தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சிபிஎம் அலுவலகத்தில் ஆதரவு திரட்டினார்

2 Apr 2026, 3:50 pm
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  இனிகோ இருதயராஜ் சிபிஎம் அலுவலகத்தில் ஆதரவு திரட்டினார்
<p><strong>திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் &nbsp;இனிகோ இருதயராஜ் சிபிஎம் அலுவலகத்தில் ஆதரவு திரட்டினார்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, ஏப். 2- &nbsp;மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டக் குழு அலுவலகமான வெண்மணி இல்லத்திற்கு புதனன்று வந்த இனிகோ இருதயராஜ், தோழர்களை சந்தித்து &ldquo;பாசிசத்திற்கு எதிரான போரில், முன்கள வீரர்களாகவும், ரீல் ஹீரோவை எதிர்த்து ரியல் ஹீரோகளாக்காய் நீங்கள் பணியாற்ற வேண்டும்&rsquo;&rsquo; என வேண்டுகோள் விடுத்து வாழ்த்துக்களை பெற்றார். &nbsp;இந்நிகழ்வில், மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாநில கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் வெற்றிச் செல்வன், திமுக மாநகரச் செயலாளர் மதிவாணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், ரேணுகா, சந்தானம், கார்த்தி மற்றும் பாலக்கரை பகுதி செயலாளர் சுரேஷ், பொன்மலை பகுதி செயலாளர் விஜயேந்திரன், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் கருணாநிதி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, பொருளாளர் மாலதி, தமுஎகச மாவட்டத் தலைவர் ரங்கராஜன், மாவட்டச் செயலாளர் சீத்தா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சேதுபதி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் மோகன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜோன்ஸ், சுப்பிரமணியன், தங்கராஜ், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட வெகுஜன அரங்க தோழர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.