தேனி மாவட்டத்தில் வெண்மணி தியாகிகளுக்கு நினைவஞ்சலி
26 Dec 2025, 4:32 pm
<p><strong>தேனி மாவட்டத்தில் வெண்மணி தியாகிகளுக்கு நினைவஞ்சலி </strong></p>
<p>தேனி, டிச.26- தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெண்மணி தியாகிக ளுக்கு நினைவஞ்சலி செலுத்தப் பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போடியில் வெண்மணி தினம் அனுஷ்டிக்கப்பட்டது. போடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் எல் .ஆர் .சங்கரசுப்பு தலை மை வைத்தார் .விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே. ராஜப் பன்,வெண்மணி தியாகிகளை நினைவு கூர்ந்து பேசினார். நிகழ்ச்சி யில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டி. கண்ணன், மாவட்ட தலைவர் எஸ்.கே .பாண்டியன், சிபிஎம் தாலுகா செயலாளர் சி.முனீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். கம்பம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட செயலா ளர் ஏ. வி .அண்ணாமலை ,விவசாய சங்க செயலாளர் கர்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கூடலூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற அஞ்சலி கூட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏரியா செயலா ளர் பி.ஜெயராஜ் ,விவசாயிகள் சங்க ஏரியா தலைவர் மொக்கை பாண்டி ,விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
