திருச்சியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நர்சிங் மாணவி திடீர் சாவு சிபிஎம், மாணவர் சங்கம் தலைமையில் உறவினர்கள் போராட்டம்
23 May 2026, 9:45 pm

திருச்சியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நர்சிங் மாணவி திடீர் சாவு

சிபிஎம், மாணவர் சங்கம் தலைமையில் உறவினர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 23 - புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, தொண்டைமான் நல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர்கள் சேட்டு - கலைச்செல்வி தம்பதி. விவசாயக் கூலித் தொழிலாளர்களான இவர்களது மகள் சீதாலட்சுமி (19) திருச்சி அரசு தலைமை பொது மருத்துவமனை யில் மூன்றாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார்.

மயக்க மருந்து அதிகரிப்பே காரணம்

இந்நிலையில் மாணவி சீதா லட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக அவர் திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். அவரைப் பரிசோ தித்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண் டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வெள்ளி யன்று அவருக்கு மூக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்குத் தேவைக்கு அதிகமான அளவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது

இந்நிலையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே மாணவி சீதா லட்சுமியின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் என அவரது பெற்றோர், உறவினர்கள், சக செவிலிய மாண விகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட னர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவ மனை முதல்வர் குமரவேல் நேரில் வந்து மாணவி இறப்புக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

சுமார் 2 மணி நேரமாகியும் போ ராட்டத்தை கைவிடாததால் சம்பவ இடத்திற்கு இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், திருச்சி மத்திய மண்டல ஜ.ஜி பாலகிருஷ் ணன், துணை சபாநாயகர் ரவிகுமார் மற்றும் காவல்துறை துணை கமிஷ னர் சிருஷ்டிசிங், கல்லூரி முதல்வர் குமரவேல் ஆகியோர் இறந்த சீதா லட்சமியின் உறவினர்கள், பயிற்சி செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விசாரணை குழு அமைப்பு

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் ரமேஷ், “இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டு உள்ளது” என்றார். தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவ மனை மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். இருந்த போதிலும் பயிற்சி செவிலியர்கள், திருச்சி அரசு மருத்துவமனை வளா கத்திற்குள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர் பாக உண்மை நிலையை வெளிக் கொணர மருத்துவர்கள் அடங்கிய உயர்மட்ட விசாரணைக் குழுவை தமிழக அரசு உடனடியாக அமைத்து, முழுமையான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை பொதுமக்கள் முன் கால தாமதமின்றி வெளியிட வேண்டும். உயிரிழந்த மாணவி சீதா லட்சுமியின் குடும்பத்திற்கு இழப்பீ டாக ரூ.30 லட்சம் வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். போராட் டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது எந்த விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. சம்பவத்திற்கு கார ணமான தொடர்புடைய மருத்துவர் களை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ அலட்சியத்தால் இனி இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் அரசு உறுதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சூர்யா, புறநகர் மாவட்டத் தலைவர் வைரவள வன் ஆகியோர் தலைமையில் பயிற்சி செவிலியர்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், மாவட்ட செயற் குழு உறுப்பினர் லெனின், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாவட்டத் தலைவர் சந்தோஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளவனிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட அவர் இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

துரை வைகோ எம்.பி., கண்டனம்

சென்னை: இந்த சம்பவம் குறித்து மதிமுக எம்.பி. துரை வைகோ தனது எக்ஸ் தளத்தில் கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

கவனக்குறைவால் ஏற்படும் உயிரிழப்பு என்பது ஏற்க முடி யாத குற்றம் என்றும், இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய துயரம் என்றும் தெரிவித்தார்.

சீதாலட்சுமி தனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த வர் என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.