தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அஞ்சலி : வசந்தா சியாமளம் உற்சாகத் துடிப்புகளின் ஓசை அடங்கிவிடுவதில்லை!

3 Jan 2026, 2:20 pm
அஞ்சலி : வசந்தா சியாமளம்  உற்சாகத் துடிப்புகளின் ஓசை அடங்கிவிடுவதில்லை!
<p><strong>அஞ்சலி : வசந்தா சியாமளம் &nbsp;உற்சாகத் துடிப்புகளின் ஓசை அடங்கிவிடுவதில்லை!</strong></p> <p>அன்பினும் அன்பான, மதிப்பிற்குரிய எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளர் முத்து மீனாட்சி என்ற வசந்தா சியாமளம் மறைந்துவிட்டார். &nbsp;எட்டாம் வகுப்பிலேயே பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்ட குடும்பச் சூழல்; அடுத்த நாள் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை வீட்டு வாசலில் நின்று பார்க்கையில் கலங்கிய அவரது கண்கள்; அதைக் கண்டு மனம் மாறிப் பெற்றோர்கள் மீண்டும் அவரைப் படிப்பைத் தொடர வைத்த பின்னணி - இவையே பிற் காலத்தில் ஓர் ஆசிரியை, எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் என அவர் பல சிகரங்களைத் தொடத் தூண்டுகோலாக அமைந்தன. உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 83-ஆவது வயதில், கடந்த வெள்ளிக் கிழமை (2026 ஜனவரி 2) அன்று அவர் இயற்கை எய்தினார். நாக்பூர் முதல் தமிழ்நாடு வரை 1942-இல் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் பிறந்த அவர், தந்தை யின் பணியிடமான நாக்பூரில் (மகாராஷ்டிரா) வளர்ந்தவர். இதனால் இந்தி மொழியைத் தனது தாய்மொழி போலவே சரளமாகப் பேசவும் எழுதவும் அறிந்திருந்தார். பி.எட். முடித்துவிட்டு அங்கேயே அரசுப் பள்ளி ஆசிரியையானார். தனது 19-ஆவது வயதில் நெல்லை மாவட் டத்தைச் சேர்ந்த &lsquo;காஸ்யபன்&rsquo; என்று அழைக் கப்படும் எழுத்தாளர் சியாமளத்தைத் திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார். &ldquo;எங்கள் திருமணம் வசந்தா பிறந்த அன்றே தீர்மானமானது; இது எங்களுக்கே பிற்காலத்தில் தெரிந்த சுவாரசியமான கதை&rdquo; என்பார் காஸ்யபன் . தன்னுடைய இணையரை அறிமுகப் படுத்தும் காஸ்யபனின் பாங்கு அசாத்திய மானது. மொழிபெயர்ப்புப் பணிகளை அவர் அப்படிக் கொண்டாடுவார். உள்ளபடியே, காஸ்யபனை அவரது எழுத்தின் வழியாகத்தான் நான் கண்டடைந்தேன். &lsquo;வண்ணக்கதிர்&rsquo; இதழில் வெளியான அவரது கட்டுரை ஒன்றை வாசித்துவிட்டு, அவரைச் சந்திக்கத் துடித்துக் கொண்டிருந்தேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) தென் சென்னை மாவட்ட மாநாட்டிற்கு வந்திருந்த அவரை நேரில் சந்தித்து அறிமுகம் செய்துகொண்ட அந்தத் தருணம் மறக்க முடியாதது. மொழிபெயர்ப்பின் வழியாக &nbsp;ஒரு பண்பாட்டுப் பாலம் தமுஎகச-வின் தொடக்க காலச் செயல்பாட் டாளராகவும், &lsquo;செம்மலர்&rsquo; மற்றும் &lsquo;தீக்கதிர்&rsquo; ஆசிரியர் குழு உறுப்பினராகவும், ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க முன்னணியாளராகவும் இயங்கிய சியாமளம், மார்க்சிய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். வசந்தாவை முற்போக்கு இலக்கிய வாசிப்புக்கும், மேற்படிப்புக்கும் ஊக்கப்படுத்தியவர் அவரே. மதுரையில் ஆசிரியையாகப் பணியாற்றிய வசந்தா, தமிழ் இலக்கியங்களை இந்தி மொழிக்குக் கொண்டு செல்ல விரும்பினார். &ldquo;வெவ்வேறு மொழி மற்றும் மாநில மக்களுக்கு இடையிலான பண்பாட்டுப் பரிமாற்றத்திற்கு வாசிப்பு ஒரு பாலமாக அமையும்&rdquo; என்று அவர் நம்பினார். மார்க்சிய இயக்கத் தலைவர்கள் விமலா ரணதிவே, அகல்யா ரங்கனேகர் மதுரைக்கு வந்தபோது, அவர்களுக்கு இந்தி மொழிபெயர்ப்பாளராகவும் வழிகாட்டியாகவும் சென்ற அனுபவமே இந்த எண்ணத்திற்கு அடித் தளமிட்டது. புனைபெயர்களும் படைப்புகளும் முதலில் &lsquo;வசந்தா சியாமளம்&rsquo; என்ற பெய ரில் எழுதியவர், பின்னர் தனது பாட்டியின் பெய ரான &lsquo;முத்துமீனாட்சி&rsquo; என்ற புனைபெயரில் தீவிரமாக மொழிபெயர்த்தார். சியாமளத்தின் பணி நிறைவுக்குப் பிறகு இருவரும் நாக்பூ ருக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு தனது அறுபது வயதிற்கு மேல் சமஸ்கிருத மொழியை முறை யாகக் கற்றுக்கொண்டு, தமிழ்க் கதைகளைச் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். &lsquo;ஜெகதா&rsquo; என்ற புனைபெயரில் அவர் வெளி யிட்ட சமஸ்கிருதத் தொகுப்பிற்கு ஓர் இஸ்லாமிய அறிஞர் முன்னுரை எழுதியதைப் பெருமை யுடன் குறிப்பிடுவார். அவரது சாதனைகளில் தலையாயது, ராகுல சாங்கிருத்தியாயனின் புகழ்பெற்ற &lsquo;வால்காவிலிருந்து கங்கை வரை&rsquo; நூலை அதன் மூல மொழியான இந்தியிலிருந்து நேரடியா கத் தமிழுக்கு மொழிபெயர்த்தது. மேலும், சாகித்ய அகாடமி விருது பெற்ற பஞ்சாபி நாவலை &lsquo;நரபட்சணி&rsquo; என்ற பெயரில் மொழி பெயர்த்தார். 1857 புரட்சியின் நாயகன் அஜி முல்லாகான் குறித்த புத்தகம் உள்ளிட்ட பல படைப்புகளைத் தமிழுக்குத் தந்துள்ளார். விருதுகளும் அங்கீகாரமும் மொழிபெயர்ப்புப் பணிக்காக &lsquo;நல்லி திசை யெட்டும்&rsquo; விருது, தமிழ்நாடு அரசின் &lsquo;சிறந்த மொழிபெயர்ப்பாளர்&rsquo; விருது மற்றும் ஷப்னா &nbsp;ஆஸ்மி பவுண்டேஷன் வழங்கிய &lsquo;சிறந்த பெண்மணி&rsquo; விருது உள்ளிட்ட பல சிறப்புக ளைப் பெற்றவர் வசந்தா. எழுபது வயதைக் கடந்த நிலையிலும் அவர் கார் ஓட்டக் கற்றுக்கொண்ட செய்தியை, புகைப்படங்களுடன் நாளிதழ்களில் வரச்செய்து மகிழ்ந்தார் காஸ்யபன். அத்தனை அன்பான இல்லறம் அது. &nbsp;நிலையான இடம் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மகனைப் பறிகொடுத்த சோகம் காஸ்யப னைப் பெரிதும் பாதித்தது. அடுத்த சில மாதங்க ளிலேயே அவரும் மறைந்தார். இந்த இரட்டை இழப்பிலிருந்து மீளத் தவித்த வசந்தா, தனது மருமகள் மற்றும் மகள் ஹன்சாவின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். இப்போது அவரும் மறைந்துவிட்டாலும், தமிழ் இலக்கிய உலகில் ஒரு முக்கியமான மொழி பெயர்ப்பாளராகத் தனது படைப்புகளின் வழி அவர் என்றும் நிலைத்திருப்பார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.