திருச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: மாவட்ட முதன்மை நீதிபதி பங்கேற்பு
13 Jun 2026, 11:21 pm
<p><strong>திருச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: மாவட்ட முதன்மை நீதிபதி பங்கேற்பு</strong></p><p>திருச்சிராப்பள்ளி, ஜுன் 13- திருச்சி நீதிமன்றத்தில் சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். தேசிய மக்கள் நீதிமன்றத்தில் காவிரி - குண்டாறு - வைகை நதிநீர் இணைப்பு திட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட இழப்பீடு தொகை ரூ.9 கோடியே 75 லட்சத்து 20 ஆயிரத்து 69-க்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார். இதன் தொடக்க விழாவில், திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ், முன்னாள் அரசு வக்கீல் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
