தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​திருச்சி விரைவு செய்திகள்

28 Jun 2026, 11:33 pm
​​​​​​​திருச்சி விரைவு செய்திகள்

பாவை பைந்தமிழ் பேரவை

பாபநாசம், ஜுன் 28- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில், பாவை பைந்தமிழ்ப் பேரவை நான்காம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. பாபநாசம் ஓய்வு அலுவலர் சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அன்பழகன் தலைமை வகித்தார். பேரவை ஆலோசகர் மோகன், செயலர் கமல ஹாசன் முன்னிலை வகித்தனர். `தன்னேர் இலாத தமிழ்’ என்றத் தலைப்பில் ராஜேஸ்வரி பேசினார். இதில் ஜெயராமன், குருசாமி, கலைச் செல்வன், பாண்டியன், தில்லைநாயகி உட்பட பலர் பங்கேற்றனர். ஜெயராமன் நன்றி கூறினார்.

ஊராட்சி கட்டுமான பராமரிப்பு பணிகளில் முறைகேடு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, ஜுன் 28- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 32 ஊராட்சிகள் இயங்கி வருகின்றன. அதில் ஊராட்சி பராமரிப்பு பணிகளில் ஊராட்சி கணக்கு எண் 1 இல் அரசு விதிகளை மீறி, உரிய வழிமுறைகளை பின்பற்றாமலும், மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தில் அனுமதி பெறாமலும் முறைகேடாக வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மற்றும் ஊராட்சி செயலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் இல்லாமலேயே டெண்டர் விடாமல் பணிகளை தேர்வு செய்து பணிகளை வழங்கி செலவினத்தை பயன்படுத்தி வருவதாக தெரிய வருகிறது. பல்வேறு பணிகளில் ஊழல் நடப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு, ஊராட்சி ஒன்றியத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் மற்றும் 2J கள ஆய்வு செய்வதற்கு மேல்முறையீடு செய்தாலும், அனுமதி வழங்குவதில்லை. காரணம் ஊழலில் சிக்கிய அலுவலர்களின் ஆவணங்கள், பொதுவெளியில் வந்துவிடும் என்பதற்காக அனுமதி மறுத்து வருகின்றன. உடனடியாக, தமிழ்நாடு அரசு திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை கள ஆய்வு செய்து, ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்யும் அலுவலர்கள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

குடும்பத் தகராறில் தாக்கப்பட்ட மூதாட்டி சாவு

தஞ்சாவூர், ஜுன் 28- தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள வலசக்காடு அய்யனார் கோவில் தெருவில் வசிப்பவர் காளியம்மாள், தனியாக வசித்து வருகிறார். இவர்களது மகள் போதும் பொண்ணு. இவருக்கு திருமணம் ஆன நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில், மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும், போதும் பொண்ணுவிற்கும் திருமணம் நடைபெற்றது. கார்த்திக் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், அவர்களுக்கு சொந்த வீடு இல்லை எனத் தெரிகிறது. இதனால், போதும் பொண்ணுவிற்கும், கார்த்திக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் போதும் பொண்ணு கணவருடன் கோபித்துக் கொண்டு, வலசக்காடு கிராமத்தில் உள்ள தனது தாய் காளியம்மாள் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனால் கார்த்திக் சனிக்கிழமை தனது மனைவியின் வீட்டிற்கு வந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டபோது, கார்த்திக், மனைவி போதும் பொண்ணுவின் பாட்டி ராஜம்மாளை கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. வயது முதிர்வின் காரணமாக ராஜம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்கு பதிந்து, கார்த்திக்கை கைது, செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.