திருச்சி விரைவு செய்திகள்
30 May 2026, 10:13 pm

சென்ட்ரிங் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

நத்தம், மே 30- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே துவராபதி கிரா மத்தை சேர்ந்தவர் முருகன் (58). இவரது மகன் விஜய குமார் (22). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் வெள்ளி யன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நத்தம் போலீசார், இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருவில்லிபுத்தூர் ரயில்வே நிலையத்திற்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுமா? பயணிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

திருவில்லிபுத்தூர், மே 30- திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே நிலையம் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நிலையத்திலிருந்து சென்னை, குருவாயூர், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினமும் 15-க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் பயணிகள் நகரப் பகுதிகளிலிருந்தும் பேருந்து நிலையத்திலிருந்தும் ரயில்வே நிலையத்திற்குச் செல்ல போதுமான பொதுப் போக்குவரத்து வசதி இல்லாததால், அதிக கட்டணம் செலுத்தி ஆட்டோக்களை பயன்படுத்த வேண்டிய நிலை நீடித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு சிற்றுந்து இயக்க அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, திருவில்லி புத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே நிலையம் வழியாக மல்லி, மீனாட்சிபுரம் பகுதிகளுக்குச் சென்று மீண்டும் பேருந்து நிலையம் திரும்பும் வகையில் ஒரு சிற்றுந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், ரயில்வே நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், ஒரு சிற்றுந்து மட்டுமே இயக்கப்படுவது போதுமானதாக இல்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரண மாக, ரயில் வருகை மற்றும் புறப்படும் நேரங்களில் பயணி கள் அதிக கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே பயணிகள் சங்கம் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருவில்லிபுத்தூர் கிளை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனுக்கள் அளித்து வருகிறது. ரயில்கள் வருகை மற்றும் புறப்படும் நேரங்களுக்கு ஏற்ப அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ள நிலையில், தொகு தியின் சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக தலையிட்டு, ரயில் சேவைகளுக்கு இணையாக அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவில்லிபுத்தூர் ரயில்வே நிலையத்திற்கு கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் வங்கி கணக்கில் மோசடி திருவில்லிபுத்தூர்,

மே 30- திருவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி யின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3.75 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவில்லிபுத்தூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சுந்தரராஜன். இவர் மாநில குற்றப்புல னாய்வுத் துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த மே 19-ஆம் தேதி திருவில்லிபுத்தூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த அடையாளம் தெரியாத நபரிடம் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்த உதவி கேட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர், சுந்தரராஜனின் ஏடிஎம் அட்டையை பெற்று இயந்திரத்தில் செலுத்தி, ரகசிய எண் (பின் நம்பர்) கேட்டுள்ளார். அதை தெரிவித்ததைத் தொடர்ந்து பணத்தை எடுத்து வழங்கியதுடன், ஏடிஎம் அட்டையை யும் திருப்பிக் கொடுத்துள்ளார். பின்னர் சுந்தரராஜன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், கடந்த மே 25-ஆம் தேதி மீண்டும் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்துக்கு சென்றபோது, அவர் வைத்திருந்த அட்டை காலாவதியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து தனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது, பலமுறை பணம் எடுக்கப்பட்டு மொத்தம் ரூ.3.75 லட்சம் பணம் கணக்கிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், தன்னிடம் இருந்த ஏடிஎம் அட்டையை ஆய்வு செய்தபோது, அது தனது அட்டை அல்ல என்பதும் தெரிய வந்தது. இதனால், ஏடிஎம் மையத்தில் தனக்கு உதவி செய்த நபரே அட்டையை மாற்றி மோசடியில் ஈடுபட்டிருக்க லாம் என சந்தேகித்த சுந்தரராஜன், திருவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீ சார், வங்கி கணக்கிலிருந்து மோசடியாக எடுக்கப்பட்ட ரூ.3.75 லட்சத்தை மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஏடிஎம் அட்டையை மாற்றி பணத்தை எடுத்துச் சென்ற நபரை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புகையிலை விற்றவர் கைது

தேனி, மே 30- போடியில் புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர். போடி நகர் காவல்துறையினர் போடி பகுதியில் ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்தனர். போடி குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் அருகே நின்றிருந்த காசிமாயன் (59) என்பவரை விசா ரித்ததில் அவர் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

மாற்றுத் திறனாளிகள் உடல் தகனம் செய்ய கட்டணமில்லை

திண்டுக்கல், மே 29- திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திற னாளிகள் உயிரிழந்தால், அவர்களது உடலை மின் மயானங்களில் தகனம் செய்வ தற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப் படாது என மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், மாற்றுத்திறனாளிகள் உயிரிழந்தால் அவர்களது உடலை மின் மயானங்களில் தக னம் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் செ.சரவணன், மாற்றுத் திறனாளிகள் உயிரிழந்தால் அவர்களது உடலை தகனம் செய்வதற்கு கட்டணம் வசூ லிக்கத் தேவையில்லை என்று உத்தரவிட் டுள்ளார். மேலும், இந்தச் சலுகையைப் பெறு வதற்காக மாற்றுத் திறனாளிகளின் அடை யாள அட்டையை சம்பந்தப்பட்ட உள் ளாட்சி அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அமைப்புகளின் பிரதி நிதிகள் வரவேற்றுள்ளனர்.

18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான வாள் பழனி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

பழனி, மே 30- அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சசிகலா மற்றும் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் கூறியதாவது: “இந்த வாள் இரும்பினால் செய்யப் பட்டதாகும். பண்டைய காலங்களில் போருக்குப் பயன்படுத்தப்பட்ட இந்த வாள் தற்போது மிகவும் துருப்பிடித்த நிலையில் காணப்படுகிறது. இதன் எடை 1.110 கிலோ ஆகும். வாளின் நீளம் 77 செ.மீ. மற்றும் நடுப்பகுதியின் அகலம் 3 செ.மீ. அளவில் உள்ளது. வாளின் கைப்பிடி அழகிய வேலைப் பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வாளின் மேற்பகுதி சற்றே வளைந்த நிலையில் காணப்படுவதுடன், ஒருபுறம் மட்டும் வெட்டும் வகையில் கூர்மைப்படுத் தப்பட்டுள்ளது. வாளின் வடிவமைப்பு மற்றும் அமைப் பைக் கொண்டு பார்க்கும்போது, இது கி.பி. 17 அல்லது 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த வாள் கிடைத்த பாப்பம்பட்டி கிராமம், பண்டைய காலத்தில் இரட்டை யம்பாடி பாளையப்பட்டு மற்றும் ஜமீன் ஆட்சிப் பகுதிக்கு உட்பட்டதாக இருந்தது. பின்னர், இரட்டையம்பாடி பகுதி நெய்க்காரபட்டி ஜமீனுடன் இணைக்கப்பட் டது. இந்த வாளுக்கும் இரட்டையம்பாடி பகுதிக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

உலமாக்களுக்கு இருசக்கர வாகன மானியம் திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன் அறிவிப்பு

திண்டுக்கல், மே 30- திண்டுக்கல் மாவட்டத்தில் உலமாக் களுக்கு இருசக்கர வாகனம் வாங்கு வதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் மானி யம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சி யர் செ.சரவணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான மானியத் தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயி ரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை யிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரி யர்கள் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இருசக்கர வாகன மானியம் பெற விரும்புவோர், மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படி வத்தைப் பெற்று, தேவையான ஆவணங்க ளுடன் விண்ணப்பிக்க வேண்டும். அதி காரப்பூர்வ ஒப்புதல் கிடைத்த பின்னரே பய னாளிகள் இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை, உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தகுதியான உலமாக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தெரிவித் துள்ளார்.