கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனுக்கு புகழஞ்சலி
4 Feb 2026, 3:49 pm

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலனுக்கு புகழஞ்சலி

மருத்துவமனைக்கு உடல் தானம்

சென்னை, பிப். 4 - கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் செவ்வாயன்று (பிப்.3) நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 95. தமிழகத்தின் முதுபெரும் கல்வியாளர், முற்போக்கு சிந்தனையாளரான எஸ்.எஸ். ராஜகோபாலன், இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டங்களுக்கு உத்வேகமூட்டி வழிகாட்டியவர். கல்வியில் முற்போக்கான மாற்றங் களை செய்யவும், தாய்மொழியுடன் கூடிய அரு கமைப்பள்ளி அமைய அயராது குரல் கொடுத்து வந்தவர். முதுமையின் காரணமாக கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் காலமானார். அன்னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர் எஸ்.வி. வேணுகோபாலன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, மருத்துவர் பி.வி. பக்தவச்சலம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் இரங்கல்! “மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபா லன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆசிரியராக தமது கல்விப் பணி யைத் தொடங்கிய முனைவர் எஸ்.எஸ். ராஜகோ பாலன்தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் உறுப்பினராக இருந்து தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்” என்று முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார். சிபிஎம் இரங்கல் ஏற்றத்தாழ்வு மிக்க சமூக அமைப்பு மேம்ப டுவதற்காக கல்வித்துறையில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்தவர் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டி யுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் மாண வர்களின் ஆராய்ச்சிக்காக தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் மறை வுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், இந்திய மாண வர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். மிருதுளா, செயலாளர் சம்சீர் அகமது உள்ளிட்டு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.