தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேதமடைந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டக் கோரி விவசாயிகள் சங்கம் காத்திருப்புப் போராட்டம்

26 Sept 2026, 9:58 pm
சேதமடைந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டக் கோரி  விவசாயிகள் சங்கம் காத்திருப்புப் போராட்டம்

சேதமடைந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டக் கோரி விவசாயிகள் சங்கம் காத்திருப்புப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, செப். 26- திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காட்டூரிலிருந்து பாப்பாக்குறிச்சி, கீதாபுரம், கொக்கரசம்பேட்டை, நெய்குளம், வீதிவடங்கம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்கால்இணைப்புப் பாலம் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

எனவே, இந்தப் பாலத்தை உடனடியாக அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தரக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து வெள்ளிக்கிழமை இடிந்த நிலையில் உள்ள பாலம் அருகில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் காட்டூர் பகுதிச் செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சின்னத்துரை போராட்டத்தைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

போராட்டத்தை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் கே.சி. பாண்டியன், மாநகர் மாவட்டச் செயலாளர் நா. கார்த்திகேயன், மாநகர் மாவட்டப் பொருளாளர் தனபால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ரேணுகா, சிபிஎம் காட்டூர் பகுதிச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் பேசினர்.

காத்திருப்புப் போராட்டத்தில், விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பகுதிப் பொருளாளர் ராமலிங்கம், அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜ் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.