழுவதும் திருச்சி காவல்துறையினரின் 1:45 நிமிட வீடியோ டாப் டிரண்டிங்கில் வைரலாகி வந்தது. ஒரே கேமரா, வெளிச்சம் இல்லாத இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ, மோடியின் பிரம்மாண்ட ஷூட்டிங்கை குறுகிய பின்னுக்குத் தள்ளி சமூக வலைதள வைரலில் இருந்து வெளியேற்றியது. (குறிப்பு : டிரெண்டிங் - திங்களன்று காலை முதல் மட்டுமே)