திருச்சி தோழர்கள் ஆர்.ராஜா-ஆர்.குமார் குடும்பத்தில் பெரும் துயரம் விபத்தில் மகள் சுகன்யா அகால மரணம்; உடல்நலக் குறைவால் 90 வயது தாயாரும் காலமானார்
12 May 2026, 11:48 pm

திருச்சி தோழர்கள் ஆர்.ராஜா-ஆர்.குமார் குடும்பத்தில் பெரும் துயரம் விபத்தில் மகள் சுகன்யா அகால மரணம்; உடல்நலக் குறைவால் 90 வயது தாயாரும் காலமானார்

திருச்சிராப்பள்ளி, மே 12- திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆர்.ராஜாவின் குடும்பத்தில் அவரது தாயாரும், அவரது சகோதரர் மகளும் அடுத் தடுத்து மரணமடைந்த சம்ப வங்கள், தோழர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி யுள்ளது.

திருவெறும்பூர் ஒன்றியம் பூலாங்குடி காலனியைச் சேர்ந்த தோழர்கள் குமார்-கவிதா தம்பதியரின் மகள் சுகன்யா (21), செவ்வா யன்று காலை தஞ்சாவூரி லிருந்து திருச்சிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாலை விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார். சுகன்யா வுக்கு திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்த நிலையில், இந்த துயர சம்பவம் நேர்ந்து உள்ளது. சுகன்யாவின் தந்தை குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். ராஜாவின் சகோதரர் ஆவார். இவர், திருச்சி பெல் நிறு வன ஊழியரும், பெல் சிஐடியு சங்க நிர்வாகிகளில் ஒருவரும் ஆவார். தாயார் கவிதா அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க திரு வெறும்பூர் ஒன்றியத் தலை வர் ஆவார்.

சுகன்யா மரணமடைந்த துயரில் அக்குடும்பமே கதறி அழுது கொண்டிருந்த நிலை யில், ஏற்கெனவே உடல்நலம் குன்றியிருந்த ஆர்.ராஜா - ஆர்.குமார் ஆகியோரின் தாயார் லட்சுமியம்மாள் (90) செவ்வாயன்று மாலை கால மானார். இது அக்குடும்பத்தி னரையும், தோழர்களையும் மேலும் துயரத்திற்கும் சோகத்திற்கும் உள்ளாக்கி யுள்ளது.

பூலாங்குடி காலனியில் உள்ள இல்லத்தில் உள்ளே பாட்டியின் உடலும், வெளிப் புறம் பேத்தியின் உடலும் அஞ்சலிக்கு வைக்கப்பட் டிருந்தது, அப்பகுதி முழு வதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஸ்ரீதர், எம்.ஜெயசீலன், மாநகர் மாவட்டச் செயலா ளர் கோவி.வெற்றிச்செல்வன், புறநகர் மாவட்டச் செயலா ளர் எம்.சிவராஜ், தீக்கதிர் பொது மேலாளர் ஜெயபால் உட்பட கட்சியின் தலை வர்கள், சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் தலை வர்கள், தோழர்கள் என ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.