சிறப்பு உட்கூறு நிதியை ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பயன்படுத்த வேண்டும்வி.தொ.ச. திருச்சி புறநகர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
9 Aug 2026, 11:06 pm

சிறப்பு உட்கூறு நிதியை ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பயன்படுத்த வேண்டும்வி.தொ.ச. திருச்சி புறநகர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஆக. 9- அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்ட 11 ஆவது மாநாடு புள்ளம்பாடியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக சனிக்கிழமை மாலை புள்ளம்பாடி காமராஜர் சிலை அருகில் இருந்து பேரணியை சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன் துவங்கி வைத்தார். பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று தோழர் கல்லக்குடி கந்தசாமி, தாப்பாய் டி. கே.தங்கராசு நினைவு திடலில் நிறைவடைந்தது.

பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு, மாநிலக்குழு உறுப்பினர் எஸ். சந்திரன் தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு செயலாளர் டி.ரஜினிகாந்த் வரவேற்றார். இக்கூட்டத்தில் அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர் சிறப்புரையாற்றினார்.

சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.சிவராஜன், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் அ.பழனிசாமி, மாநில துணைத் தலைவர் பி.வசந்தாமணி, மாவட்டச் செயலாளர் ஜெ. சுப்ரமணியன், மாவட்டத் தலைவர் எஸ். தெய்வநீதி, மாவட்டப் பொருளாளர் எம்.கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் எம்.வீரவிஜயன், மாவட்ட துணைச்செயலாளர்கள் இரா.முத்துக்குமார், ஆர்.செல்வம், ஒன்றியத் தலைவர் சி.குமார், ஒன்றியச் செயலாளர் எஸ். அந்தோணிசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. மல்லிகா ஆகியோர் பேசினர். வரவேற்புகுழு பொருளாளர் எல். அருமைதாஸ் நன்றி கூறினார்.

மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எஸ்.தெய்வநீதி தலைமை தாங்கினார். மூத்த தலைவர் கே.எஸ். லூர்துசாமி மாநாட்டு கொடியை ஏற்றினார். வரவேற்புகுழு தலைவர் எம். அடைக்கலராஜ் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் எம். வீரவிஜயன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.

அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர் துவக்கவுரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் ஜெ. சுப்பிரமணியன் கள செயல்பாடும், அமைப்பு நிலை குறித்தும், மாவட்டப் பொருளாளர் எம். கண்ணன் நிதி நிலை அறிக்கையும் சமர்ப்பித்தனர்.

விவசாய தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் பொது மயானம் அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு உட்கூறு நிதியை மடைமாற்றம் செய்யாமல் உரிய திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. இதில் மாவட்டத் தலைவராக எஸ்.சந்திரன், மாவட்டச் செயலாளராக எஸ். தெய்வநீதி, மாவட்டப் பொருளாளராக எம்.கண்ணன் உள்பட 30 பேர் கொண்ட மாவட்டக் குழு நிர்வாகிகள் மற்றும் மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலப் பொருளாளர் அ. பழனிசாமி புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றினார்.

முன்னதாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார் 126 உழவன் உரிமை சந்தாவிற்கான தொகை ரூ.30,240-ஐ அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசரிடம் வழங்கினார். ஒன்றிய செயலாளர் எஸ்.அந்தோணிசாமி நன்றி கூறினார்.