திருச்சி நர்சிங் மாணவி இறந்த விவகாரம் உயர்மட்ட குழுவின் விசாரணை நிறைவு
25 May 2026, 10:22 pm
<p><strong>திருச்சி நர்சிங் மாணவி இறந்த விவகாரம் உயர்மட்ட குழுவின் விசாரணை நிறைவு</strong></p><p>திருச்சி, மே 25- புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி (19). இவர் திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி யில் மூன்றாம் ஆண்டு நர்சிங் பயின்று வந்தார். இவரது மூக்கில் சதை வளர்ந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலை யில், திடீரென அவர் மரணமடைந்தார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மாணவி இறந்ததாக குற்றம்சாட்டி மாணவர், வாலிபர் சங்கம், சிபிஎம், சிபிஐ கட்சிகள் தலைமையில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், சக நர்சிங் பயிற்சி மாணவிகள் அரசு மருத்துவமனை முன் பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் செய லாளர், மருத்துவக் கல்வி இயக்க இயக்குநர் ஆகியோரின் அவசர உத்தரவு அடிப்படையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையின் மருத்துவக் கண்காணிப் பாளர் மருத்துவர் பாஸ்கர் தலைமை யில் 4 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் மருத்துவர் பாரதி மோகன் (காது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியர்), மருத்துவர் சண்முகசுந்தரம் (மயக்கவியல் பிரிவு பேராசிரியர்), மருத்துவர் ஜெய பிரகாஷ் (பொது மருத்துவம் பிரிவு பேராசிரியர்) ஆகியோர் அடங்குவர். இந்த உயர் மட்டக் குழுவினர் திருச்சிக்கு சனிக்கிழமை வருகை தந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு அளிக்கப் பட்ட சிகிச்சைகள், அங்கு நடந்த சம்ப வங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தினர். இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு நிறைவு பெற்றது. இறந்த மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, ஏற்கெனவே மாணவி உடல் நலன் ஏதும் பாதிக்கப்பட்டு இருந்தாரா? முறையான சிகிச்சை வழங்கப்பட்டதா? கேஸ் சீட்டில் உள்ள விபரங்கள், கொடுக்கப்பட்ட மயக்க மருந்து என்ன? எவ்வளவு கொடுக்கப்பட்டது? என்பது குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர் களிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரி விக்கின்றன.</p>
