தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

​​​​​​​திருச்சி விரைவு செய்திகள்

29 Jun 2026, 11:09 pm
​​​​​​​திருச்சி விரைவு செய்திகள்

ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த கோரிக்கை

மானாமதுரை, ஜூன் 29- மானாமதுரை நகரில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடு களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகளை உட னடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலியுறுத்தியுள்ளது. மானாமதுரை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பல சாலைகள் மேடு, பள்ளங்களாக இருப்பதால் அவற்றை தரமான முறையில் சீரமைக்க வேண்டும். மேலும், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நகரில் பல வீடுகளுக்கு குடி நீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், இது வரை திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.

காரியாபட்டியில் திமுக போராட்டம்

காரியாபட்டி, ஜூன் 29- காரியாபட்டியில் த.வெ.க. அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 37 திமுக வினரை போலீசார் கைது செய்தனர். தமிழக மனித வள மேலாண்மைத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் சரத்குமார். இவர் பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்துவது போன்ற காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலை யில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காரியா பட்டி பேருந்து நிலையம் முன்பு விருதுநகர் திமுக வடக்கு மாவட்ட மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அதற்கு காவல்துறையினர் அனுமதியில்லையெனக் கூறி அமைப்பாளர் கருப்புராஜா உள்ளிட்ட 37 பேரைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

புகையிலை விற்றவர் கைது

திருவில்லிபுத்தூர், ஜூன் 29- திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்நிலைய சார்பு ஆய்வாளர் செல் லப்பா, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மீனாட்சிபுரத் தைச் சேர்ந்த ஈஸ்வரனை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை உரிய அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட் களை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நகர்மன்ற பள்ளியில் இலவச சிசிடிவி கேமரா அமைப்பு

திருவில்லிபுத்தூர், ஜூன் 29- திருவில்லிபுத்தூர் நகர்மன்ற திரு.வி.கல்யாண சுந்தரனார் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவி களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் இலவசமாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று நிறு வப்பட்ட சிசிடிவி கேமராக்கள் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தன. இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி யின் தலைமையாசிரியர் தலைமை வகித்தார். நண்பர்கள் ரோட்டரி சங்கத் தலைவர் கந்தசாமி, பள்ளியில் பொருத்தப் பட்ட சிசிடிவி கேமராக்களை இயக்கி வைத்து பள்ளி நிர்வா கத்திடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநர் டால்பின் முருகதாசன், முன்னாள் தலைவர் அங்குராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில், நண்பர்கள் ரோட்டரி சங்கத்தின் செயலா ளர் ராஜு நன்றி கூறினார்.

திருப்பாற்கடல் நடைமேடையில் ஓய்வெடுக்க பெஞ்சு அமைப்பு

திருவில்லிபுத்தூர், ஜூன் 29- திருவில்லிபுத்தூர்–மதுரை சாலையில் அமைந்துள்ள திருப்பாற்கடல் நடைமேடையை பயன்படுத்தும் நடை பயிற்சியாளர்களின் கோரிக்கையை ஏற்று, நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் 3 இடங்களில் ஓய்வெடுப்ப தற்கான பெஞ்சுகள் அமைக்கப்பட்டன. பெஞ்சுகள் அமைக்கும் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நண்பர்கள் ரோட்டரி சங்கத் தலைவர் கந்தசாமி தலை மையில் அவை நடைபயிற்சியாளர்களின் பயன்பாட் டிற்காக திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் திருவில்லிபுத்தூர் நடைபயிற்சியா ளர்கள் சங்கச் செயலாளர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் மாரிச்சாமி, பொருளாளர் ராஜசேகர் ஆகி யோர் கலந்து கொண்டனர். மேலும், நண்பர்கள் ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளு நர் டால்பின் முருகதாசன், சந்திரன், மகாத்மா முருகேசன், முத்துராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பி னர்களும் பங்கேற்றனர்.

போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 29- திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) அமுதா தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழுவின் செயலாளர் நீதிபதி பிச்சை ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார். மேலும், வன்னியம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வா ளர் பாலமுருகன், ஹார்ட்புல்னஸ் அமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் ஹரிகிருஷ்ணன், வழக்கறிஞர் கார்த்திகே யன் ஆகியோர் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் அதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கி னர். ஒருங்கிணைப்பாளர் சௌந்திரபாண்டி நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.