தோழர் உ.நிர்மலா ராணி மறைவுக்கு அஞ்சலி
21 Mar 2026, 2:42 pm
<p><strong>தோழர் உ.நிர்மலா ராணி மறைவுக்கு அஞ்சலி</strong></p>
<p>கோவை, மார்ச் 21- மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் உ.நிர்மலா ராணி மறைவிற்கு, கோவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினரும், வழக்கறி ஞருமான உ.நிர்மலா ராணி கடந்த மார்ச் 17 தேதியன்று உடல் நலக்குறைவால் காலமா னார். அவரது மறைவிற்கு மாதர் சங்க கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் புக ழஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.உஷா தலைமை வகித்தார். இந்நிகழ்வில் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் டி.சுதா, மாநிலக் குழு உறுப்பினர் ராஜலட்சுமி, மாவட்டப் பொருளாளர் கே.தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
