திருச்சி விரைவு செய்திகள்
22 Sept 2026, 9:19 pm

ஆகாஷ் வழக்கில் 6 காவலர்களுக்கு நிபந்தனையுடன் ஜாமீன்

சிவகங்கை, செப்.22-சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், கடந்த மார்ச் 8 ஆம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

காவல்துறை விசாரணையின்போது அவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து, 6 காவலர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.ஆகாஷ் உயிரிழந்தது முதல் 6 காவலர்களும் வெளியிலேயே இருந்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

சிவகங்கை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்கு இதுவரை 6 காவலர்களும் ஒத்துழைத்ததைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிபந் தனை ஜாமீன் வழங்கி நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார்.விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும், 20 நாட்களுக்குள் பிணையுறுதி வழங்க வேண்டும் உள் ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. மேலும், அக்.9-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும்உத்தரவிடப்பட்டது.இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜரான 6 காவலர் களும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.

தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி, செப்.22-வருசநாடு, மேகமலை வனப்பகுதியில் வசிக்கும் மக் களை வெளியேற்றுவதைக் கண்டித்து, தமிழர் தேசம் கட்சி சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தேனி பங்களாமேட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு நிறுவனர் கே.கே.செல்வகுமார் தலைமை வகித்தார்.வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் ம.நடராசன்பூசாரி, தமிழர் தேசம் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் மகுடேசுவரன், மாநிலச் செயலாளர் பூமிஅம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ.மகாராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.கண்ணன், மாவட்டச் செயலாளர் ஜி.எம்.நாகராஜன், மாநில மருத்துவரணி செயலாளர் அன்புஎழில், தேனி கிழக்கு, மேற்கு மாவட்டச் செயலாளர்கள் கருப் பையா, தங்கதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீட்டு உபயோக சூரிய ஒளி மின் திட்டத்திற்கு ரூ.1 லட்சம் வரை அரசு மானியம்

தேனி, செப்.22-வீட்டு உபயோக சூரிய ஒளி மின் திட்டத்திற்கு ரூ.1 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் தலைமையில் சூரிய ஒளி மின் திட்ட செயல்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் செவ் வாய்க்கிழமை நடைபெற்றது.கூட்டத்தில், நகர்ப்புறங்கள் மற்றும் புதிய விரிவாக்கப் பகுதிகளில் திட்டத்தைப் பரவலாக்க தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து சிறப்புப் பதிவு முகாம்கள் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 3 கிலோவாட் வரையிலான வீட்டு உபயோக சூரியசக்தி மின் கட்டமைப்புகளுக்கு மத்திய அரசு சார்பில் அதிகபட்சம் ரூ.78 ஆயிரமும், மாநில அரசு சார்பில் ரூ.22 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது.

மானியத் தொகை போக மீதமுள்ள தொகையை செலுத்துவதற்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வசதி பெற்றுத் தரவும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சூரிய ஒளி மின் கட்டமைப்பு மற்றும் நெட் மீட்டரிங் வசதிகளை விரைவுபடுத்துவது குறித்து தொழில்நுட்ப விளக்கமும் அளிக்கப் பட்டது.

இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு பொதுமக்கள் தங்கள் பகுதி மின்வாரிய அலுவலகங்களை அணுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் துஷார் ஸ்ரீஹர் ஷிண்டே, மின்சாரத்துறை மேற்பார்வைப்பொறியாளர் நடராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு 2 அதிகாரிகள் மீது குற்ற வழக்கு தொடர அனுமதி

மதுரை, செப்.22-மதுரை மாநகராட்சி சொத்துவரி நிர்ணயத்தில் நடைபெற்றதாகக் கூறப் படும் முறைகேடு தொடர் பான வழக்கில், மாநகராட்சி அதிகாரிகள் ரங்கராஜன், செந்தில்குமரன் ஆகியோர் மீதுகுற்ற வழக்கு தொடர மாநகராட்சி ஆணையர் அனுமதி வழங்கியுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த ரவி தாக்கல் செய்த மனுவில், மாநகராட்சி அதிகாரிகளின் உதவியுடன் மண்டலத் தலைவர்கள் சொத்துவரி நிர்ணயத்தில் முறைகேடு செய்ததாகவும், இதுதொடர்பாக 2024 செப்.10-ம் தேதி மாநகராட்சி ஆணையர் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக் கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், 2022 முதல் 2024-ம் ஆண்டு வரை வணிக வரி விகிதத்தை வீட்டு வரியாக மாற்றி முறைகேடு செய் ததன் மூலம் மாநகராட் சிக்கு சுமார் ரூ.200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய் தும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு,வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந் தது. அப்போது மாநகராட்சி தரப்பில், ரங்கராஜன், செந்தில்குமரன் ஆகியோர் மீது குற்ற வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழு சார்பில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

விமானத்தில் மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றிய பெரியகுளம் மருத்துவருக்கு பாராட்டு

தேனி, செப்.22-விமானத்தில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட இலங்கை பெண் பயணிக்கு முதலுதவி அளித்து, அவரது உயிரைக் காப்பாற்றிய பெரியகுளத்தைச் சேர்ந்த மருத்துவர் மூர்த்திக்கு, ஸ்ரீலங்கன்ஏர்லைன்ஸ் நிறுவனம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.

தேனி மாவட்டம், பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த மருத்துவர் மூர்த்தி (78), ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தனதுமகன் டாக்டர் ராமநாதனைச் சந்திப்பதற்காக கடந்த 19 ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்தார். கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சிட்னி சென்ற விமானத்தில், அவருடன் பயணித்த 74 வயது இலங்கை பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அப்பெண் ணைப் பரிசோதித்த மருத்துவர் மூர்த்தி, அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்திருப் பதை கண்டறிந்து முதலுதவி அளித்தார். மேலும், சர்க் கரை அளவைக் கட்டுப் படுத்த மாத்திரை வழங்கி, சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து கண்காணித்தார். இதையடுத்து அப்பெண் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

மருத்துவர் மூர்த்தியின் துரிதமான செயலால் சக பயணி காப்பாற்றப்பட்டதைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் அவரைப் பாராட்டினர். இதனை கவுரவிக்கும் வகையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவருக்கு அதிகாரப் பூர்வ பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

சிவகாசி பட்டாசு தனி தாசில்தார் அலுவலகத்தில் ரூ.10,500 கணக்கில் வராத பணம் பறிமுதல்

சிவகாசி, செப்.22-சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் வெடிபொருள் தனி தாசில்தார் அலுவலகத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், கணக் கில் வராத ரூ.10,500 பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகாசி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் வெடிபொருள் தனி தாசில்

தார் அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இங்கு உரிமம் புதுப்பிக்க பணம் கேட்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உள்ளிட்ட போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தனி தாசில்தார் விஜயராஜனிடம் கணக்கில் வராத ரூ.10,500 இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தப் பணம் விஸ்வநத்தத்தில் உள்ள சித்ரா சல்பர் ஆலையின் உரிமம் புதுப்பிப்பதற்காக வழங்கப் பட்டதாக கூறப்படுகிறது.

அனுமதியின்றி பதுக்கிய 1 டன்னுக்கும் அதிகமான வெடிபொருட்கள் பறிமுதல் குடோன் உரிமையாளர் மீது வழக்கு

சின்னாளப்பட்டி, செப்.22-திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே ஆரியநல்லூர், முன்னிலைக் கோட்டை கிராமப் பகுதியில் தனியார் குடோனில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன்னுக்கும் அதிகமான வெடி பொருட் களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆரியநல்லூர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு குடோன் செயல்படுவதாக சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில், ஏ.எஸ்.பி. மஞ்சிமா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜாங்கம், தனிப்பிரிவு காவலர் மோகன்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, ஆரியநல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்த செல்லத்துரை என்ற சவரிமுத்து (64) என்பவருக்குச் சொந்தமான, முன்னிலைக்கோட்டையில் இருந்து ஆரியநல்லூர் செல்லும் சாலையில் உள்ள குடோனை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூரைச் சேர்ந்த விஜயகுமார் (39) என்பவர் கடந்த ஒரு மாதத் துக்கு முன்பு வாடகைக்கு எடுத்திருப்பது தெரியவந்தது.

அந்த குடோனில் அனுமதியின்றி வெடிமருந்து மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும், இறப்பு மற் றும் திருமண நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப் படும் பேப்பர் வெடிகளைத் தயாரிப்பதற்கான பொருட்களும் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 1 டன்னுக்கும் அதிகமான வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து சின்னாளபட்டி போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

நில அளவை ஆய்வாளர் மீது தாக்குதல் தேனியில் நில அளவைத்துறையினர் ஆர்ப்பாட்டம்

தேனி, செப்.22-சின்னமனூரில் நில அளவைப் பணியில் ஈடுபட்டிருந்த நகர நில அளவைத்துறை சார் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நில அளவைத்துறை அலுவலர்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க் கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சின்னமனூர் நகர நில அளவைத்துறை சார் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ஜெகன்குமார், முதலமைச்சரின் தனிப் பிரிவு மனு மீது நடவடிக்கை மேற்கொள் வதற்காக சின்னமனூரில் நில அளவைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த ஜெகன்குமார், சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசு ஊழியர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் பாபு, வேல்முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஏராளமான நில அளவைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

சரித்திரப் பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

விருதுநகர், செப்.22-விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடுக் குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த ஆக.28 அன்று தணிகாசலம்(45) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது, சரித்திரப் பதிவேடுக் குற்றவாளியான முனீஸ்வரன் (28), காளிராஜ் ஆகியோர் தணிகாசலத்திடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் தரமறுக்கவே, வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.

இதுகுறித்து இராஜபாளையம் வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில், முனீஸ்வரன் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதன் பேரில், முனீஸ்வரனைக் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவரைப் போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.