திருச்சி விரைவு செய்திகள்
28 Oct 2026, 9:25 pm

தேவர் குருபூஜை விழா முன்னேற்பாடுஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம், அக்.28-இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழா மற்றும் 64-வது குருபூஜை விழா வரும் அக்.30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கமாண்டர் அவதேஷ் குமார் தியானி, மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலர் களும் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு மேற் கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், திருப்பூர் மாநகரக் காவல் துணை ஆணையர் ஆகாஷ் ஜோஷி, மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன், பரமக்குடி சார் ஆட்சியர் மருத்துவர் ச.வினோதினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நவ.1 - கிராம சபைக் கூட்டங்கள்

சிவகங்கை, அக்.28-சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவம்பர் 1-ம் தேதி காலை 11 மணிக்கு உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டங் கள்நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.இக்கூட்டங்களில் மழைநீர் சேகரிப்பு, டெங்கு தடுப்பு, பருவமழை முன்னெச்சரிக்கை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால், பொதுமக்கள் தவறாமல் பங் கேற்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொதுவக்குடியில் சிறப்பு கால்நடை சுகாதார முகாம்

இராமநாதபுரம், அக்.28-இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கோட்டம், கமுதக்குடி கால்நடை மருந்தகத்தின் கீழ் உள்ள பொதுவக்குடி கிராமத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.பரமக்குடி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் மருத்துவர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், கமுதக்குடி கால்நடை உதவி மருத்துவர்கள் பூபதி, விக்னேஷ், குமரேசன், கால்நடை ஆய்வாளர்கள் வீரன், பார்த்திபன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் காளியம்மாள், வளர்மதி ஆகியோர் பங்கேற்று சிகிச்சை மற்றும் தடுப்பூசிப் பணிகளை மேற்கொண்டனர்.முகாமில் 100 மாடுகளுக்கு தோல் கழலை நோய்த் தடுப்பூசியும் (LSD), 16 நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப் பூசியும், 198 கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்த் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

மேலும், 10 பசுக்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டது. 7 பசுக்களுக்கு சினைப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர, 36 மாடுகள், 315 வெள் ளாடுகள், 527 செம்மறி ஆடுகள் மற்றும் 16 நாய்களுக்கு குடற்புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

கால்நடைகளின் நோய்த் தடுப்பு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.இம்முகாமின் மூலம் 59 கால்நடை வளர்ப்போருக்குச் சொந்தமான 960 கால்நடைகளும், 198 கோழிகளும் பயனடைந்தன.

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் சிந்தனையரங்கம்

திண்டுக்கல், அக்.28-திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற சிந்தனையரங்கத்தில் பிரபல ஊடகவியலாளர் சுகிதா சாரங்கராஜ் சிறப்புரையாற்றினார்.சிந்தனையரங்கத்துக்கு திண்டுக்கல் இலக்கியக் கள இணைச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீ.பாலசுந்தரி தலைமை வகித்தார். மாவட்டத் திறன் அலுவலர் பொ. பவித்ரா வரவேற்றார்.திண்டுக்கல் சிறப்பு வட்டாட்சியர் சுகந்தி, மதுரை கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் நா.ரேவதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

திண்டுக்கல் மாநகரத் தமிழ்ச் சங்கம் சார்பில் மருத்துவர் ஜே.அமலாதேவி, அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும் தேசியஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் சோ.மோகனா, சமதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் சுகிதா சாரங்கராஜ் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் வெ.முத்துலட்சுமி நன்றி கூறினார்.

அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

மதுரை, அக்.28-மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல் நிலைப் பள்ளியில், “உணவை மதிப்போம்; தமிழர் உணவுப் பண்பாட்டைக் காப்போம்” என்ற கருப்பொருளில் புதன்கிழமை தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் விசுவநாதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், முதுகலைப் பட்ட

தாரி தமிழ் ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி வரவேற்றார். பட்டதாரி தமிழ் ஆசிரியை வைரம்மாள் நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கினார். இடைநிலை ஆசிரியை ரேவதி முன்னுரை வழங்கினார்.

கின்னிமங்கலம் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மோகன் குமாரமங்கலம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விழாச் சிறப்புரையாற்றினார்.

விழாவையொட்டி மாணவர்களுக்குப் பேச்சு, கட் டுரை, ஓவியம், கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.பள்ளிப் பட்டதாரி ஆசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார். இதையடுத்து தமிழ்க்கூடல் விழா நிறைவடைந்தது.

ஆட்டோ மீட்டர் கட்டண நிர்ணயத்திற்கு வரவேற்பு இனிப்பு வழங்கிய தொழிலாளர்கள்

மதுரை, அக்.28-தமிழக அரசு ஆட்டோக்களுக்கான மீட் டர் கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளதை வரவேற்று, சிஐடியு மதுரை மாநகர் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார் பில் பொதுமக்களுக்கும் ஆட்டோ தொழி

லாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் இரா.தெய்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கனகவேல், மாவட்டச் செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற் றும் ஆட்டோ தொழிலாளர்கள் பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இனிப்புகளை வழங்கினர்.

13 ஆண்டுகாலக் கோரிக்கைக்கு வரவேற்புஇதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறிய

தாவது:ஆட்டோ தொழிலாளர்கள் கடந்த 13 ஆண்டுகளாக மீட்டர் கட்டணத்தை முறைப்படுத்தி உயர்த்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு தற்போது மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்.

அரசு அறிவித்துள்ள கட்டண முறையின்படி, முதல் 1.8 கிலோ மீட்டர் பயணத்துக்கு ரூ.50, அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.25, காத்திருப்புக் கட்டணமாக நிமிடத்துக்கு ரூ.1 என நிர்ண

யிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்குப் பிறகு இரவுக் கட்டணமும் அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த அறிவிப்பு ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு ஓரளவு உதவியாக இருக்கும்.கட்டணத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்அரசு அறிவித்துள்ள கட்டணத்துக்கு ஏற்ப ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டண முறைகளையும் முழுமையாகச் சீரமைக்க வேண்டும். அனைத்து ஆட்டோக் களும் மீட்டர் கட்டண அடிப்படையில் இயங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு அறிவித்துள்ள வெற்றிப் பயணத் திட்டத்தை, ஆட்டோ தொழிலைப் பாதிக் காத வகையில் சீரமைத்து முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ மீட்டர் கட்டணத்தை ஆண்டுதோறும் ஆய்வு செய்து திருத்தம் செய்ய வேண்டும்.

கட்டண நிர்ணய அறிவிப்புடன் நின்றுவிடாமல், அறிவிக்கப்பட்ட கட்டணம் நடைமுறையில் முழுமையாகச் செயல்படுத் தப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் எனச் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

சிஐடியு அமைப்புடன் இணைந்துள்ள மின்சார ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினரும் அரசின் கட்டண நிர்ணய அறிவிப்பை வரவேற்று, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.