திருச்சி விரைவு செய்திகள்
2 Nov 2026, 8:50 pm

திருநெல்வேலி விரைவு செய்திகள்

பனை விதை நடவு

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தமிழரசன் (33) கிராம பகுதிகளில் சவாரி செல்லும் போது சேகரித்த பனை விதைகளை வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி ஊராட்சி தவசிகுளத்துப்பட்டி பெரியகுளத்தில் நம்மாழ் வார் பசுமை இயக்கத்தின் மூலம் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி மாணவர்கள் உதவியுடன் நூற் றுக்கணக்கான நடவு செய்துள்ளனர். இதனை, விவசாயிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.

ரவுடி படுகொலை: 5 பேர் கைது

மதுரை மாவட்டம் சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் அமைந்துள்ள பழைய ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இளைஞர் ஒருவர் பயங்கர ஆயுதங்களால் திங்களன்று படுகொலை செய்யப்பட் டார். விசாரணையில் கொலைசெய்யப்பட்டவர் சமயநல்லூர் சடச்சியம்மன் நகரைச் சேர்ந்த ‘குட்டிசாக்கு’ என்ற சூர்யா என்பது தெரியவந்துள் ளது. இவர் மீது கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உட்பட 10க்கும் மேற் பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ஞாயிறு இரவு 11.30 மணியளவில் குட்டிச் சாக்கு (எ) சூர்யா தனது நண்பர்களுடன் மது அருந்த சென்றுள் ளார். அப்போது சூர்யாவிற்கும் அஸ்வின் (23) என்பவருடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், 5 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய் துள்ளது என்பதை மதுரை எஸ்.பி.தேவநாதன் அமைத்த தனிப் படை சிசிடிவி காட்சி ஆய் வின் மூலம் கண்டறிந் தது. மேலும், 12 மணி நேரத்தில் அஜய் (26), விஷ்ணு (24), செல்வகுமார் (25), அஸ்வின் (23), சந்துரு (எ) குட்டிமணி (20) ஆகிய 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தது.

23 கிலோ கஞ்சா பறிமுதல்ஒருவர் கைது

பழனி அருகே சின்னகலையமுத்தூர் பகுதியில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா பதுக்கி விற்பனை செய் யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில்,போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பழனி, திண் டுக்கல் பகுதிகளைச் சேர்ந்த 5 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், தனிப் படையினரும் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திண் டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த தளபதி (25) என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ஆடம் வாழ்ந்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தளபதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.