திருச்சி விரைவு செய்திகள்
yesterday

மணல் திருட்டுப் புகாரில் நடவடிக்கை இல்லை பாதுகாப்பு கோரி தவெக நிர்வாகி பேட்டி

இராமநாதபுரம், ஜூன் 21- இராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானை அருகே உள்ள கீழுபுலி கிரா மத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் ரஞ்சித், தங்கள் பகுதியில் நடை பெறும் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர் பாக பலமுறை புகார் அளித்தும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தங்கள் பகுதியில் நடைபெறும் மணல் திருட்டு தொடர்பாக திருவாடானை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளி டம் பலமுறை புகார் அளித்ததாகவும், ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், மணல் கடத்தலில் ஈடுபடு வோரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷிடம் புகார் அளித்ததாகவும், பாதுகாப்பு கோரி யதாகவும் தெரிவித்தார். இருப்பினும், இதுவரை தனக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார். “உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாது காப்பு கோரினால், அதே உள்ளூர் காவல் நிலையத்தில் மனு அளிக்குமாறு கூறுவது எந்த வகையில் நியாயம்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், சுமார் 100 யூனிட் மணல் சட்ட விரோதமாக எடுக்கப்பட்டு பல்வேறு இடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தாகவும், அவற்றை அரசுடைமையாக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரி களிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறினார். இப்பகுதியில் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சிலர் மணல் திருட் டில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து புகார்கள் அளித்தும் நட வடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மீது மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கவனம் செலுத்தி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ரஞ்சித் வலி யுறுத்தினார்.

சிகிச்சை தாமதம் கால்நடை மருத்துவமனை ஊழியர் மீது தாக்குதல்

சிவகங்கை, ஜூன் 21- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை தாமதமானதாகக் கூறி மருத்துவமனை ஊழி யர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் தாக் கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை கால்நடை மருத்துவ மனையில் மருத்துவர் இளவரசன் வழக் கம்போல் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அப்போது, உடகுளம் பகுதியைச் சேர்ந்த மூவர், பன்றி கடித்த தாகக் கூறி தங்களது வளர்ப்பு நாயை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அந்த நேரத்தில் மருத்துவரும், மருத்து வமனை ஊழியர்களும் ஒரு மாட்டிற்கு அவசர சிகிச்சை அளித்து வந்ததாக கூறப் படுகிறது. இதனால் நாய்க்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, அந்த மூவர் மருத்துவமனை ஊழியர் ராஜூவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் ராஜூவை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த ராஜூ, மானாமதுரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக சிவ கங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும், தலை மறைவாக உள்ள மூவரையும் தேடி வரு கின்றனர்.

தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு

சிவகாசி, ஜூன் 21- சிவகாசியில் தனியார் மருத்துவமனையில் 2வது பிர சவத்திற்காக சேர்க்கப்பட்ட தலைமை காவலரின் மனைவி சிசுவுடன் உயிரிழந்தார். சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல். இங்குள்ள வையன் தெற்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா தேவி (26 ). இத்தம்பதிக்கு 3 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் 2 ஆவது பிரசவத்திற்காக விஸ்வநத்தம் சாலையில் உள்ள தனியார் (நர்மதா) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ வார்டிற்கு ரேணுகாவை அழைத்துச் சென்ற போது திடீரென அவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரண மாக அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் வயிற்றில் இருந்த சிசு வுடன் தாயும் உயிரிழந்தார். இதையடுத்து குடும்பத்தாரும், உறவினர்களும் தனி யார் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தாயும்- சேயும் உயிரிழந்ததாக புகார் தெரிவித்து மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர் அருகே ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம், ஜூன் 21- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரயில் மோதி, 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரி ழந்தார். கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில், வேடசந்தூர் அருகே எரியோடு பகு தியில் உள்ள பண்ணப்பட்டி சாலையிலுள்ள ரயில்வே சுரங்கப்பாதை அருகே சென்றபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 40 வயது மதிக்கத்தக்க நபர் மீது மோதிய தாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரி ழந்தவரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.