தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

15 Feb 2026, 3:03 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

திருச்சி-பாலக்காடு ரயில் ஊத்துக்குளியுடன் நிறுத்தம்

கோவை, பிப்.15- ஈரோடு - திருப்பூர் இடையே நடைபெற்று வரும் ரயில்வே  பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி - பாலக்காடு பாசஞ்சர்  ரயில் குறிப்பிட்ட தேதிகளில் ஊத்துக்குளி வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர்  ஜி. மரிய மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது, தெற்கு ரயில்வே, சேலம் கோட்டத்திற்குட் பட்ட ஊத்துக்குளி - திருப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அதிர்வுகளை தாங்கும் ‘ஸ்லீப் பர்’ கட்டைகளை மாற்றும் (Sleeper Renewal) பொறியி யல் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக ரயில்  சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து மதியம் 1.00 மணிக்கு புறப்படும் திருச்சிராப்பள்ளி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:  16843), வரும் பிப்ரவரி 17,20,22 மற்றும் 24 ஆகிய தேதிகளில்  முழுமையாக பாலக்காடு வரை செல்லாது. இந்த ரயில் மேற் கண்ட தேதிகளில் ஊத்துக்குளி ரயில் நிலையத்துடன் குறுகிய கால அடிப்படையில் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு, பயணிகளின் வசதிக்காக ஊத்துக்குளி ரயில் நிலையத்திலிருந்து பாலக் காடு டவுன் வரை இந்த ரயில் சிறப்பு முன்பதிவில்லா ரயிலாக  இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில், வழக்கமான ரயில் எண்  16843 நிற்கும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக மாற்றத்தை கருத்தில் கொண்டு பயணி கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு ரயில்வே நிர்வாகம்  கேட்டுக்கொண்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் பம்ப்செட் தொழிலை பாதுகாக்கும் அம்சங்கள் இடம்பெற வேண்டும்

கோவை, பிப்.15- கோவையில் நலிவடைந்து வரும் பம்ப்செட் தொழிலை யும், அதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர் களையும் பாதுகாக்க வலியுறுத்தி, திமுகவின் 2026 சட்ட மன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் கோயம் புத்தூர் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம்  (கோப்மா) சார்பில் விரிவான கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது. அதில், கடந்த நூறு ஆண்டுகளாக கோவையின் பொருளா தார முதுகெலும்பாக விளங்கும் பம்ப்செட் தொழிலில் நேரடி யாக ஒன்றரை லட்சம் தொழிலாளர்களும், மறைமுகமாக ஒரு  லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வரும் நிலையில், கடந்த  சில ஆண்டுகளாக நிலவும் கடும் தொழில் தேக்கத்தால்  உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, தமிழக அரசின்  குடிநீர் வழங்கல் துறை மூலம் கொள்முதல் செய்யப்படும் பம்ப்செட்களில் 75 சதவீதத்தை சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரிடமிருந்து கொள்முதல் செய்ய அரசு உரிய  உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களால் ஏற் படுத்தப்படும் மூலப்பொருட்களின் செயற்கை விலை யேற்றத்தை தடுக்க கோவையில் அரசு சார்பில் பம்ப்செட்  மூலப்பொருள் கிடங்கு ஒன்றை அமைக்க வேண்டும். மேலும், சிறு தொழில்களை முடக்கும் வகையில் உயர்த் தப்பட்டுள்ள கட்டிட வரி, சொத்து வரி மற்றும் மின் கட்டணங் களை பாதியாக குறைக்க வேண்டும். விசைத்தறிகளுக்கு வழங்கப்படுவதை போலவே 10 குதிரைத்திறன் வரை பயன்படுத்தும் லேத் பட்டறைகளுக்கும் மானிய விலை யில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். கடந்த 2016 ஆம்  ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப் பட்டபடி, சிறு உற்பத்தியாளர்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை பெற  உதவும் வகையில் தமிழக அரசே இலவச பம்ப்செட் பரிசோ தனைக் கூடத்தை அமைக்க வேண்டும். ஜி.எஸ்.டி பறக்கும்  படையினர் ‘ஸ்ட்ரீட் சர்வே’ என்ற பெயரில் சிறு தவறுக ளுக்குக் கூட கடுமையான அபராதம் விதிப்பதை கைவிட  வேண்டும். கோவையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஸ்கீம் ரோடுகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் மற்றும் விடுபட்டுள்ள குறுந்தொழில் முனை வோர் குடும்பத்துப் பெண்கள் உட்பட அனைவருக்கும் மாதம்  2000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும்  உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை கோப்மா தலை வர் கே. மணிராஜ் முன்வைத்துள்ளார். இந்த நியாயமான கோரிக்கைகளை வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக் குறுதிகளில் சேர்த்து, கோவையின் சிறு தொழில்களை காக்க திமுக தலைமை முன்வர வேண்டும் என அம்மனு வில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு உடல் உறுப்புகள் தானம்

கோவை, பிப்.15- சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த மகனின்  உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர். கோவை மாவட்டம், வால்பாறை சிறுகுண்டாயூர் கிரா மத்தை சேர்ந்த மணிகண்டன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவரது இளைய மகன்  ம.மனிஷ்குமார் (19) கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சிறுபாக்கம் கிராமத்தில் தமது பெரியம்மா வீட்டில்  தங்கி அப்பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் வேலை பார்த்து  வந்தார். இந்நிலையில், கடந்த வியாழனன்று மனிஷ்குமார்  விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையிலும், மனிஷ்குமார் சிகிச்சை பலனின்றி சனியன்று உயிரிழந்தார்.  இதைத் தொடர்ந்து மனீஷ் குமாரின் பெற்றோர்களான மணி கண்டன் மற்றும் முனீஸ்வரி ஒப்புதலோடு அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.  பின்னர் தமது பூர்வீக ஊரான கள்ளக்குறிச்சி மாவட் டம், சின்னசேலம் வட்டம், பெத்தாசமுத்திரம் கிராமத்தில் அவ ரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக இறுதி அஞ் சலிக்காக வைக்கப்பட்டிருந்த ம.மனிஷ்குமார் உடலுக்கு, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எம்எஸ்எம்இ சார்பில் சிறப்பு கருத்தரங்கம்

கோவை, பிப். 15- கோயமுத்தூர் எம்.எஸ்.எம்.இ அசோசியேசன் சார்பில் திங்களன்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக அவ்வமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எம்எஸ்எம்இ-யின் தலைவர் தி.மணி, செயலாளர் கே.பாண்டியன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை ஆவாரம்பாளையம் கோ இந்தியா  கூட்ட அரங்கில் திங்களன்று, இன்றைய தொழில் நிலைமை  மற்றும் இதனை எதிர்கொள்ளும் சாவல்கள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரத்தில், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் க. சுவாமிநாதன், மேனாள் முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.நந்தகோபால், கோயமுத்தூர் கம்பரசர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் தலைவர் எம்.ரவீந்திரன் ஆகி யோர் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன தகுதிச் சான்று கட்டண உயர்வை ரத்து  செய்யக் கோரி லாரிகள் வேலைநிறுத்தம்

சேலம், பிப், 15- ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள கனரக வாகனங்களுக்கான  தகுதிச் சான்று (FC) கட்டண உயர்வை ரத்து செய்ய வலியு றுத்தி, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று  (திங்கட்கிழமை) முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக லாரி உரிமையா ளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி யில் செய்தியாளர்களை சந்தித்த லாரி உரிமையாளர்கள் சம் மேளனத் தலைவர் தனராஜ் கூறுகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பர் 11-ஆம்  தேதி கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்று கட்டணத்தை  உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த உத்தரவு டிசம்பர்  17-ஆம் தேதி முதல் அவசர அவசரமாக நடைமுறைப்படுத் தப்பட்டது. இதன்படி, 15 ஆண்டுகளுக்கு மேலான லாரிகளுக்கான தகுதிச் சான்று கட்டணம் 850 ரூபாயிலிருந்து 14,500 ரூபாயாக  உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 20 ஆண்டுகளைக் கடந்த  லாரிகளுக்கு 28,200 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. இந்த அதிரடி கட்டண உயர்வு லாரி உரிமையாளர் களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இந்த கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி  பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. “கட்டண உயர்வு  குறைக்கப்படும்” என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர்.  ஆனால், இதுவரை எந்தவித சாதகமான முடிவும் எடுக்கப்பட வில்லை. கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தால்,  தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் லாரிகள் தகுதிச் சான்று  பெற முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் கவ னத்தை ஈர்க்கப் போராட்டத்தை தவிர வேறுவழியில்லை. இதன் முதற்கட்டமாக திங்கள்கிழமை முதல் திருச்சி, திருவாரூர், மன்னார்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

ஆளுநர் பங்கேற்கும் விழா புறக்கணிப்பு: அமைச்சர் பேட்டி

கோவை, பிப்.15- தமிழக மாணவர்களின் கல்வித்தரத்தை குறைத்து பேட்டி தந்ததற்காகவும் தமிழக சட்ட மன்ற மாண்பை கடைபிடிக்காமல் அவமரி யாதை செய்ததை கண்டிக்கும் வகையில்,  ஆளுநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவில்  உயர் கல்வித் துறை அமைச்சர் என்ற முறை யில் நான் பங்கேற்கவில்லை என கோவி செழி யன் தெரிவித்தார். கோவை அவிநாசி சாலை கோல்டு வின்ஸ்  பகுதியில் உள்ள தனியார் அரங்கில திமுக  தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர்  கருத்து கேட்புக் கூட்டம் சனியன்று நடைபெற் றது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர்  கோவி செழியன், முன்னாள் அமைச்சரும் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி உட்பட திமுக நிர்வாகிகள்  பலர் பங்கேற்றனர். இதில், கோவை, கரூர்,  நீலகிரி என மூன்று மாவட்டங்களை சேர்ந்த  தொழில் அமைப்பினர் மற்றும் விவசாய  அமைப்பினர் சந்தித்து பல்வேறு கோரிக்கை களை வழங்கினர்.  இதனைத்தொடர்ந்து செய்தியாளர்க ளுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கோவி  செழியன், கோவை பாரதியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கா மல் புறக்கணித்தது தொடர்பாக கேள்வி  எழுப்பவே, தமிழக அரசின் உயர்கல்வித் துறையையும் உயர்கல்வி பயிலும் மாண வர்களின் தரத்தையும் குறைவாக மதிப்பிட்டு ஆளுநர் தொடர்ந்து பேசியும், அறிக்கை  அளித்தும் வருகிறார்.  தமிழ்நாடு உயர் கல்வியில் உயர்ந்து  வருகிற நிலையில், அதை புரியாத வண்ணம்  ஆளுநர் பேசுவது கேலிக்கூத்தாக இருக்கி றது. மேலும் தமிழக சட்டமன்றத்திற்கு என சில  மரபுகள் இருக்கிறது. ஆனால் அதை குழி  தோண்டி புதைக்கும் விதமாக சட்டமன்றத் தில் உரையாற்ற வந்த ஆளுநர், ஆளுநர்  உரையை புறக்கணித்து சென்றது என்பது  வேடிக்கையாக இருக்கிறது. எனவே தமிழக  மாணவர்களின் கல்வித்தரத்தை குறைத்து  பேட்டி தந்ததற்காகவும் தமிழக சட்டமன்ற  மாண்பை கடைபிடிக்காமல் அவமரியாதை  செய்ததை கண்டிக்கும் வகையிலும் தமிழ் நாட்டு மக்கள் மீது அவர் கொண்டுள்ள வெறுப்பை வெளிகாட்டும் முகமாகமும் அவ ரின் பொறுப்பற்ற நிலையை உணர்த்தும் வித மாகத்தான் அவர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் என்ற முறையில் நான் பங்கேற்கவில்லை என்றார்.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:87.36/105 அடி நீர்வரத்து:112 கனஅடி நீர்திறப்பு: 3150 கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:44.87/160 அடி நீர்வரத்து:23.03கனஅடி நீர்திறப்பு:977.66கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:68.50/72அடி நீர்வரத்து:1083கனஅடி நீர்திறப்பு:1135கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:86.35/120அடி நீர்வரத்து:122கனஅடி நீர்திறப்பு:790கனஅடி திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:46.77/60அடி  நீர்வரத்து:831கனஅடி நீர்திறப்பு:1123கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:51.25/90அடி நீர்வரத்து:12கனஅடி நீர்திறப்பு:892கனஅடி

மதுபானம் எரிக்கும் இடமா நீதிமன்றம்? சிபிஎம் கேள்வி

அவிநாசி, பிப். 15- அவிநாசி சிவில் நீதிமன்றம் மற்றும் கதர்  கடை அருகே ஏற்பட்ட பலத்த வெடி சத்தம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  அவிநாசி - சேவூர் சாலையில் வட்டாட்சி யர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவல கம், நீதிமன்றம், கருவூலம், கிளை சிறைச் சாலை உள்ளிட்ட முக்கிய அரசு அலுவல கங்கள் அமைந்துள்ளன. எப்போதும் பரபரப் பாகக் காணப்படும் இப்பகுதியில், சனிக் கிழமை விடுமுறை என்பதால் மக்கள் நட மாட்டம் குறைவாக இருந்துள்ளது. அப் போது, சிவில் நீதிமன்றத்தின் அருகே உள்ள  கதர் பவன் முன்பாக திடீரென பலத்த வெடி  சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதியில்  இருந்த வணிகர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.  இதுகுறித்து திருப்பூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய  மதுபானங்கள் கொட்டி எரிக்கப்பட்டதாக வும், அப்போது ஏற்பட்ட அதிக வெப்பம் கார ணமாக பாட்டில்கள் வெடித்துச் சிதறியதாக வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஏ. ஈஸ்வரமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆயிரக் கணக்கான மக்கள் வந்து செல்லும் அரசு அலு வலக வளாகத்தில், மதுபானங்களை எரிக் கும் பணியை மேற்கொண்டது மிகுந்த அச் சத்தை அளிக்கிறது. ஒருவேளை அலுவல கங்கள் செயல்படும் நேரத்தில் இது போன்ற  சம்பவம் நடந்திருந்தால் பொதுமக்களின் பாதுகாப்பு என்னவாகியிருக்கும்? மது பானங்களை அழிப்பதற்கு நீதிமன்றம் மற்றும்  அரசு அலுவலகங்கள் உள்ள இடத்தைத் தேர்வு செய்தது ஏன்? இதற்கு அனு மதி அளித்தது யார்? என்ற கேள்விகள் எழு கின்றன. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக் கும் விதமாக அமைந்துவிடும். இந்த செய லில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை  வெறும் விளக்கம் மட்டும் அளிக்காமல், பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை  போக்கும் வகையில் விரிவான மற்றும் தெளி வான அறிக்கையை வெளியிட வேண்டும் என  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியின் முதல் ‘AI’ ஆய்வகம் விஞ்ஞானி பிரபாகரன் பொன்னுசாமி பாராட்டு

உதகை, பிப். 15- மாணவர்களிடம் பெற்றோர் அதிகம்  எதிர்ப்பார்க்கும் நிலையில், அவர்களின்  விருப்பத்திற்கேற்ப நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என உதகையில்  நடைபெற்ற தனியார் பள்ளி விழாவில்,  விஞ்ஞானி பிரபாகரன் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். உதகையில் இயங்கி வரும் கிர ஸன்ட் பள்ளியின் 28-ஆவது ஆண்டு  விழா, பள்ளியின் தாளாளர் பாரூக்  தலைமையில் சனியன்று  நடைபெற் றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினரா கப் பங்கேற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற் றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விஞ் ஞானி பிரபாகரன் பொன்னுசாமி பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வகத்தை ஏற்படுத்திய முதலாவது பள்ளி என்ற பெருமையை கிரஸன்ட் பள்ளி பெற்றுள்ளது. மேலும், உலகப்  பள்ளிகள் கூட்டமைப்பில் இணைந்து இப்பள்ளி சாதனை படைத்துள்ளது. இத் தகைய நவீன கட்டமைப்பு மாண வர்களுக்கு பல்வேறு போட்டிகளில் எளிதாக வெற்றி பெற உதவும். நமது கல்வி முறை வேகமாக மாறி  வருகிறது. கடந்த காலங்களில் மருத்து வம், சட்டம் மற்றும் அரசுப் பணிகள்  மட்டுமே பிரதான இலக்குகளாக இருந் தன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட கணினி புரட்சி அனைத்தையும் மாற்றிவிட்டது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகை ஆக்கிரமித்துள்ளது. அடுத்த 10 ஆண்டு களுக்கு இந்த தொழில்நுட்ப மாற்றங் களே உலகை ஆளும் என்றார்.  கோ-பைலட், சாட் ஜிபிடி போன்ற நவீன தொழில்நுட்பக் கருவிகளை மாணவர்கள் ஆக்கப்பூர்வமான முறை யில் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். சரியான வழிகாட்டுதலுடன் இத்தொழில்நுட்பங்களை பயன்படுத் தினால் வெற்றிப் பாதையை எளிதாக அடையலாம். அனைத்து மாணவர்களிடமும் தனித்துவமான திறமைகள் ஒளிந்துள் ளன. அதிகரித்து வரும் போட்டிச் சூழ லில், பெற்றோர்கள் பிள்ளைகள் மீது  அதிக எதிர்பார்ப்புகளை கொண்டுள் ளனர். ஆனால், பிள்ளைகளின் நாட்டம் எதில் உள்ளது என்பதை அறிந்து, அவர் களின் விருப்பத்திற்கேற்ப ஊக்கப்ப டுத்துவதே சிறந்தது. அவர்களின் திற மைகளை ஒருங்கிணைத்து ஊக்குவித் தால் அவர்கள் மிகச் சிறந்த நிலையை  அடைவார்கள் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.