திருச்சி விரைவு செய்திகள்
yesterday

சிதிலமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க ஆட்சியரிடம் மனு

சிவகங்கை, ஜூன் 22- சிவகங்கை அருகே சக்கந்தி கிராமத்தில் சிதிலம டைந்துள்ள மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சிவகங்கை அருகேயுள்ள சக்கந்தி கிராமம், மானாகுடி விலக்கு பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் சேத மடைந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மின்கம்பத்தின் அருகே குடிநீர் விநியோகத்திற்கான மோட்டார் அறை செயல்பட்டு வருகிறது. இந்த மின்கம்பம் மூலமாகவே குடிநீர் மோட்டாருக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருவதால், கம்பம் சேதம டைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வருவதால், மின்கம்பத்தை உடனடி யாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் வேங்கையா உள்ளிட்ட கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர்.

மரக்கன்றுகள் நடும் விழா

இராமநாதபுரம், ஜூன் 22- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட பசும்பொன் கிராமத்தில் மரக்கன்று கள் நடவு விழாவை மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபா கரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், “மரங்களை நடுவது மட்டுமல்ல, அவற்றை பாதுகாத்து வளர்ப்பதே திட்டத்தின் வெற்றியாகும். மரக்கன்றுகளுக்கு தொடர்ந்து நீர் பாய்ச்சு தல், பாதுகாப்பு வேலி அமைத்தல் மற்றும் முறையான பரா மரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார். மேலும், 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் அரசு திட்டமாக மட்டுமல்லாமல் மக்கள் இயக்கமாகவும் மாற வேண்டும் என வலியுறுத்தினார். வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட பொது மக்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் மொத்தம் 340 மரக்கன்றுகள் நடப்பட்டன. பாரிஜாதம், மந்தாரை, நறுவிலி, புன்னை, பூவரசு, அரளி, சரக்கொன்றை, புத்திரஜீவா, குடை அரளி, ஆப்பிரிக்கன் துளிப் உள்ளிட்ட 11 வகையான மரக்கன்றுகள் நடப் பட்டன. இந்தத் திட்டம் மூலம் மாவட்டத்தின் பசுமைப் பரப்பு அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, சுற்றுச்சூழல் சமநிலை பாதுகாப்பு, வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் எதிர்கால தலைமுறைக்கு ஆரோக்கியமான சூழல் உரு வாக்குதல் போன்ற இலக்குகள் எட்டப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யாஷீ நிகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சர்வதேச யோகா தின விழா

திருவில்லிபுத்தூர், ஜூன் 22- திருவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப் பட்டது. ஞாயிற்றுக்கிழமை பள்ளியின் கூடை பந்தாட்ட மைதானத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி யோகா ஆசிரியை பூமதி, பள்ளி தாளாளர் லயன் வெங்க டாஜலபதி, முதல்வர் சண்முகவேல் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

மது விற்றவர் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர், ஜூன் 22- மம்சாபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அமச்சியார்பட்டி பாலம் அருகில் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் கந்தசாமி ரோந்து சென்றார். அப்போது, திருவில்லிபுத்தூர் நகர் கம்மாபட்டி தெரு வைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவர் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருவில்லிபுத்தூர், ஜூன் 22- திருவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் மாணவ - மாணவியர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் முருகேசன் தலைமை தாங்கி னார். ஒருங்கிணைப்பாளர் மோனிஷா வரவேற்றார். முதல்வர் ராணி துவக்க உரையாற்றினார். திருவில்லி புத்தூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் செல்வராஜ், முதுநிலை போக்குவரத்து காவலர் சித்ரா ஆகியோர் விழிப்புணர்வை ஏற்படுத்தி விளக்கி பேசினர். ஆசிரியை பிரித்தா நன்றி கூறினார்.

பரமக்குடியில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

இராமநாதபுரம், ஜூன் 22- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யில் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவ லகத்தின் முன்பாக திங்கட்கிழமை செவிலி யர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் மாவட்ட சுகாதார அலு வலரை சந்தித்து ஆரம்ப சுகாதார நிலை யங்களில் பணிபுரியும் செவிலியர்களின் பணிச்சூழல், பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு அளிப்பதற்கு சென்றனர். அப் போது செவிலியர்களை அவமரியாதை யாக நடத்தியதாக கூறி அலுவலகம் முன் பாக இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து மாநில இணைச் செயலா ளர் செ.வினோதினி கூறுகையில், பர மக்குடியில் அவமரியாதை செயலை கண் டித்து அலுவலக முன்பு காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். நிர்வாக அலுவலர் மீது மாவட்ட சுகாதார அலுவலர் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும் வரை இந்தப் போராட்டம் தொட ரும் என கூறினார்.

விருதுநகர் 4 வழிச்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயம்

விருதுநகர், ஜூன் 22- விருதுநகர் அருகே மதுரை - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த வில்சன், தனது குடும்பத்தினருடன் சிவகாசியில் நடை பெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்தார். விருதுநகர் அருகே சத்திரரெட்டி யபட்டி பகுதியில் கார் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. லாரியை திண்டுக்கல் மாவட்டம் மருளூத்து முஸ்லிம் தெருவைச் சேர்ந்த சதாம் உசேன் (28) ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வில்சன், சாந்த மேரி, நிர்மலா மற்றும் அந்தோணி முத்து ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீய ணைப்புத் துறையினர் மற்றும் போலீசார், சேதமடைந்த காரை உடைத்து அதற்குள் சிக்கியிருந்தவர்களை மீட்ட னர். பின்னர் காயமடைந்த அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மீட்புப் பணியின்போது தீயணைப்பு வீரர் மாசாண முத்துவின் காலில் காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலர் கைது

சிவகாசி, ஜூன் 22- சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ரூ.55 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக ஊராட்சி செயலரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது செங்க மலப்பட்டி இரண்டாம் நிலை ஊராட்சி. இங்கு செயல ராக பணிபுரிந்து வருபவர் சுப்பிரமணி. பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ். இவருடைய மனைவி நதியா. செங்கம லப்பட்டி பகுதியில் புதியதாக வணிக கட்டிடம் கட்டி வரு கிறார். எனவே, சொத்து வரி போடுவதற்காக ஊராட்சி செய லர் சுப்பிரமணியத்திடம் மனு அளித்துள்ளார். அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்நிலையில் லஞ்சம் தர மனமில்லாத ரமேஷ், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல் ஆய்வாளர்கள் பூமிநாதன் மற்றும் ஜாஸ்மின் மும்தாஜ் தலைமையிலான போலீ சார், ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை ரமேஷிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அதை ஊராட்சி செயலர் சுப்பிரமணியிடம் வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த போலீசார் சுப்பிரமணியை கையும் களவுமாக கைது செய்தனர்.