தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

5 Nov 2026, 10:29 pm
திருச்சி விரைவு செய்திகள்

திருச்சி விரைவு செய்திகள்

பாராட்டு

சாத்தூர்: விருதுநகரைச் சேர்ந்த மாரிமுத்து, கடந்த 1997-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறையில் சாலைப் பணியாளராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து படிப்பதில் ஆர்வம் கொண்ட அவர், பகுதி நேரமாகப் படித்து பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். இதையடுத்து, 2008-ம் ஆண்டு கிரேடு 2 சாலை ஆய்வாளராகவும், 2013-ம் ஆண்டு கிரேடு 1 சாலை ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற்றார். மேலும், 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை பகுதி நேரமாகப் பாலிடெக்னிக்கில் சிவில் டிப் ளமோ படித்து முடித்தார். இதன் அடிப்படையில், 2019-ம் ஆண்டு இளநிலைப் பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றார். தென் காசி மாவட்டம் சிவகிரி, தூத்துக்குடி மாவட்ட நபார்டு கிராமச் சாலைகள் பிரிவு, விருதுநகர் சிப்காட் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தூத்துக்குடி உட் கோட்டம் ஆகிய இடங்களில் பணியாற்றிய இவர், தற்போது பணியிட மாறுதலாகி சாத்தூரில் பணியாற்றி வருகிறார். தனது மேசையில் லஞ்சத்துக்கு எதிரான விழிப்புணர்வு வாசகத்தை வைத்துள்ள மாரிமுத்துவின்செயல் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

தாழ்வான மின் கம்பி மாற்றம்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பேரூராட்சி மறவபட்டியில் ஊருக்கு நடுவே வீடுகளில் மேல் பகுதியில் ஆபத்தான முறையில் உயர் மின் அழுத்த கம்பி செல்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்தனர். இதனை மாற்றி அமைக்க வேண் டும் என்று வேடசந்தூர் எம்எல்ஏ வீரா எஸ்.டி.சாமிநாதன் மற்றும் எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன் ஆகியோரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். இதனையடுத்து எரியோடு மின்சார வாரியஅதிகாரிகள் உடன் தலையிட்டு மாற்றியமைத்தனர்.

தீபாவளி கொண்டாட்டம்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை ஜாய்ஸ் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வத்தலக்குண்டு ஈடன் கார்டன் லயன்ஸ் கிளப் சார்பில் தீபாவளி கொண்டாட்டநிகழ்ச்சி நடைபெற்றது.

லயன்ஸ் கிளப் தலைவர் தவபாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெர்மன் ராஜா முன் னிலை வகித்தார். முதியோர் இல்ல நிர்வாகி மாசிலாமணி வரவேற்றார்.

முதியோர்களுக்குப் போர்வை, இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. லயன்ஸ் கிளப் விரிவாக்கத் தலைவர் கென்னடி சிறப்புரையாற்றினார். துணைத் தலைவர் ஜான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முன்னாள் தலைவர் பாக்கியராஜ் நன்றி கூறினார்.

வேண்டுகோள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மானிய விலையில் உரங்களைப் பெறுவதற்கு எப்.எப்.எஸ். செயலியில் தங்களது விவசாயிகள் அடையாள எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலு

வலகங்களைத் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தற்கொலை

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள எல்.வலையபட்டியைச் சேர்ந்தவர் முருகன் (42). விவசாயியான இவருக்கும், மனைவி பாக்கியத்துக்கும் (35) இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.