தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

26 May 2026, 10:10 pm
திருச்சி விரைவு செய்திகள்

அனைத்து குவாரிகளையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் முதல்வருக்கு மதிமுக கோரிக்கை

இராஜபாளையம், மே 26- தமிழகம் முழுவதும் உள்ள மண் குவாரி, மணல் குவாரி, கல்குவாரி உள்ளிட்ட கனிம வளக் குவாரிகளை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் என வலி யுறுத்தி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் வேல்முரு கன், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி யுள்ளார். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் மண், மணல், கல்குவாரி உள்ளிட்ட கனிம வளக் குவாரிகளை தனிநபர்கள் டெண்டர் எடுத்து நடத்தி வரு கின்றனர். இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், தற்போ தைய ஆட்சிக்காலத்தில் அனைத்து குவாரிகளையும் அரசே நேரடியாக பொறுப்பேற்று நடத்தினால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட் டுள்ளது.

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் குடிநீர் விநியோகம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவில்லிபுத்தூர், மே 26- திருவில்லிபுத்தூர் நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் விநியோகக் குறைபாடுகள் தொடர்பாக, விருதுநகர் ஆட்சியர் சுகபுத்ரா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். திருவில்லிபுத்தூர் நகராட்சியில் தற் போது 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, கடந்த வாரம் நக ராட்சி நிர்வாகத்தின் திருநெல்வேலி மண் டல இயக்குநர் மகேஸ்வரி, திருவில்லி புத்தூருக்கு வருகை தந்து செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள குடிநீர் ஆதாரப் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், குறிப்பாக குடிநீர் விநி யோக மேற்பார்வையாளர் ஜெயராஜிடம், அடுத்த வாரத்திற்குள் சீரான குடிநீர் விநி யோகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், குடிநீர் வழங்கும் இடைவெளி நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க் கிழமை மதியம் விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் மருத்துவர் சுகபுத்ரா, திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து, ஆணையாளர் அலுவலகத்தில் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் முடிவில், பொதுமக்க ளுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைப் பதை உறுதி செய்ய வேண்டும், குடிநீர் வழங்கும் நாட்களின் இடைவெளியை குறைக்க வேண்டும், மேலும் நீராதா ரங்களை அதிகரிக்கும் வழிகளை கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ராமலிங்கம், உதவி பொறி யாளர் திவாகர், குடிநீர் விநியோக மேற்பார் வையாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகராட்சி ஆணையாளர் பணி நிமித்தமாக சென்னை சென்றிருந்ததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

விருதுநகரில் குடும்பத் தகராறில் மனைவி கொலை கணவர் போலீசில் சரண்

விருதுநகர், மே 26- விருதுநகர் அருகே அல்லம்பட்டியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்ததாகக் கூறப்படும் கணவர் போலீசில் சரண டைந்தார். விருதுநகர் அருகேயுள்ள அல்லம்பட்டி நூலகத் தெரு வைச் சேர்ந்தவர் ஜீவராஜன். இவரது மனைவி அந்தோணி பிரியா. தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தக ராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தோணி பிரியாவின் சகோதரருக்கு திருமண நிச்சய தார்த்தம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என ஜீவராஜன் தெரிவித்ததாக கூறப் படுகிறது. இதனால் தம்பதியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கடுமையான மோதலாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த ஜீவராஜன் கத்தியால் அந்தோணி பிரியாவின் கழுத்தை அறுத்ததாக கூறப்படு கிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சம்பவத்திற்குப் பிறகு ஜீவராஜன் விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

தலைமை காவலரின் மகனை கடத்தியதாக இருவர் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர், மே 26- தலைமை காவலரின் மகனை கடத்தியதாகக் கூறப் படும் இருவர் மீது கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வத்திராயிருப்பு வட்டம் வா.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டை தெருவைச் சேர்ந்தவர் நிர்மலா. இவர் கூமாபட்டி காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஜாக். திங்கட்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த ஜாக்கை, சுந்தரபாண்டி யன் விலக்கைத் தாண்டி பழைய கயிறு மில் அருகே, மதுரை கே.புதூரைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மற்றும் இராஜ பாளையத்தைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. நிர்மலாவின் கணவர் வாங்கியிருந்த கடன் தொடர் பாக இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படு கிறது. பின்னர், ஜாக்கை கிருஷ்ணன் கோவில் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே இறக்கிவிட்டு அவர்கள் சென்றதாக தகவல் வெளி யாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த நிர்மலா, தனது மகனை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிருஷ் ணன் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழ

பெருங்குளம், உச்சிப்புளி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரிக்கை

இராமநாதபுரம், மே 26- இராமநாதபுரம் அருகே உள்ள பெருங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என, பெருங்குளம் முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபையினர் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனு வில் கூறியிருப்பதாவது: பெருங்குளத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்கு அருகில் சுமார் 400 மீட்டர் தொலைவில் அரசு உயர் நிலைப் பள்ளியும், 100 மீட்டர் தொலை வில் ரெட்கிராஸ் மருத்துவமனை மற்றும் கோவிலும் அமைந்துள்ளன. இதனால் அப்பகுதிக்கு வரும் நோயா ளிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக் கள் மதுபிரியர்களால் பல்வேறு இடை யூறுகளை சந்தித்து வருகின்றனர். மேலும், மதுபிரியர்கள் வாகனங் களை சாலையோரத்தில் நிறுத்துவ தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. மதுபோதையில் தினமும் தக ராறு செய்வது, கூச்சலிடுவது மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் பள்ளி மாணவ, மாணவியர், பெண் கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் அவ்வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் குளிக்கும் ஊரணியில் மதுபான பாட்டில்கள் உடைக்கப்பட்டு வீசப்படுவதால், அங்கு குளிக்கச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்ற னர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெருங்குளம் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், உச்சிப்புளி அருகே புதுமடம் செல்லும் சாலையில் உள்ள பூமாலை வலசை கிராமம், உச்சிப்புளி – அழகத்தான் வலசை சாலை மற்றும் சாலை வலசை – கடுக்காய் வலசை வழித்தடங்களில் செயல்பட்டு வரும் 3 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என சின்ன இரட்டையூரணி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.