திருச்சி விரைவு செய்திகள்
13 May 2026, 10:12 pm

டாக்கா களப்பணியாளர்களுக்கு பாராட்டு

மதுரை, மே 12- மதுரை மண்டேலா நகரில் உள்ளது, ‘டாக்கா’ என்று அழைக்கப்படும் டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு மையம். இந்த மையம் மதுரை, முதுகுளத்தூர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய நான்கு மண்டலங்களில், சுமார் 100 கிராமங்களில் மாலைநேரக் கல்வி மையங்களை நடத்தி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மையங்களில் சிறப்பாகப் பணியாற்றும் வழிகாட்டிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் வழங்கி பாராட்டப்படுகின்றனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை டாக்கா மையத்தில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அருட்தந்தை மரியநாதன் தலைமையிலும், ஐந்திணை மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ராசு முன்னிலையிலும் நடைபெற்ற இந்த விழாவில், சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் புதல்வி சுந்தரி பிரபாராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சுமார் 100 கல்வி மைய வழிகாட்டிகள் கலந்து கொண்ட இந்த விழாவில், சிறந்த சமூகப்பணிக்காக 23 வழிகாட்டி களுக்கு டாக்டர் அம்பேத்கர் விருதுகள் வழங்கப்பட்டன. கோவில்பட்டி மண்டலம், தெற்குத் திட்டங்குளம் மைய வழிகாட்டி செல்வரதிக்கு சிறந்த வழிகாட்டிக்கான நிறுவனர் விருது வழங்கப்பட்டது. முதுகுளத்தூர் மண்டலம், கீழக்கன்னிச்சேரி மைய வழிகாட்டி பாலமுரு கனுக்கு சிறந்த மையத்திற்கான டாக்கா விருது வழங்கப்பட்டது. கோவில்பட்டி மண்டல ஒருங்கிணைப்பா ளர் கோவிந்தசாமிக்கு சிறந்த ஒருங்கிணைப்பாளருக்கான டாக்கா சுடர் விருது வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை டாக்கா மண்டல ஒருங்கி ணைப்பாளர்கள் உதயா, ஜான்சன் மற்றும் தெய்வராஜ் ஆகியோர் செய்தனர்.

மே 19 - கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர், மே 13- விருதுநகர் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே 19 இல் நடை பெறும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப் பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியதாவது: சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்ட அலுவலங்களில் வரும் மே 19 அன்று காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கோட்டாட்சியர்கள் தலைமை தாங்க உள்ளனர். எனவே, விவசாயிகள் அதில் பங்கேற்று நேரடியாக மனு அளித்து பயன்பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது

அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர்கள் தினம்

சிவகங்கை, மே 13- நவீன செவிலியர் பணியின் முன்னோடியாக கருதப் படும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மே 12ஆம் தேதி சர்வதேச செவிலியர்கள் தினம் கொண்டாடப்படு கிறது. அவரது மனிதநேய சேவையை போற்றியும், மருத்து வத் துறையில் பணியாற்றும் செவிலியர்களின் அர்ப்ப ணிப்பை பாராட்டியும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினர். மேலும், நோயாளிகளுக்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவை செய்ய உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

பனங்கள் விற்றவர் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர், மே 13- திருவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி பனங்கள் விற்பனை செய்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடுகபட்டி பகுதியில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உதயசூரியன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பேரையூர் வட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் அரசு அனுமதியின்றி பனங்கள் இறக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் குடத்தில் இருந்த 7 லிட்டர் பனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, முனீஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிமன்ற வளாகத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

திருவில்லிபுத்தூர், மே 13- திருவில்லிபுத்தூர் உமாபதி பகுதியைச் சேர்ந்த வழக்க றிஞர் சண்முகபிரியன், திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதி மன்றத்தில் சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 11.5.2026 அன்று மதிய உணவுக்குப் பிறகு, நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்க அலுவல கம் வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, நூலகத்திற்குள் சென்று புத்தகம் வாசித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வெளியே வந்து பார்த்தபோது, நிறுத்தி வைத்திருந்த இடத்தில் இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் வாகனம் கிடைக்காத தால், திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்றவர் கைது

திருவில்லிபுத்தூர், மே 13- திருவில்லிபுத்தூர் நத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வலையங்குளம் பகுதியில், தாமிரபரணி குடிநீர் தொட்டி அருகே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் உதயசூரியன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் லேபிள் ஒட்டப்பட்ட 28 மதுபாட்டில்களை சுயலாபத்திற்காக விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் பாண்டியிடமிருந்து 28 மதுபாட்டில்களை யும், ரூ.500 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

குழந்தை பெற பரோல் கோரிய ஆயுள் கைதி மனைவியின் மனு தள்ளுபடி

மதுரை, மே 13- சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த ஜலானி தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் முத்துமணி மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண் டனை கைதியாக உள்ளார் என்றும், கரு வுறுதல் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதால், போலீஸ் பாது காப்பு இன்றி 21 நாள் சாதாரண பரோல் வழங்குமாறு சிறைத்துறை கண்காணிப்பா ளரிடம் மனு அளித்ததாகவும் தெரிவித்தி ருந்தார். ஆனால், அந்த மனுவை மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் கடந்த 11.9.2025 அன்று நிராகரித்ததாகவும், அந்த உத்த ரவை ரத்து செய்து தனது கணவருக்கு 21 நாள் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே.ராமகிருஷ் ணன் அமர்வு புதனன்று விசாரித்தது. விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில், தம்பதியினர் கருவுறுதல் சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பு வதால் பரோல் வழங்க வேண்டும் என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் 226வது பிரி வின் கீழ் நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவு வழங்க அதிகாரம் பெற்றுள்ளது என்றும் வாதிடப்பட்டது. அதேசமயம், அரசு தரப்பில், தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைப்பு விதிகளின் கீழ் பரோல் வழங்குவது ஒரு உரிமை அல்ல; அது தண்டனை கைதிக்கு வழங்கப்படும் சிறப்புரிமை மட்டுமே என்றும், விதிகளில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் சாதாரண விடுப்பு வழங்க முடியாது என்றும் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கில் மனுதாரரும் தண்டனை கைதியும் குழந்தை பிறப்புரி மையை மட்டுமே முன்னிறுத்துகின்றனர். ஆனால், குழந்தை இந்த உலகில் பிறக் கும் போது, மூன்று கொலை வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதியின் குழந்தை என்ற களங்கத்துடன் வாழ வேண் டிய சூழ்நிலை உருவாகும். வாழ்நாள் முழு வதும் அந்த களங்கத்தை சுமக்க வேண்டிய குழந்தையின் நலனையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டனர். மேலும், “அத்தகைய சூழ்நிலையில் குழந்தையை கொண்டு வருவதற்கு மனு தாரருக்கோ, தண்டனை கைதிக்கோ உரிமை இல்லை. எனவே, சாதாரண விடுப்பு வழங்க மறுத்த சிறைத்துறை கண்கா ணிப்பாளரின் உத்தரவில் எந்த தவறும் இல்லை. அதில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அடுத்தடுத்த 3 வீடுகளில் பணம், நகை கொள்ளை

தேனி,மே 13- பெரியகுளம் அருகே உள்ள கைலாச பட்டி கிராமத்தில் அடுத்தடுத்து மூன்று வீடு களை உடைத்து ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான கைலாசபட்டி கிராமத்தில் அர்ஜுன் குமார், மாரியப்பன், மணிகண்டன் ஆகிய மூவரும் அவர்களது குடும்பத்து டன் வீரபாண்டி கோவில் திருவிழா மற்றும் குலதெய்வ கோவில் வழிபாட்டிற்கு தங்க ளது வீட்டை பூட்டி விட்டு செவ்வாயன்று இரவு சென்றுள்ளனர். இந்த நிலையில் புதனன்று கோவில் திருவிழா முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து வீட்டில் சென்று பார்த்த பொழுது பீரோக்கள் உடைக்கப் பட்டு அதில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகை பொருட்கள் மூன்று வீடுகளிலும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. மூன்று வீடுகளிலும் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகை பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்கரை காவல்துறையினர், கிராமத்தில் அடுத்த டுத்து வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற் கொண்டனர். அடுத்தடுத்து மூன்று வீடுகளின் கதவை உடைத்து நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் மூன்று வீடுகளிலும் யாரும் இல்லை என்ற தகவலை உறுதி செய்த பின் ஒரே நேரத்தில் மூன்று வீடுகளிலும் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட் டுள்ளது கைலாசபட்டி கிராம மக்களி டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மேலும் இந்த கொள்ளச் சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப் படை அமைத்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.

கூலி உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும்

இராஜபாளையம், மே 13- இராஜபாளையம் கிழக்கு ஒன்றியத் திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி பகுதியில் ஏரா ளமான விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல தொழிலாளர்கள் மற்றும் சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு விசைத்தறி உரிமையாளர் களுக்கு இடையே கடந்த 1.5.2026 முதல் அமலுக்கு வரும் வகையில் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் முறையாக அமல்படுத்த வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, விசைத்தறி உற்பத்தி யாளர்கள் சங்கத் தலைவர் குருசாமி, செய லாளர் கோவிந்தராஜ் மற்றும் ஜீவானந்தம் உள்ளிட்டோர் புதன்கிழமை உற்பத்தியா ளர் சங்கத் தலைவர் செந்தில்ராஜை நேரில் சந்தித்து, கூலி உயர்வு நடைமுறைப் படுத் தப்படாதது குறித்து முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து, சங்கத் தலை வர் செந்தில்ராஜ் உறுப்பினர்களுக்கு கடி தம் எழுதி, சிறு விசைத்தறி உற்பத்தியா ளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து சிறு விசைத்தறி உற்பத்தி யாளர் சங்கத் தலைவர் குருசாமி கூறுகை யில், “கடந்த மே 1ஆம் தேதி முதல் கூலி உயர்வு வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் அதனை அமல் படுத்தவில்லை. இதனால் சங்கத் தலை வரிடம் முறையிட்டோம். அதன் அடிப்படை யில் அவர் உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். ஒரு வார காலம் காத்திருக்க முடிவு செய்துள்ளோம். அதற்குள் கூலி உயர்வு வழங்கப்படாவிட்டால், மீண்டும் சங்கக் கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நட வடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார். மேலும், சிறு விசைத்தறி உற்பத்தி யாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப் பட்டால்தான், அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கும் சூழல் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய பஞ்சாலைகளை மீண்டும் இயக்கிடுக! பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தல்

திண்டுக்கல், மே 13- தேசிய பஞ்சாலைகளை மீண்டும் இயக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத் தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள வி.பி.சிந்தன் அரங் கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எம்.சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எம்.அசோகன் சிறப்பு ரையாற்றினார். மாநில பொருளாளர் எஸ்.சக்தி வேல், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பி.பாலசுப்பிர மணியன், பொருளாளர் ஜி. கஸ்தூரி உள்ளிட்டோர் கல ந்து கொண்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.பி.ஜெயசீலன் வாழ்த்துரை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதி தாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரி விக்கும் தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது. மேலும், ஒன்றிய அரசு இயக்காமல் நிறுத்தி வைத் துள்ள தேசிய பஞ்சாலை களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும், தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பணப்பலன் கள் பாதிக்கப்படாமல் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கிராமப்புறங்களில் வேலை இழந்துள்ள பெண் கள் உள்ளிட்ட அடித்தட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உரு வாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மா னிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் துணி நூல் துறையின் கீழ் செயல் பட்டு வரும் ஆறு கூட்டுறவு பஞ்சாலைகளில், தொழி லாளர்களை நிரந்தரம் செய் யாமல் இருந்ததோடு, நீதி மன்ற தீர்ப்புகள் வந்த பின்ன ரும் அவற்றை அமல்படுத் தாத போக்கு தொடர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், நிரந்தர தொழி லாளர்கள் இல்லாமல் ஆலைகளை இயக்கும் நோக்கில் அனைத்து பிரிவு களும் ஒப்பந்த முறைக்கு மாற்றப்பட்டதாகவும், இதன் மூலம் தனியார் நிறுவனங் கள் ஆதாயம் அடையும் சூழல் உருவாக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டது. தேனி அண்ணா கூட்டு றவு நூற்பாலை இயக்கம் தனியார் நிறுவனத்துக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பது சரியான நடைமுறை அல்ல என்றும், தனியார்மயப் படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. அத்துடன், கூட்டுறவு ஆலைகளில் நடைபெற்ற தாக கூறப்படும் முறைகேடு கள் மற்றும் மோசடிகளை தமிழக அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் 1,500க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் செயல்பட்டு வரும் நிலை யில், கடந்த 20 ஆண்டுகளாக தொழில்வாரியான ஒப்பந் தங்கள் புதுப்பிக்கப்பட வில்லை என்றும், தொழிலா ளர்களை சுரண்டும் வகை யில் நிர்வாகங்கள் செயல் பட்டு வருவதாகவும் கூட் டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.