முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

14 May 2026, 10:25 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

திருச்சி கிழக்கு: காலியாக உள்ளது என அறிவிப்பு

சென்னை, மே 14 - நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில், இரண்டு தொகுதிகளிலுமே வெற்றி பெற்ற அவர், ஒரு தொகுதியில் பதவி யை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட் டது. எனவே, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக சட்டப்பேர வையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்நிலையில் திருச்சி கிழக்குத் தொகுதி காலியாக இருப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு 6 மாதத்திற்குள் மறுதேர்தல் நடைபெறும்.

அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணன் நியமனம்

சென்னை, மே 14- தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக மீண்டும் விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியலமைப்பின் 165(1)-ஆம் பிரிவின் கீழ் தமிழ்நாடு ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். விஜய் நாராயண், ஒன்றிய பாஜக அரசின் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிய கே.கே. வேணுகோபால் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலை மையிலான அதிமுக ஆட்சி யிலும் 2017 முதல் 2021 வரை, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்க ப்பட்டு பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னை வழக்கறி ஞர்கள் சங்கத்தின் தலைவ ராகவும் பொறுப்புவகிக்கிறார்.

Share
FacebookXWhatsAppTelegram