திருச்சி விரைவு செய்திகள்
27 May 2026, 9:10 pm

குரூப்-1 தேர்வு: இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

அரியலூர், மே 27 - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தால் அறிவிக்கப்பட உள்ள குரூப்-1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு கள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டும் மைய அலுவல கத்தில் புதன்கிழமை (மே 27) காலை 10 மணி முதல் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படு கிறது. பாடக்குறிப்புகள் மற்றும் மாநில அளவி லான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப் பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விவ ரங்களுக்கு, அரியலூரி லுள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தொலைபேசி 9499055914 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம் என ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்து உள்ளார்.

அதிக தொகையா? வாரச் சந்தை ஏலம் ஒத்திவைப்பு

அரியலூர், மே 27 - உடையார்பா ளையத் தில் அரசு நிர்ணயித்த ஏலத் தொகைக்கு அதிக மாக ஏலம் கேட்டதால் வாரச் சந்தை ஏலத்தை அதிகாரிகள் தேதி குறிப் பிடாமல் ஒத்தி வைத்த னர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச் சந்தை கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த வாரச் சந்தைக்கான ஏலம் புதனன்று நடைபெற்றது. ஏலத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் என பலரும் ஏலத் தொகையை கட்டி ஏலத் தில் கலந்து கொண்டனர். ரூ.40 லட்சத்தில் தொ டங்கிய ஏலத்தொகை கடும் போட்டியின் காரண மாக ரூ.70 லட்சம் வரை அதிகரித்தது. இந்நிலை யில் அரசின் ஏலத் தொ கையான ரூ.60 லட்சத்தை தாண்டி ரூ.70 லட்சம் வரை அதிகரித்ததால் ஏலத்தை தற்காலிகமாக தேதி அறிவிக்காமல் அதிகாரிகள் ஒத்தி வைத்தனர். இதுகுறித்து அரசுக்கு முறையாக தெரிவித்து ஏலத் தொகை யின் உச்சவரம்பை அதி கரித்து, மீண்டும் ஏலம் விடப்படும் என தெரிவித் தனர்.

மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது

அரியலூர், மே 27 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சம்போடை கிரா மத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் (56), என்பவர் அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண் டிருந்த 26 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். மேலும் வீட்டில் தனியாக இருந்த இப்பெண்ணை, அடித்து துன்புறுத்தி அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (46) என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி காவல் துறை யினர் வழக்குப் பதிந்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு ஆயுள் சிறை

புதுக்கோட்டை, மே 27 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை துவார் அரு கிலுள்ள ஆண்டிக்குளப்பம்பட்டியைச் சேர்ந்தவர் மூக்கையா மகன் மாரிமுத்து (49). தையல்காரரான இவர், கடந்த 2023 பிப்ரவரி மாதம் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கருவுற்று, 6 மாதத் தில் இறந்த நிலையில் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசா ரால் போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட் டார். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி கனகராஜ், செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் ஆயுள் சிறைத் தண்ட னையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், அடைத்து வைத்த குற்றத் துக்காக ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும், மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப் பட்டது. சிறைத் தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் அனு பவிக்கலாம் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 7 லட்சம் நிவாரண உதவி யாக வழங்கிடவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி யும் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார் என்ற போதிலும், குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து திருடு போகும் பம்ப்செட் மின் கம்பிகள் விவசாயிகள் அவதி

தஞ்சாவூர், மே 27 - தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே விளைநிலங்களில் உள்ள, விவசாய பம்ப்செட்களி லிருந்து விலை உயர்ந்த மின் கம்பிகள் திருட்டு போவ தால், விவசாயிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். திருவையாறு அருகே பெரமூர் ஊராட்சிக்கு உள்பட்ட எட்டரை வேலி கிராமத்தில் விளைநிலங்களி லுள்ள விவசாய பம்ப்செட் களில் விலை உயர்ந்த மின் கம்பிகள் நீண்ட காலமாக திருடு போகும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மே 24 அன்று இரவு முதல் 25 ஆம் தேதி அதிகாலை வரை எட்டரை வேலி கிராமத்தைச் சேர்ந்த சி.திருநாவுக்கரசு, ரெ.பரமசிவம், கோ.முரு கானந்தம், இரா.அன்பரசன், நா.ராஜசேகர், பி.தர்மராஜ், கோ.தினேஷ், த.சௌந்தர், வெ.மூர்த்தி ஆகியோரின் வயல்களிலுள்ள 11 விவ சாய மோட்டார் பம்ப்செட் களில் இருந்த விலை உயர்ந்த மின் கம்பிகள் திரு டப்பட்டன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்தத் திருட்டு சம்பவங்கள் 2 ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன. இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு வரை கடந்த மார்ச் மாதம் பிடித்து திருவையாறு காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தோம். என்றாலும், விலை உயர்ந்த மின் கம்பி களைத் திருடுவது தொ டர்ந்து நடக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கடு மையான நடவடிக்கையைக் காவல் துறையினர் மேற் கொள்ள வேண்டும் என்றனர் விவசாயிகள்.

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அரியலூர்/பெரம்பலூர், மே 27 - அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மே 29 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தின சாமி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மே 29 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத் தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட் கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் பற்றிய முறை யீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

377 கிலோ குட்கா கடத்தல்: 4 பேர் கைது

அரியலூர் மே 27 - அரியலூர் மாவட்டம் அரியலூர் - கல்லங்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள குறைதீர்க்கும் குமரன் கோவில் அருகே சந்தேகத்து இடமாக நின்று கொண்டி ருந்த நபர்களை, அவ்வழியே ரோந்து பணியில் இருந்த கயர்லாபாத் காவல் உதவி ஆய்வாளர் தனஞ்செயன் தலை மையிலான காவல்துறையினர் விசாரணை செய்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப் பின்னாக பதில் அளித்ததை தொடர்ந்து அவர்களின் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 38 மூட்டை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதை கண்ட றிந்தனர். காவல்துறையினர் அந்த நான்கு பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் நால்வரும் அரியலூர் அருகிலுள்ள அயனாத்தூர் கிளிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி (51), ராயபுரம் பட்ட காட்டான் குறிச்சி சுதாகர் (38), சேலம் லயன்மேடு பிரகாஷ் (29), சேலம் செவ்வாபேட்டை ரவிக்குமார் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் போலீ சார் கைது செய்து, அவர்களிடமிருந்து 377 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து குட்கா பொருட் களை கடத்தி வர பயன்படுத்திய நான்கு சக்கர வாக னமும் பறிமுதல் செய்யப்பட்டது.

வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு: மூவர் மீது வழக்குப் பதிவு

தஞ்சாவூர், மே 27 - தஞ்சாவூரை அடுத்துள்ள சானூரப்பட்டியைச் சேர்ந்த வர்கள் குகன் (21) மற்றும் தமிழ்வளவன் (22). இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குகன் மற்றும் தமிழ்வளவன் ஆகிய இருவரும் வல்லத்தில் நடைபெற்ற சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்துள்ளனர். இரு வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஸ்கூட்டரில் வல்லம் - திருச்சி சாலையில் கடைத்தெரு அருகே சென்ற போது அவர்கள் சென்ற ஸ்கூட்டரை வழிமறித்தவாறு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்துள்ளனர். இதனை குகன் மற்றும் தமிழ்வளவன் இருவரும் சேர்ந்து தட்டி கேட்டுள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடை யாளம் தெரியாத மூன்று நபர்களும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவர்களிடம் இருந்த அரிவாளால் குகன், தமிழ்வளவனை தலையில் வெட்டி விட்டு தப்பி விட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்து றையினர் படுகாயமடைந்த குகன் மற்றும் தமிழ்வளவன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகா ரின் பேரில் வல்லம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மாணவியை தற்கொலை: மாணவர் கைது

தஞ்சாவூர், மே 27 - தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்கா வேரி தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குலோத் துங்கன் என்பவரின் மகன் கவின் (22). இவர் தஞ்சா வூர் மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு டிப்ளமோ படிப்பு படித்து வருகிறார். இவரும், இதே கல்லூரியில் 4 ஆம் ஆண்டு தீவிர சிகிச்சை செவிலியர் படிப்பில் படித்து வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான மாணவியும் காத லித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், மாணவி தனது காதலைக் கைவிட்டு விடுவ தாக கவினிடம் கூறினார். இதையடுத்து, இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதையடுத்து மாணவியை கவின் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட கவின் நாம் காதலிக்கும்போது இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தைச் சமூக வலைதளத்தில் வெளி யிட்டு விடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, மருத்துவக்கல்லூரிக்கு அருகே பூக்கொல்லையில் தான் தங்கியிருந்த தனியார் விடுதியில் செவ்வாய்க்கிழமை காலை விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலை யில் இருந்த மாணவி மீட்கப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் வழக்குப் பதிந்து கவினை கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்தவர் கைது

அரியலூர், மே 27 - அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (20). கடந்த 2024 ஆம் ஆண்டு மூதாட்டி ஆதாய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, செந்துறை காவல் துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், பிணையில் வெளியே வந்த சரஸ்வதி, அதன்பிறகு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். நீதி மன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, செந்துறை போலீசார், சரஸ்வதியை சென்னையில் கைது செய்தனர்.

வெள்ளாற்றில் சேமிப்பிலுள்ள மணலை வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்க கோரிக்கை

அரியலூர், மே 27 - அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூர் அருகேயுள்ள வெள்ளாற்றில் சேமிப்பிலுள்ள மணலை, வீடு கட்டும் பயனாளிகளுக்கும், மாட்டு வண்டிதார்களுக்கும் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆட்சியர் பொ.ரத்தினசாமியிடம் மனு அளித்தனர். அப்பகுதி மாட்டு வண்டி உரிமையாளர்கள் அளித்த மனுவில், “வெள்ளாற்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணல் குவாரி இயங்கி வந்தது. அப்போது சுமார் 1,500 டன் மணல் சேமித்து வைக்கப்பட்டது. அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதாக வந்த புகாரையடுத்து, ஒன்றிய அரசின் அமலாக்கத் துறையினர் குவாரியை ஆய்வு செய்ததையடுத்து, குவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல் தனியார் இடத்தில் இருப்பதாக கூறி அதை காலி செய்ய வேண்டும் என முள்ளுக்குறிச்சி சேர்ந்த சுரேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தை அணுகியதாகவும், அதன் அடிப்படையில் அந்த மணலை அப்புறப்படுத்தக் கூடிய சூழல் மாவட்ட நிர்வாகத்துக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அப்புறப்படுத்தப்படவுள்ள மணலை, அரசு சார்பில் கட்டி கொடுக்கப்படும் வீடு கட்டும் பயனாளிகளுக்கும், மாட்டு வண்டிதாரர்களுக்கும் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.8.73 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பெரம்பலூர், மே 26 - பெரம்பலூர் அருகே இனாம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் மனைவி மஞ்சு (21). இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பேஸ்புக் விளம்பரத்தில் ஏர்போர்ட்டில் வேலை உள்ளதாக வந்த விளம்பரத்தை நம்பி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து தனது விவரங்களை பதிவிட்டு உள்ளார். பின்னர் மஞ்சுவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட 2 பேர் ஏர்போர்ட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய மஞ்சு ரூ.8 லட்சத்து 73 ஆயிரத்து 759-ஐ பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் அனுப்பியுள்ளார். ஆனால் ஓராண்டுக்கு மேல் ஆகியும் மஞ்சுக்கு வேலை தொடர்பாக எந்த தகவலும் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பணம் பெற்ற 2 பேரை யும் செல்போனில் தொடர்பு கொள்ள முடிய வில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மஞ்சு கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் செல்வ குமாரி, எஸ்ஐ மனோஜ் ஆகியோர் தலைமை யில் தனிப்படைகள் அமைத்து குற்றவாளி களை தேடிவந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த குற்றச் செயலில் உத்தரப்பிரதேச மாநிலம், பாட்னாவில் உள்ள லோனி தகித் என்ற பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் (30), சகுர்பூர் பகுதியைச் சேர்ந்த அமன் (23) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. போலீ சார் உத்தரப்பிரதேசம் சென்று குற்றவாளி களை கைது செய்து அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து 2 செல்போன், 2 சிம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் குற்றவாளிகளை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, மே 27- 2025-26 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பட்டப்படிப்பு வரைபயிலும் முன்னாள் படைவீரர்கள் மற்றும கைம்பெண்களின் குழந்தைகளுக்கு மத்திய முப்படை வீரர் வாரியத் தால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப் பங்கள் முன்னாள் படைவீரர்கள், கைம்பெண்கள் 30.11.2026 வரை www.ksb.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு புதுக் கோட்டை மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தினை அணுக லாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்து உள்ளார்.

ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், மே 27 - பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க ஜூலை 30 இறுதிநாள் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தை கள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், அசாதாரண துணிச்சலான செயல்கள் மற்றும் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல்-தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வசிக்கும் 5 முதல் 18 வயதிற்குட்பட்ட இந்தியக் குடிமகன் எவர் வேண்டுமானாலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள குழந்தைகள், பெற்றோர், ஆசிரி யர்கள் அல்லது அலுவலர்கள் https://awards.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப் பிக்கவோ, பரிந்துரைக்கவோ முடியும். 2026ஆம் ஆண் டிற்கான விருதுக்கு விண்ணப்பிக்க 30.07.2026 இறுதி நாளாகும் எனத் தெரிவித்துள்ளார்.